முடிவின்றி தர்க்க ஒழுங்கற்று கவியும் மொழிதலும் முரண்பாடுகளும் ‘நவீன கவிதை காலாவதியாகி விட்டது’ பிரதியை முன்வைத்துஎன் சித்தன்

தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமாகும் ‘நவீன கவிதையானது வசன கவிதை, புதுக்கவிதை, நிகழ்கவிதை, நவீனம் தாண்டிய கவிதை எனத் தன் நகர்வை நகர்த்தியுள்ளது. தமிழ் இலக்கியச் சு+ழலில் பல்வேறு வாழ்க்கை நிலைகள், பண்பாட்டுப் பின்னணிகளிலிருந்து எழுதப்பட்ட நவீனகவிதைகள் மெய்ப்படமுடியாத மொழிகளின் வாயிலாக பெரும் உடைப்பைச் சாத்தியப்படுத்தியுள்ளன. வட்டார வழக்குகளும் புகலிட அனுபவங்களும், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைமுறைகளும், பெண்நிலைவாதம் சார்ந்த கோட்பாட்டு இருப்பு நிலைகளும், பிரத்தியேக புனைவு மொழிகலந்த சொல்லாடல்களும் நவீன கவிதையைச் செழுமைப்படுத்தியே வந்துள்ளன. 
பின் நவீனத்துவ, பின்னை காலனியப் பார;வைகள் பண்பாட்டின் நுண் அடுக்குகளுக்குள் மையம் கொண்டிருந்த நவீன கவிதையை நகர்த்தி அதனைப் பொது வெளிக்கு கொண்டு சென்றிருக்கின்றன. கவிதையில் மக்களின் வாழ்க்கைமுறை, மொழியின் இடம், கவிதைக் கோட்பாடுகள் குறித்தும் பிரதி - ஆசிரியன் - வாசகன் இவற்றுக்கிடையான உறவு குறித்தும் விவாதங்கள் தொடரும் நிலையில் மாலன், பழமலய், பிரேம்-ரமே‘; முதலானோரால் ‘நவீன கவிதை காலவதியாகிவிட்டது’ என்னும் கருத்துநிலை குறித்த ஆய்வுகள் தொடர்ந்தும் முன்வைக்கபட்டும் விவாதிக்கப்பட்டும் வந்தன. இதன் தொடர்ச்சியாக மாற்றுப்பிரதி இணைய தளத்தில் 2014.3.25 அன்று எழுதப்பட்ட றியாஸ் குரானாவின் “நவீன கவிதை காலமாகிவிட்டது” கட்டுரை ஒருவருடம் காலச் சூழலில் வாசகர் மனதில் எவ்வித கவனத்தையும் சலனத்தையும் ஏற்படுத்தாத நிலையில் 2015ஆம் ஆண்டு வெளிவந்த ‘மறுகா’ இதழ் அதனை அச்சு ஊடாகவெளிக்கு கொண்டு வந்தது. தர்க்க ஒழுங்கற்று தகவல் பிழைகளுடன் வெளிவந்த இக்கட்டுரை மிகைவாதக் கற்பிதங்களுடன் இலக்கியத்தை மொழியியல் பிரதியாக காண விளைந்ததன் விளைவே ஆகும். கவிதையை மொழிக்குறிகளின் புனைவின் தொகுப்பாக காண விழைந்த றியாஸ் குரானா மையமற்ற மொழி விளையாட்டுகளின் வாயிலாக நிகழும் கவிதைககன மொழிதல்களை, தகர்வை அர்த்தப்படுத்தும் நுண்ணிய சொல்லாடல் கொண்டே நிகழ்த்துகிறார். மாற்று வாசிப்பின் விளைவாக வரலாற்று பிரக்ஞையற்று எழுதப்பட்ட இக்கட்டுரை கவிதையின் பொருண்மை, பருண்மை சார்ந்த நிகழ் மாற்ற வெளிகளைக் கவனத்தில் கொள்ளாது மொழிக்குறியின் வாயிலாகவே கவிதையை அணுகுகிறது. கவிதையின் குறி, குறிப்பான், குறிப்பீடு முதலான சிந்தனைகளை உள்வாங்க முடியாத றியாஸ் போன்றவர்கள் மொழிக்குறியை குறிப்பீடற்ற குறியாகக் காண விளைகிறார்கள். அதாவது வடிவத்துடன் தொடர்புடைய ஒன்றான கவிதையை மொழியிலான எழுத்து வடிவாகக் காண விளைகின்றனர். ஆங்கில இலக்கிய விமர்சகரான ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போன்ற விமர்சகர்களால் அர்த்தமற்ற அர்த்தத்தின் அர்த்தமாக குறியைக் காணும் இத்தகைய கோட்பாட்டுவாதம் கண்டிக்கப்பட்டது. தமிழ் இலக்கிய விமர்சன சூழலில் கல்வித்துறை சார்ந்தவர்களாலும் கல்வித்துறை சாராதவர்களாலும் புhpந்தும் புhpயாமலும் இக்கோட்பாட்டுவாதத்தின் அடிப்படையில் பிரதியை அணுகுவது இலக்கியத்துக்கு நற்சமிக்ஞையாக அமையாது என்பது வெளிப்படை.

‘நவீன கவிதை காலாவதியாகிவிட்டது’ எனத் தலைப்பிட்டு ஆய்வைத் தொடங்கும் றியாஸ் கட்டுரை தொடங்கி அடுத்த பந்தியில் தன் தலைப்புக்க முரணாக “தமிழில் பிhpக்க முடியாத முக்கிய அம்சமாக நவீன கவிதை தன்னை நிலை நிறுத்தி விட்டிருக்கிற நிலையில் இந்தக்கூற்றை விபாpக்க முற்படும் போது எதிர் நோக்க வேண்டி வரும் பல வகையான சிக்கல்களை எதிர்பார்த்தபடியே வினையாற்ற விரும்புகிறேன்” என்பார். தமிழில் பிரிக்க முடியாததாகவும் முக்கியமானதாகவும் தன்னை நிலை நிறுத்தி விட்டிருக்கிற கவிதை எவ்வாறு காலாவதியாகும். நிலைப்படுத்தப்படல் காலாவதியாதல் என்னும் முரண்நிலை அர்த்தப் பிறழ்வுடன் முனைப்பு பெறும் றியாஸின் விவாதம் நகைப்புக்குhpயது. ‘நவீன தமிழ்க் கவிதை காலாவதியாகிவிட்டது’ என்னும் கருத்து நிலை விவாதத்தின் தொடக்கப் புள்ளியிலேயே நவீன தமிழ்க் கவிதை பிரிக்க முடியாதது, முக்கியமானது, நிலைநிறுத்தப்பட்டது என்னும் மூன்று தரவுச்சுட்டிகளுடன் அடையாளப்படுத்தப்படுவது அபத்தத்தின் அபத்தமாகும்.

இக்கட்டுரையாசிhpயர் நவீனம் குறித்தான எண்ணக்கருவைத் தவிர்த்து தமிழ்க்விதையின் பொருண்மை மையத் தகர்ப்பினூடாக விவாதத்தை முன்னெடுத்துச் செல்கிறார். இது கட்டுரைத் தலைப்பின் மையத் தண்டைச் சிதைத்து செல்லும் ஆபத்தான போக்காகும். தெளிந்த கருத்து நிலையில்லாத சிந்தனையின் வெளிப்பாடே இதுவெனலாம். நவீனம் என்னும் சொல் புதியது, புதுமை, மறுமலர்ச்சி என்னும் பொருண்மையில் கட்டமைகிறது. நவீனம் என்னும் சொல்லை க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மைகளையும் கொண்டமைவது” என வரையறுக்கும். எனவே நவீனம் என்றால் வழிவழி வந்த மரபிலிருந்து மாறுபட்டு புதுமையைச் சார்ந்து நிற்றல் அல்லது புதுமையை நாடிச் செல்லல் எனப் பிறிதொரு வகையில் பொருள் கொள்ளலாம். அவ்வகையில் காலத்துக்குக் காலம் புதுமையை நாடி நிற்கும் நவீன கவிதை “அனைத்தையும் முற்று முழுதாகக் கவிழ்த்து கொட்டி விட்டது” என எவ்வித எடுகோலுமின்றி றியாஸ் கூறுவது தவறாகும். வசன கவிதை, லகு கவிதை, புதுக்கவிதை, சுயேட்சா கவிதை, நவீன கவிதை, நவீனத்துவகவிதை என வெவ்வேறு தளத்தில் உருவம், உள்ளடக்கம், உணர்த்தும் முறைமை சார்ந்து தமிழ்க் கவிதை வளர்ச்சி அடைந்து வந்துள்ள நிலையில் அது எவ்வாறு காலாவதியாகும். அல்லது அதனை எவ்வாறு காலாவதியாக்க முடியும்.

சிறுகதை, நாவல்களைப் போலவே நவீன கவிதையும் தனது உள்ளடக்கங்களையும் பேசுபொருட்களையும் அதன் எடுத்துரைப்பு முறைகளையும் காலத்துக்கு காலம் மாற்றி வந்துள்ளது. குறிப்பாக ஈழத்தில் சரவணமுத்துப் புலவாpடம் காணவிளையும் நவீன கவிதையின் எடுத்துரைப்பு சார்ந்த உத்திகளை  நாம் மஹாகவியிடமோ, தா.இராமலிங்கத்திடமோ, மஹாகவியின் மகன் சேரனிடமோ காணமுடியாது. அதேபோல் தா.இராமலிங்கம், சேரனிடம் காணப்படும் நவீன கவிதையின் உச்ச நிலைப்பட்ட பொருண்மை, பேசுமுறை சார்ந்த விளைதிறன்களை சோலைக்கிளியிடமோ, பா.அகிலனிடமோ, றஸ்மியிடமோ சந்திரபோஸ் சுதாகராிடமோ சித்தாந்தனிடமோ காண முடியாது. எனெனில் நவீன கவிதை தன் உச்சநிலைப்பட்ட தன் எல்லைகளை நகர்த்திக் கொண்டே வந்துள்ளது என்பது கண்கூடு. ‘நாவல். சிறுகதை முதலான இலக்கிய வடிவங்கள் மாத்திரம்தான் தன் உள்ளடக்கங்களையும் பேசுபொருட்களையும் எடுத்துரைப்பு முறைகளையும் புதுபித்திருக்கின்றன” என றியாஸ் குரானா கூறுவது முற்றிலும் தவறானது (பக்-41). “நவீன கவிதையின் செயலுக்கான இடைவெளி இன்னும் அப்படியே உள்ளது எனக் கூறுவதும் நவீன கவிதை என்ற ஒன்றை நாம் கடந்து விடவேண்டிய நிலையில் இருக்கிறோம்” எனக் கூறுவது எல்லாம் அறியாமையின் வெளிப்பாடே எனலாம். ஏனெனில் நவீன கவிதை என்பது காலத்துக்குக் காலம் புதுமையை நாடி நிற்கும் ஒன்றாகும்.

“நவீனத்துவம் என்ற கருத்தாக்கம் தமிழைச் சந்திப்பதற்கு முன் ‘இலக்கியம்’ என்ற சொல் கவிதைகளை குறித்தது எனக் றியாஸ் கூறுவதும் இலக்கியம் குறித்தான புரிந்துணர்வின்மையின் வெளிப்பாடே எனலாம். இலக்கியம் என்பது படைப்புக்கலை. “இலக்கியம்” என்னும் சொல் ‘ல+யம்’ எனும் வடமொழிச் சொல்லின் திரிபாகும்1.” இது நோக்கம், குறிக்கோள் முதலான பொருள்களை உடையது. இதனாலேயே இலக்கு+இயம்-இலக்கியம் எனக் கொண்டு ‘நோக்கினை இயம்புவது’ இலக்கியமெனக்கூறி பொருள் உரைப்பர;. ‘எல்லே இலக்கம்’ எனும் தொல்காப்பிய நூற்பாவிலுள்ள ‘இலக்கம்’ என்ற சொல்லை இலக்கு + அம் எனப் பகுத்து, நோக்கத்தை உடையது இலக்கியம்” எனப் பொருள்கொள்வாருமுளர;. “பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் எனத் தொல்காப்பியர் இலக்கியத்தை ஏழு வகைப்படுத்துவார்” ஆயினும் அ.ச.ஞானசம்பந்தன் “இலக்கியத்தின் சிறப்பு இயல்புகளாகப் ‘புதுமை, பெருமை, பொதுமை, பொருண்மை’ என்பவற்றைக் குறிப்பிடுவார்”. இவ்வியல்புகளைத் தொகுத்து “உணர்ச்சி, கற்பனை, கருத்து, வடிவம் என்னும் நால்வகைப் பண்புகளாகத் தெளிவுறுத்தலாம்” என்பார் இராஜம் இராஜேந்திரன். இலக்கியம் குறித்தான புhpதலின்றி இலக்கியம் என்ற சொல் கவிதைகளை மாத்திரம் குறித்தது எனக் கூறுவது றியாஸின் அறியாமையை வெளிப்படுத்தி நிற்கிறது. உரைநடைக்கு முன் இலக்கியங்கள் செய்யுளில் தோன்றியது என றியாஸ் உரைத்திருப்பாரேயானால் அதில் தவறில்லை.

 “மருத்துவக் குறிப்புக்கள். வானிலைத் தகவல்கள், சாஸ்த்திரங்கள் எனச் சமூகச் செயற்பாட்டின் அனைத்து உற்பத்திகளும் கவிதையிலேயே நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன” என்பது றியாஸ் உணர்த்தி தான் அறியவேண்டும் என்பதில்லை. இது இலக்கியம் பயின்ற அனைவரும் அறிந்ததே. “பிற்காலத்தில் இலக்கியம் என்பது கற்றல், அறிவு என்ற அடிப்படையிலேயே பயிலப்பட்டது” எனக் கூறுவதே அபத்தம். இக்கருதுகோள் தமிழ் இலக்கிய வரலாறு குறித்தான தெளிவின்மையின் வெளிப்பாடாகும். 

பழந்தமிழரின் வாழ்வில் ‘அணுவில் தொடங்கி அண்டம்’ வரையிலும் அறிவியல் விரவிக் கிடக்கின்றது. இலக்கியம் என்பது வெறும் இரசனைக்குரிய ஒன்றாக மட்டும் இல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்த படைப்பாகவே ஆக்கப்பட்டுள்ளன. அதை விடுத்து அதனை அறிவியல் சார;ந்தது என மட்டும் கூறி அதனைக் குறுகிய வட்டத்துக்குள் அடைத்த ஆராய்வது  இலக்கியத்தின் உண்மைத்தன்மையைச் சிதைக்கும் செயலாகும். 'கருவளர் வானத்திசையிற் தோன்றி” எனத் தொடங்கும் பாpபாடல் பாடலடிகள் உலகம் ஐம்பு+தங்களால் உருவானது  என்பதைக் குறித்து நிற்கிறது. இது போல 'நிறைகடல் முகந்துராய் நிறைந்து நீர்தளும்பும்” என்னும் பாிபாடலின் பிறிதொருவடி  மேகம் கடல் நீரை பெற்று மழையாகப் பொழிவதையும் வெளிப்படுத்துகிறது. இது றியாஸ் குரானா அவர;களுக்கு அறிவியலாகத் தோன்ற வில்லையா? 
பழுதுபட்ட ஒரு உறுப்பை எடுத்துவிட்டு வேறொரு உறுப்பைப் பொருத்தும் மாற்று அறுவைச் சிகிச்சை முறையை சிலப்பதிகாரத்திலும் காணலாம். கீரந்தையின் இலக்கக் கதவைத் தான் தட்டியதற்குத் தண்டனையாக, தன் கையைத் தானே துண்டித்துக் கொண்ட பாண்டியன் அதன்பின் பொன்னாலாகிய கையைச் செய்து பு+ட்டிக் கொண்டதை 
“நாடுவிளங் கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன்
           ஆடு மழைத் தடக்கை யறுத்து முறைசெய்த
 பொற்கை நறுந்தார்ப் புனைதேர;ப் பாண்டியன்”
சிலப்பதிகாரத்தின் மேற்குறிப்பிட்ட அடிகள் விளக்கி நிற்கின்றன. 

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது எனத் தமிழர்களால் நம்பப்படும் திருமந்திரத்தில் இல்லாத மருத்துவக் கருத்துக்களையா பிற்பட்ட இலக்கியத்தில் காணமுடியும். குழந்தையின் ஜனன உற்பத்தியில் இருந்து அதன் வளர்ச்சிப் போக்கு வரையும் ஏராளமான மருத்துவ விடயங்களைத் திருமந்திரத்தில் காணலாம். மாதிhpக்கு ஒரு பாடலை இங்கு சுட்டிச் செல்வது என் கருத்தை வலுப்படுத்த உதவும் என நினைக்கிறேன்.
மாதா உதிரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதிரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதிரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதிரத்தில் வைத்த குழவிக்கே
என்னும் திருமந்திரப் பாடல் தாயின் உதிரத்தில் மலம் மிகுந்தால் பிறக்கும் குழந்தை மந்தபுத்தி உடையதாகவும் சலம்; மிகுந்தால் குழந்தை ஊமையாகவும் மலம், நீர; இரண்டும் மிகுதியாக இருந்தால் குழந்தை குருடாகப் பிறக்கும் என்ற கருத்துக்கள் இப்பாடலில் பயின்று வருகின்றன. இக்கருத்துக்கள் இன்றும் மக்களாலும் மருத்துவர;களாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 

இது போல எண்ணற்ற பழந்தமிழ் பாடல்கள் அறிவியல் சார்ந்த விடயங்களை விளக்கி நிற்கிறது. இலக்கியம் என்பது நுகர்வுத் தேவையின் பு+ர்த்தியேயன்றி றியாஸ் கூறுவது போல் இலக்கியம் என்பது கற்றல், அறிவு என்ற அடிப்படையிலேயே பயிலப்பட்டு வந்ததன்று. படைப்பின் வழி புனைவை உருவாக்கலாமேயன்றி புனைவின் வழி வெறும் முற்கற்பிதங்களைக் கொண்டு ஆய்வுக் கட்டுரை எழுதமுடியாது. ஆனால் தரவுகளின்றி, எடுகோள்கள் இன்றி எழுந்த மாதிhpயான எண்ணக் கருத்துக்களை வைத்துக் கொண்டு றியாஸால் உருவாக்கப்பட்ட இக்கட்டுரை போலிமையாலான கற்பிதங்களின் புறவுலகை கட்டமைக்கிறது. 

இலக்கிய மீளாய்வுகளின்றி, ஆய்வு நெறிமுறைகள் இன்றி ஆய்வுக்கான மூலங்களைத் தவறாகவும் திhpத்தும் கூறி ஒரு ஆய்வுக் கட்டுரையைப் புனைவியல் நோக்கில் எழுத முனைந்ததன் விளைவே றியாஸ்குரானாவின் நவீன கவிதை காலாவதியாகி விட்டது என்னும் இக்கட்டுரை. சைவத்தை முடிந்த முடிபெனக் கூறும் சித்தாந்தமே தன் முடிவை காட்சி, கருதல், ஆப்தவாக்கியம் முதலான அளவைகளைக் கருத்தில் கொண்டே முன்வை;கின்றன. ஆனால் றியாஸ் போன்ற புத்திஜீவிகள் ...இவைகள் ஒன்றுமின்றி ஆய்வுக்கட்டுரை எழுத முனைவது தமிழுக்கு வந்த சாபக்கேடாகும்.

அகம், புறம் என்ற சங்க இலக்கிய வகைமைக் கோட்பாட்டை மெய்யியலுடன் றியாஸ் இணைத்துப் பேசுவது அபத்தத்தின் உச்சம் எனலாம். “தமிழின் கவிதை ஒரு மெய்யியல் வரலாற்றினூடாகவே கவித்துவம் என்ற நிலைப்பாட்டை வளர்த்துள்ளது” என்பதை தம் மனம் போன போக்கில் எவ்வித எடுகோளுமின்றி இவரால் எவ்வாறு கூறமுடிகிறது. தமிழ்க் கவிதை மெய்யியல் வரலாற்றினூடாக கவித்துவம் என்ற நிலைப்பாட்டை அடையவில்லை. கவித்துவம் வேறு மெய்யியல் வேறு. கவித்துவம் என்பது கவி பாடும் திறன். அனுபவங்களின் ஒன்று குவிப்பும் வளமான கற்பனையும் மொழியும் திறனும் ஒன்றறக் கலக்கும் போது கவித்துவம் துலங்கும். ஆனால் மெய்யியல், மெய்க்கோட்பாட்டு இயல்,  தத்துவம் என்பன ஒரு பொருள் குறித்த சொற்களாகும். மெய் என்ற உண்மையைப் புத்தியால் தேடும் அறிவினை மெய்யியல் என்பர;. ஆங்கிலத்தில் Phடைழளழிhல (ஃபிலாசஃபி) என்று கூறப்படும் இச்சொல் கிரேக்கச் சொல்லாகிய phடைழ-ளழிhயை என்பதில் இருந்து தோற்றம் பெற்றது. இசொல் அறிவின்பால் காதல் என்பதைச் சுட்டி நிற்கின்றது. கற்பனை, அனுபவம், உணர்வு, அறிவு, புனைவு என்னும் அக, புறக் காரணிகளால் தீர்மானிக்கப்படும் கவிதை இலக்கியத்தை அறிவால் மாத்திரமே ஈர்க்கபடும் துறையான மெய்யியலுடன் இணைப்பது என்பது அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் இடையிலான தொடர்பை விளக்குவது போலாகும். 

சங்க இலக்கியம் கூறும் அகம், புறம் என்னும் வகைமை நோக்கை நாம் இந்து தத்துவங்களோடு கூட இணைத்து நோக்க முடியாது. ஏனெனில் இவை இரண்டும் பேசும் அகம், புறம் வெவ்வேறானவை. சங்க இலக்கியத்தில் கூறப்படும் அகம் பெயர் சுட்டா காதற்பாக்களாக காணப்பட இந்து மெய்யியல் பேசும் அகம் பரவான்மாவுக்கும் ஜீவான்மாவுக்கும் இடையிலான பெயர் சுட்டும் உறவுநிலைகளைப் பேசுகிறது. நாயன்மார்கள், ஆழ்வார்களின் இறைபக்திப் பாடல்கள் கூட முற்றிலும் பெயர் சுட்டும் நிலையிலேயே காணப்படுகின்றன. சொருபநிலையில் குணங்குறிகளற்று, பரந்து வியாபித்திருக்கின்ற பதி தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர;வினனாதல், முற்றும் உணர;தல், இயல்பாகவே பாசங்களில் நின்று நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை என்னும் குணங்களைப் பெற்று ஆன்மாக்களுக்கு நன்மை செய்யும் வண்ணம் ஒரு படி கீழிறங்கி வருகின்ற தடத்தல் நிலையிலேயே புறம் சார்ந்த செயற்பாடுகளுடன் தோற்றம் பெறுகின்றன. பரவான்மா ஜீவான்மாவுடன் கலக்கும் நிலையும் இதன்பாற்பட்டதே. மற்றும் இங்கு கூறப்படும் புறமும் இறைவனின் ஐந்தொழில்களுடன் தொடர்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. இலக்கியத்தை மெய்யியல் வாதக் கோட்பாடுகள் சார்ந்து நோக்கலாமேயன்றி இலக்கியத்தை மெய்யியலாகப் நோக்குவது தவறு.
2000 ஆண்டு கடந்த காலவெளியில் கவிதை அகம் குறித்தே தனது அக்கறையைச் செலுத்தி வந்திருக்கிறது எனக் கூறுவதும் இவாpன் அறிவு வரட்சியின் நீட்சியை காட்டி நிற்கிறது. தமிழின் தொன்மையான இலக்கியமான சங்க இலக்கியம் 2381 பாடல்களை உள்ளடக்கி எட்டுத்தொகை பத்துபாட்டாக வகைப்படுத்துள்ளது. இதில் எட்டுத்தெகைக்குhpய அகச் செய்யுட்கள் 1856 ஆகும். பத்துப்பாட்டு நூல்களில் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை முதலானவற்றுடன் பேராசிhpயர் சுப.மாணிக்கம் முதலான பலரால் அகத்திணை நூல் என உரைக்கப்படும் நெடுநல்வாடையும் உள்ளடக்கி ஒட்டு மொத்தமாக 1860 அகப் பாடல்கள் 373சங்கப் புலவர்களால் பாடப்பட்டன. இதில் 521பாடல்கள் புறத்திணை நூல்கள். அதிலும் பத்துப்பாட்டு நூல்களில் ஏழு நூல்கள் புறத்தை சுட்டி நிற்க கவிதை அகம் குறித்தே தனது அக்கறையை செலுத்தி வந்திருக்கிறது என றியாஸ் கூறுவது ஆரம்ப கால தமிழ் இலக்கியம் தொடர்பான அறிவின்மையின் வெளிப்பாடாகும். 

அகத்தை அகமி என உரைத்தும் புறத்தை புறமி எனக் கூறி சொல்வித்தை காட்டும் றியாஸ்குரான அகத்தை ‘சுயம்’ எனக் கூறுவது தவறு. சுயம் என்பது ஒருவாpன் தனித்துவத்தைக் குறித்து நிற்கிறது. அது ஒருவருக்கேயுhpய பிரத்தியேகமான பண்பினைச் சுட்டிச் செல்லும் குறியாகும். சொந்தமான, கலப்பற்ற, தன்நிலை எனப் பன்பொருண்மையில் கட்டமையும் இக்குறியை தனித்து பெயர் சுட்டா காதற்பாக்கள் எனக் கூறப்படும் அகத்துக்குச் சுட்டி செல்வதும் பொருத்தமற்றது. அது அகம் சார்ந்து தான் இருக்கவேண்டும் என்பதல்ல புறம் சார்ந்த செயற்பாடாகக் கூட அமையலாம். புறம் சார்ந்த போர்க் களத்தைச் சுட்டி அப்போரில் அவாின் சுயம் வெளிப்பட்டது எனக் கூறுவோமேயானால் இதனை அகமி என அழைக்கலாமா. கருதுகோள் தவறாக இருக்கும் பட்சத்தில் அவாின் விமர்சனநோக்கும் ஆய்வின் நோக்கும் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் சொல்லித்தான் அறிய வேண்டும் என்பதில்லை.

“இயற்கையோடு இசைவாக இருந்த வாழ்வு மெல்ல மெல்ல நீங்கத் தொடங்கிய காலமாகவே சங்க காலம் இருந்திருக்கவேண்டும்” எனக் கூறுவது சுத்தப் பேத்தலாகும். சங்க காலம் என்பது இயற்கைநெறிக் காலம் என்பது யாவரும் அறிந்ததே. பேராசியர் ஆ.வேலுப்பிள்ளை சங்ககாலத்தை இயற்கை நெறிக்காலமென்றே அழைப்பார். சங்ககாலத்தைப் பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை என்னும் தலைப்பில் கலாநிதிப்பட்டத்துக்கு ஆய்வு செய்த மு.வரதராசன் சங்க இலக்கியத்தில் இயற்கையியல் (naturalism), விருந்தியல் (Romanticism)  இரு பண்புகள் இருந்ததாகக் கூறி இயற்கைக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பை விளக்குவார். இது போல தனிநாயகம் அடிகளாரும் தன்னுடைய எம்.லிட் (M.lit) பட்டத்துக்காக Nature in ancient Tamil poetry  என்னும் தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டார். இயற்கையோடு தமிழ் மக்கள் பின்னி பிணைந்திருந்த வாழ்ககை முறையை இவரும் வலியுறுத்துகிறார். எனவே சங்ககாலம் குறித்தான அடிப்படை அறிவுகூட இன்றி அது குறித்த விவாதிப்பது ஆய்வுநெறியின் பாற்பட்டதன்று.

“அறம் சார்ந்த இலக்கியங்கள் உன்னத வாழ்வை உருவாக்கி விட முடியாது போய் விட்டதை உணர்ந்த போது, தமிழில் காப்பியங்கள் உருவாகின” என றியாஸ் கூறுவதைப் போல் பிதற்றல் வேறொன்றுமே இருக்க முடியாது. தண்டியலங்காரத்தின் எட்டாவது செய்யுளான பெருங்காப்பியநிலை பேசுங்காலை என்னும் செய்யுள் காப்பியத்தின் வரைவிலக்கணத்தை எடுத்து கூறுகிறது. அதில் வருகின்ற “நாற்பொருள் பயக்கு நடை நெறித்தாகி” என்னும் அடி காப்பியத்துக்கான அடிப்படைகளாக அறம், பொருள். இன்பம் வீடு முதலானவற்றை எடுத்துரைக்கிறது. அதில் ஒன்று குறைவடையுமானால் அவற்றை போிலக்கியமெனக் கருதமுடியாது எனத் தழிழ் இலக்கிய வரலாறு கூற றியாஸகுரானா “அறம் சார்ந்த இலக்கியங்கள் உன்னத வாழ்வை உருவாக்கி விட முடியாது போய் விட்டதை உணர்ந்த போது, தமிழில் காப்பியங்கள் உருவாகின” எனக் கூறுவது எவ்விதத்திலும் முறைமை யானதுமன்று. “அறம் சார்ந்த அறிதல் முறைகளாலும் அதை முன்வைத்த கவிதைகளாலும் வாழ்வைச் சாிசெய்ய முடியவில்லை என்பதே காப்பியங்களின் வருகைக்கு காரணமாயின” என்பதுவும் தவறான முன்மொழிவாகும். பழம் பெரும் காப்பியங்கள் யாவும் அறத்தின் பாற்படே இயங்கின. அகப்பொருட் துறைமிக்க இன்பச் சுவையைப் பாடிய மணநூல் என அழைக்கப்படும் சீவகசிந்தாமணி கூட அறத்தை முதன்மைப்படுத்தி பாடப்படும் போது றியாஸின் மேற்குறிப்பிட்ட கருத்துக்களை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆய்வில் முன்னெடுக்கப்படும் கருதுகோள்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அவற்றினைக் கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்படும் ஆய்வுகளும்; நேர்த்தியாக அமையமாட்டாது என்பதற்கு “நவீன கவிதை காலாவதியாகிவிட்டது” என்னும் கட்டுரை நற்சான்றாகும்.

நவீன கவிதைகளை மிக இலகுவாகப் படைக்கவும் உற்பத்தி செய்யவும் பழகியிருக்கிறார்கள் எனக் கூறுவதும் ஆடுகள் நவீன கவிதையாகவே கத்துகின்றன, நாயும் நவீன கவிதையைக் குரைத்து விட்டு சென்றது எனக் கூறுவதும் சுத்த உளறல் “படிமத்துக்கான படிமம். சுண்டக்காய்ச்சிய சொற்கள், அர்த்தப்பிறழ்ச்சி என அறிவொளியின் நீட்சியாக அமையும் நவீனத்துவக் கவிதையின் வடிவம் சார்ந்த விடயங்கள்” என்பதை விளங்கிக் கொள்ள முடியாமையின் விளைவே இதுவாகும். 

றியாஸ் கூறுவதைப் போல “நவீன கவிதையை இலகுவாக படைக்க முடியாது”. அவ்வாறு படைக்க முடிந்தால் அதனை கவிதை எனக் கூறலாமேயன்றி அதனை நவீன கவிதை எனக் கூறமுடியாது. “பின் நவீனத்துவத்தின் அரசியல், கதையாடல்கள், கருத்துநிலை. புனைவு உத்திகள் என அனைத்தையும் ஆற்றலோடு உள்ளெடுத்து இயங்கிய தமிழின் இலக்கிய வடிவம் கவிதையன்று நாவல் மற்றும் சிறுகதை” என றியாஸ் குரானா கூறுவது பெனாத்தலன்றி வேறொன்றுமில்லை. ஏனெனில் நவீன கவிதைகள் பல 1960களின் முன்னரே பின்நவீனத்துவக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருந்தன. ஈழத்தைச் சேர்ந்த தா.இராமலிங்கத்தின் கவிதைகள் பல பின்நவீனத்தவக் கூறுகளைக் கொண்டிருந்தன. எஸ்ரா பவுண்டின் (நுணசய pழரனெ) படிமத்துடன் ஒப்பிட்டு இவர் கவிதையை அக்காலத்தில் மு.தளையசிங்கம் ஆய்வொன்றைச் செய்துள்ளார்.

வார்த்தைகளின் நேரடி அர்த்தங்களுக்கிடையிலான தொடர்பை மட்டுப்படுத்தி அதன் பண்பாட்டு அர்த்தத்தின் இடைவெளியில் புதிய அர;த்தங்களை தோற்றுவித்தல் பின்நவீனத்துவ வெளிப்பாட்டுக் கூறுகளில் ஒன்று. மையமிழந்த தன்மைக்கூடாக கவிதையின் ஊடுபொருளை வெளிப்படுத்திய தமிழின் நவீனகவிதை முன்னோடிகளாக பிரம்மராஜன், எம்.யுவன்,லஸ்மி மணிவண்ணன், கோலகல ஸ்ரீநிவாஸ், கடற்கராய் முதலானோரைக் கூறலாம்.  மையப்படுத்தப்படாத மொழி, மற்றும் நிகழ்நிலை இரண்டையும் கையகப்படுத்திக் கொண்ட பிரம்மராஜனின் கவிதைகள் கலைத்துப் போடப்பட்ட பிரக்ஞை பு+ர்வமான படிமங்களுக்கூடாகவும் அதீத குறியீட்டு மண்டலங்களுக்கூடாகவும் வியாபித்து நிற்பவை. இடையீட்டுப் பிரதிக் குறிப்புக்களை உள்வாங்கி எழுதப்படும் இவாpன் கவிதைகள் இருண்மைத் தன்மை கொண்டவை. இவாpன் நுண்மையான உருவக மொழி கவிதையைச் செயற்றிரன் மிக்க தொன்றாக மாற்றுகிறது. இவாின் ‘புராதன இதயம்’, ‘ஞாபகச்சிற்பம்’, ‘மஹாவாக்கியம்’, ‘தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்’, ‘ஜென்மயில்’ முதலான தொகுப்புக்களில் இதனைக் காணலாம்.
“புதைமணல் கனவை போலத் தான் துழாவுகிறது 
நி‘;சிந்தையில் மலரும் ராட்சதக் காளான்
மௌனநிறம் போல
என் மூளையின் பின்னாலே நினைவு+ட்டாது
ஏதுமின்றி
என் மேலதீத நானிடமேதுமில்லாமல்...”
                              (ஞாபகச்சிற்பம்)
இங்கு அர்த்தம் சொற்களால் உருவாக்கப்படாது சொற்களின் இடைவெளியில் - மௌனங்களில் இருந்து தோன்றுகிறது. இங்கு கவிதைகளின் அர்த்தங்கள் குறுகாமல் விரிவடைந்து செல்கிறது. 
பின் நவீனத்துவப் படைப்புகளின் முக்கிய அம்சங்களான முன்பின் மாற்றிச் சொல்லுதல் கட்டுடைத்தல் மற்றும் துண்டாடப்பட்ட விவரணம் முதலானவற்றை கவிதையில் இணைத்து அதனைச் சாத்தியமாக்கியவர்களுள் போஸ்நிகாலே. சித்தாந்தன், சிபிச்செல்வன் முதலானோர் குறிப்பிட்டு கூறத்தக்கவர்கள்.

மொழியின் பரப்புக்களின் மீது வெவ்வேறு தளத்தில் இயங்கும் குறியீடுகளை கைவசப்படுத்தி தங்களுக்கு ஊடாடி நிற்கும் நிற்கும் பிரதிமைகளை தம் படைப்பின் வாயிலாக வெளிப்படுத்தியவர்களுள் யவனிகா ஸ்ரீராம், தேவதச்சன், ஜெயபாஸ்கரன், சுகுமாரன், குவளைக்கண்ணன். எம்.யுவன், முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் குவளைக்கண்ணன். யவனிகா ஸ்ரீராம், பாலைநிலவன் போன்றவர்கள் கட்டற்ற வெளிப்பாட்டுத்தன்மை கொண்ட கதையாடல்களை அங்கத்தின் வழியும் தத்துவத்தின் வழியும் சிதைத்து நவீன கவிதையை பிறிதொரு தளத்துக்கு நகர்த்தியவர்கள்.              
படைப்பை அனுபவம் மூலம் கலையாக்கவோ தூய்மையாக்கவோ முனையாமல் பொருள் சார்ந்த அர்த்தக் கூறுகளுக்கூடாக கவிதையை முன்னெடுத்தவர்களுள் பிரேம்-ரமே‘; முக்கியமானவர்கள் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. ரமே‘; - பிரேதனின் ‘கறுப்பு வௌ;ளை’, ‘பேரழகிகளின் தேசம்’, ‘சாரயக்கடை’ முதலானவை பின் நவீனத்துவக் கவிதைகளை அதிகம் கொண்ட தொகுப்புக்களாகும். கீழைத்தேயத்திற்கு ஏற்றாற் போல தங்களது படைப்பு மொழியை உருவாக்கி கொண்ட ரமே‘; - பிரேமின் “சாரயக்கடை” விளிம்பு நிலை மனிதனின் போதையாலும் அதனை உட்கொண்ட மனத்தின் பித்தாலும் கவித்துவத்தைக் கண்டு அடைந்தவை. இவர்களின் கவிதைகளில் ஒன்றிரண்டு சொற்கள் மாற்றி மாற்றி வந்தும் கூட்டிப் பிhpத்து முயங்கியும் விலகியும் வந்து எண்ணற்ற பிரதிமைகளை உருவாக்கிக் கொள்கின்றன. கவிதையின் அடிப்படை விடயங்களைப் புரிந்து கொள்ளாமல் அழமான கவிதைகளை வாசிக்காமல் மனம் எழும் போக்கக்கமைய விமர்சனங்களை றியாஸ் குரானா முன்வைப்பதை நியாயமற்ற செயலாகவே நான் கருதுகின்றேன்.

நவீனத்துவத்தின் கவித்துவம் பிரதிபலித்தல், பின்நவீனத்துவத்தின் கவித்துவம் நிகழ்த்திக் காட்டல் என எவ்வித அளவுகோள்களுமின்றி றியாஸ் மனம் போன போக்கில் எழுந்த மாதிhpயான முடிவுகளைக் கூறுவது ஆய்வொன்றுக்கு பொருத்தமாக அமையமாட்டாது. சுநகடநஉவழைn எனப்படும் பிரதிபலித்தலை நவீனம் எவ்வகையில் கொண்டிருக்க முடியும். 2010க்குப் பின்னரே தமிழில் நிகழ்த்து கவிதைகள் அதிகாpக்கத் தொடங்கின எனக் கூறுவதும் அம்முயற்சி தமிழில் முதன் முதலில் பிரேம்-ரமே‘; முதலானவர்களால் முன்னெடுக்கப்பட்டன எனக் கூறுவதும் கவிதை குறித்தான அறிவுப் போதாமை மற்றும் அனுபவமின்மையின் வெளிப்பாடே இது எனக் கூறலாம். நானறிய ப்ரதிபா ஜெயச்சந்திரன் (புத்தகத்திலிருந்து புறப்பட்ட பிரதிமைகள்), ரா.ஸ்ரீனிவாஸன் (ரா.ஸ்ரீனிவாஸன் கவிதைகள்). சமயவேல் (அகாலம்) இம்முயற்சியில் 1990களிலேயே ஈடுபட்டனர்.இதற்கு முன்னரே பிரம்மராஜனால் வெளியிடப்பட்ட கவிதைக்கான இதழான ‘நீட்சி’யில் நிகழ்கவிதைகள் பல பிரசுரமாகியுள்ளன. அது குறித்த தெளிவில்லாது எழுந்த மாதிhpயாக கருத்துக்களை முன்மொழிந்து ஆய்வுகளை மேற்கொள்வதும் ஆய்வாளனுக்கு உகந்த செயலுமன்று. 

எண்ணற்ற சாத்தியங்களை நிகழ்த்தும் நவீன கவிதை பன்முக அர்த்தப் பொருண்மையில் கவிதை சொல்லி. வாசகன், விமர்சகன் ஆகியோர் சேர்ந்து உருவாகின்ற  பிரதியல் சுழற்சியாக உருமாறுகிறது. அதீத எழுத்துரு ரசவாதத்தன்மை கொண்ட கவிதையாக உருப்பெறும்போது அக்கவிதை தன்னை அர்த்தங்களின் வான் மண்டலமாக விரித்துக் கொள்கிறது. நவீன கவிதையின் பாpணாம வளர்ச்சியான இதனையே பின்நவீனத்துவ கவிதையாக வாசகனும் விமர்சகனும் அடையாளம் கண்டு கொள்கிறனர். இந்நிலையில் நவீனகவிதையின்; ஒரு படிநிலையாக பின்நவீனத்துவக் கவிதையைக் கொள்ளலாமேயன்றி அதுவே முடிந்த முடிபன்று. பின்நவீனத்துவத்தை நவீனத்துவத்தின் எதிர்காலமாகவும் முன்நிகழ்வாகவும் லயோடார்ட் போன்றவர்கள் கருதுவதால் றியாஸ் முதலான அதிமேதாவிகள் நவீனத்துவத்தின் முடிவே பின்நவீனத்துவம் என வரையறுத்து நவீன கவிதை அழிந்து விட்டது எனக் கூறி வருகின்றனர். krvinJ.H.Dettman  போன்றவர்கள் நவீனத்துக்குள் உட்பொதிந்த பாிணாம வளர்ச்சியின் விளைவே பின்நவீனத்துவத்தைக் கொள்வார்கள். இதுவே சாலப் பொருத்தமும் கூட. அர்த்தத்தின் ஒருமைத் தன்மையை உடைத்து நுண்ணிய குறித்தொடர்களுக்கூடாக விhpவை நோக்கி நகரும் நவீன கவிதையை அது காலாவதியாகி விட்டது எனக் கூறுவது நவீன தமிழ்க் கவிதையின் பாிணாம வளர்ச்சியை அறியாதவர்களின் கூற்றென்றே இதனைக் கொள்ள வேண்டும். றியாஸ் குரானாவும் அவர் குறித்து சிலரும் கருத்துக்களைத் தெளிவாகவும் ஒழுங்காகவும் கவிதைக் கோட்பாடுகளை முறையாகவும் அறிந்தும் முன்வைக்கும் சூழலில் இவ்விவாதத்தைத் தொடர்வது பயனளிக்குமே அன்றி தமிழ் இலக்கிய வரலாற்று அறிவின்றி கவிதை, கோட்பாடுகள் குறித்த தெளிவான விளக்கமின்றி இவ்விவாதத்தை றியாஸ்குரான போன்ற அதிமேதாவிகள் தொடர்வார்களேயானால் அம்முயற்சிகள் ஆக்கபு+ர்வானதாக அமையாது என்பது வெளிப்படை. கையகப்படுத்த முடியாத வகைப்படுத்த முடியாத எழுதி முடிக்கப்படாத நவீன கவிதைகள் நாளைக்கான வெளியின் அகற்சியை நீட்டியும் விரித்தும் செல்லும் நிலையில் நவீன கவிதை காலாவதியுமாகாது. அதனை அழிக்கவும் முடியாது.

00

Related

கட்டுரைகள் 83044365787777145

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item