ஒழுங்கமைக்கப்பட்ட சிதைவுகளுக்கு மேல் எழும் புனைவுகள் - யோ.கர்ணனின் சிறுகதைகளை முன்வைத்து


Image result for யோ.கர்ணன்-தமிழ்ச்சித்தர்

2009 இற்குப் பின் ஆயுதப் போராட்டம் முடிவுற்று தமிழீழ போராட்டம் பழங்கதையாய் போன நிலையில் ஆயுதப்போராட்டம் எழுதிய அழிவின் பக்கங்களை அழுகைகளின் அலைக்கழிப்பை அது தரும் அனுபவ வெளிப்பாடுகளை ஈழ மக்களின் இரட்டை மனோநிலைக்கூடாக வெளிப்படுத்தி நின்றன கர்ணனின் சிறுகதைகள். யோகநாதன் முரளி என்னும் யோ.கா்ணன் போராளியாக இருந்து புனைகதை சொல்லியாக மாறியவர். மாமனிதன் என்னும் தனிமனிதனின் கனவுகளுக்கு உயிரூட்டப் போய் போரின்சிதைவுகளை உள்ளிருந்து பார்த்த கர்ணனின் புனைவுகள் தேவதைகளின் தீட்டுத்துணியாகவும் சேகுவேரா இருந்த வீடாகவும் கொலம்பஸின் வரைபடமாகவும் உருப்பெற்றன. இத்தொகுப்புக்கள் வருவதற்கு முன்னரே 2006இல் இவரால் எழுதப்பட்ட சிறுகதைகள் “கிறிஸ்தோப்பாின் வீடு” என்னும் தலைப்பில் நூலுரு வரை சென்று முழுமை பெறாது முடித்துக் கொண்ட கதையை யோ.கர்ணன் குறித்தான கருணாகரனின் சாட்சியம் எடுத்துரைக்கிறது.

போராட்டத்தின் பேரவலங்களின் முகங்களை அதிகார வர்க்கம் மீது சமூகம் கொண்ட நம்பிக்கைகளை பேசமுயன்ற கர்ணனை, வரலாறு “தேவதைகளின் தீட்டுத்துணி”க்கூடாகத் துரோகியாய் அடையாளப்படுத்தியது. நிற்க நிழலின்றி ஓடித்தவித்த மக்களின் கண்ணீர்க்கதையை தமிழாின் விடுதலைப் போராட்டத்தை புதியபார்வைக்கூடாக பிறிதொரு நோக்கில் வெளிப்படுத்தி நின்ற இத்தொகுப்பு நிஜங்களை மறந்து கற்பனைக்குள் மூடிக்கிடந்த உலகை தோலுhpத்துக் காட்டியது. ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும் முதல் தேவதைகளின் தீட்டுத்துணி ஈறாக பத்துச் சிறுகதைகளுக்கூடாக முகம் கொள்ளும் தேவதைகளின் தீட்டுத்துணி’ என்னும் சிறுகதைத் தொகுப்பு தமிழாpன் விடுதலைப்போராட்டத்தை மாற்றியல்கருத்தியல்hPதியாக அணுகிய தொகுப்பாகும். முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற துயரங்களை, மக்களின் தூக்கமில்லாத இரவுகளை, அங்கு நடந்தேறிய அரசியல்நிகழ்வுகளை அவற்றின் உணர்வுகளை ஒற்றைப்பாh;வைக் கூடாக வெளிப்படுத்திய தொகுப்பான தேவதைகளின் தீட்டுத்துணி ஈழத்தின் இறுதிப் போர் குறித்து எழுந்த முதல் ஆவணம் என்ற வகையிலும் முதன்மையானது.

 Image result for யோ.கர்ணன்
எல்லோரும் பேசாமல் இருந்து காலத்தில் போராளியாய் உருமாறி மௌனித்திருந்த கர்ணன் தமிழீழ விடுதலைப் போராட்ட முடிவுக்குப் பின்னரும் கூட வாய்திறக்கவில்லை. புலி எதிர்ப்பு அரசியல் தீவிரம் பெற்ற சூழலில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளுவதற்காகவும் தன்னை தற்பாதுகாத்துக் கொள்ளுவதற்காகவும் தமிழ்க்கவியின் வழித்தடத்தில் தன்னை புடம் போட்டுக் கொண்ட கர்ணன், ஷோபாசக்தியின் புனைவுகளை அடியொட்டி அங்கதத் தொனிகொண்ட புலி எதிர்ப்பு சிறுகதைகளைப் படைக்கத் தொடங்கினார். 1990களில் சக்கரவர்த்தியின் ‘இரண்டாவது காலம்’ பழைய தடத்தில் இருந்து விலகி ஒரு புதிய திசையை எவ்வாறு சுட்டிச் சென்றதோ அதேபோல் 2000களில் ஷோபாசக்தியின் கொரில்லா நாவல் இயல்புநடையிலிருந்து  விலகி மாற்றுக்கருத்தியலுக்கூடாக புதியவழித்தளத்தில் பிரவேசித்ததோ அதன் தொடர்ச்சியைக் கர்ணனின் சிறுகதைகளிலும் காணலாம்.எல்லாவிதமான அச்சுறுத்தல்கள், பல்வேறு நெருக்கடிக்குள் இருந்த சமயத்தில் பொய்களாலும் புனைவுகளாலும் எல்லையற்று விரிந்து நின்ற விம்பத்தின் மாயைத்திரைகளை துணிச்சலோடும் மனவைராக்கியத்தோடும் கிழித்தெறிந்த  கர்ணன் பாராட்டுக்கும் உhpயவர். யுத்தத்தின் இரண்டாம்பாகம் சக்கரவர்த்தி என்னும் கலைஞனை எவ்வாறு கூர்ந்து அவதானிக்க வைத்ததோ அதேபோல் தேவதைகளின் தீட்டுத்துணி என்ற ஆழ்குறியீடு கர்ணன் என்னும் ஆளுமையை கூர்ந்து நோக்கவைத்தது. சக்கரவர்த்தியை கர்ணனைப் போல் ஒற்றை பாிணாமத்தில் வைத்து நோக்கமுடியாது. ஆறுமுகநாவலர், இராமநாதன் முதலான சனாதனிகள் மீது அவர் வைத்த காட்டமான விமர்சனமும்  வௌ;ளாளர் மீது அவர் வைத்த எதிர்ப்பு அரசியலும் அவரை தனித்துவமான ஆளுமையாக ஈழத்து இலக்கிய உலகம் அடையாளப்படுத்தியது. ‘ஆடு புலி குல்லுக்கட்டு’, ‘படுவான்கரை’, ‘எண்ட அல்லாஹ்’ முதலான சிறுகதைகளுக்கூடாக நன்கு அறியப்பட்டவர். சக்கரவர்த்தியோடு ஒப்பிடுமிடத்து தலித்தியசிந்தனை சாதிய ஒடுக்குமுறை தொடர்பான புhpதல்கள் கர்ணனிடம் இல்லை என்றே கூறலாம். ஆட்காட்டி இதழ் - 5இல் இவர் அளித்த செவ்வி இதனைத் தெளிவாகவே உறுதிப்படுத்தி நிற்கிறது. ஆகவே கர்ணனின் புனைவுலகம் வேறு சக்கரவர்த்தியின் புனைவுலகம் வேறு. அவற்றின் பேச்சுமொழிகள் கூட ஒரே புள்ளியில் சந்திப்பன அல்ல. 
ஆனால் கர்ணனின் நோக்கும் சோபாசக்தியின் பாதையும் ஒன்றில் ஒன்று வெவ்வேறானவையல்ல. கர்ணனுடன் ஒப்பிடுமிடத்து சோபசக்த்தியின் பார்வை தூரநோக்கு கொண்டது. கர்ணனைப் போல் சோபாசக்தி தன் படைப்பில் தனியே புலி எதிர்ப்பை மாத்திரம் செய்து கொண்டிராது ‘குண்டுடயானா’ உட்பட தன் பல்வேறு பிரதிகளுக்கூடாகவே அரசபயங்கரவாதத்தையும் எதிர்த்தவர். வேலைக்காிகளின்கதைக்கூடாக தன்னைத் தலித்திய சிந்தனாவாதியாகவும் நேர்த்திமிக்க ஆளுமையாகவும் அடையாளப்படுத்திக் கொண்டவர். கர்ணனைப் போன்று தனக்கு கிடைத்த சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி எந்தப் படைப்பாளியையும் அவர் அவதூறு செய்ததில்லை. தீராநதி(ஜீலை-2004) நேர்காணலில் கற்சுறா, சாருநிவேதிகா போன்றவர்கள் உங்கள் சிறுகதைகளை நிராகாிக்கிறார்களே என்று வினாவியபோது அது அவரவர்களின் கருத்து. அதை அவர்கள் முன்வைக்க அவர்களுக்கு சுதந்திரமுண்டு எனப் பதில் அளித்தவர். இந்தப் பக்குவத்தையும் நிதானத்தையும் கர்ணனிடம் காணமுடியாது.இதனைப்போன்று ஷோபாசக்தியின் புனைகதைகளில் ஒளிரும் படைப்பாளிக்கும் படைப்புக்கும் உள்ள ஒட்டுறவையும் கர்ணனின் கதைகளில் காண முடியாது. ஏனெனில் கர்ணனின் பெரும்பாலான சிறுகதைகள் கதை சொல்லிக்கூடாகவே கட்டுருகிறது. படர்கையில் நின்று பேசும் பெரும்பாலான கதைகளில் கர்ணனே கதாபாத்திரமாக உருப்பெற்றாலும் “அவன், அவள், அவர்” என்னும் படர்க்கைக் கூடாகவே சிறுதைகள் நகர்கின்றன. போரின் சாட்சியாகவும் போரின் பங்காளியாகவும் விளங்கிய நான்” என்னும்; தான் சார்ந்த தன்னுலகை கர்ணன் தூரநின்றே பார்வையாளனைப் போல் நோக்குகின்றார். தப்பிப்பதற்கான எத்தனமாக மயல் கொள்ளும் இப்புனைவு உயிர்பென்னும் விம்பத்தை சிதைத்து கருத்தியல் பொருண்மையாக உருக் கொள்கிறது. புலியெதிர்ப்பு என்னும் நுண்ணரசியல் கர்ணனின் ஒவ்வொரு கதைகளிலும் முகம் கொள்கிறது. அதுவே கர்ணனின் சிறுகதைகளாக தகவமைகிறது. “எல்லோரும் பேசாமலிருந்தோம். பேசுவதற்கு விடயங்களிருக்க வில்லை. வாழ்வின் மீதான பிடிப்பையும் நம்பிக்கைத் துரோகத்தையும் ஒவ்வொரு பக்கத்திலும் ஏந்திய தராசு எந்தப்பக்கம் சாயும். நண்பன் தலையைக் குனிந்தபடி இருந்தான்” என்னும் கொலம்பசின் வரைபட சாட்சியம். மக்களின் பிரச்சினைகளை அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்திய புலிச்சூழலில் ஏவாலாள் வழங்கப்பட்ட இம்சிக்கப்பட்டகனியைச் சுவைத்த ஆதாமின் சாட்சியாக யோ.கர்ணனின் சாட்சியம் துலங்குகிறது. போர்கள் ஓய்ந்து தமிழனின் வீரஉரைகள் மங்கிப்போன தருணத்தில் ஆதவனின் அஸ்தமனத்துக்குப்பின் தோன்றும் விடிவௌ்ளியைப் போன்று அன்றைய பேரெழுச்சியில் கர்ணனால் பேசமறந்த கதைகள் ஈழத்தின் புதிய அத்தியாயத்தை எழுதிச் செல்கின்றன.

ஆரம்பத்தில் இருந்து இற்றைவரை கர்ணன் தன்னை நிலைப்படுத்துவதற்காகவே புலிகளின் செயற்பாடுகளை மட்டுமே விமர்சித்தவர். 41ஆவது இலக்கியச் சந்திப்பைத் தொடர்ந்து தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகவும் நாட்டுப்பற்றளானகவும் அடையாளப்படுத்த முயன்ற கர்ணன் அதிலிருந்து தோற்றுப்போய் அவசர அவசரமாகக் கழன்று, தன்னை பலன்ஸ் பண்ணுவதற்காகவும் நீதிமானாகவும் தன்னை தமிழ் உலகில் அடையாளப்படுத்தவும் தாயாரித்த புனைவே கொலம்பஸின் வரைபடங்கள். இனவிடுதலைக்கான யுத்தம் எப்படி பதின்மவயது இளைஞரை ஈர்ந்தது என்பதை கூற விளைந்த இக்கதை போராளிகள் சமூகத்தை எதிர்கொண்ட வாழ்வையும் தமிழ்ச் சமூகம் போராளிகளை எதிர் கொண்ட வாழ்வையும் பேசி நிற்கிறது. புலிகள் அமைப்பின் அரசியல்துறைக்கும் புலனாய்வுத்துறைக்கும் இடையிலான இடைவெளியை அம்பலப்படுத்தும் இத்தொகுப்பு ஒரு சில தணிக்கையுன் கடற்பரப்பு ஈறாக இலங்கை அரசு தமிழர்கள் மீது மேற்கொண்ட வன்முறைகளையும் கூறிநிற்கிறது. அதனால்தான் என்னவோ அத்தொகுப்பு இற்றைவரை அதிக கவனத்தைப் பெறவில்லை. என்னைப் பொறுத்தவரை கர்ணனின் படைப்புக்களில் மிகவும் பலவீனமான தொகுப்பு அது என்பேன். 

00
நன்றி - மறுகா

Related

விமர்சனங்கள் 8423809679150199327

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item