மீட்பார்களின் பயணமும் ஒழுங்கமைவின் சிதைவுகளும் - பாதீனியம் நாவலை முன்வைத்து - சி.ரமேஷ்மிகைப்படுத்தப்பட்ட முற்கற்பிதங்களுடனும் ஒற்றைப் பரிமாணத்தினூடாகவும் திட்டமிடப்பட்ட முறையில் வரலாறு புனைவினூடாக மீளுருவாக்கம் செய்யபடும் போது மனதின் நோக்குக்கும் பார;வைக் கோணத்துக்கும் ஏற்ப வரலாற்று நிகழ்வுகள் தவிர;க்கப்படுவதுடன் விடுபடுதல்கள் இயல்பாகவே எழுகின்றன. வரலாறு தனிமனித விதந்தேத்தலையும் துதிபாடலையும் மையப்படுத்தி எழும் போது வரலாறு புனைவாக மாற்றுருவாக்கம் செய்யப்படுமேயன்றி படைப்புருவாக்கம் எச்சந்தரப்பத்திலும் வரலாற்றின் புனைவாக அமையாது என்பது வெளிப்படை. இச்சட்டகவெளிக்குள் தன்னைப் புதைத்துக்கொண்ட வெளிவந்த நாவலே கலைவாணி இராஜகுமாரன் என்னும் தமிழ்நதியால் எழுதப்பட்ட பார;த்தீனியம் நாவலாகும். 

போராட்ட வரலாறு குறித்த பன்முகப்படுத்தப்பட்ட ஆழமான புரிதலின்மையும் புலி அரசியலின் பாற் கொண்ட அதீத ஈடுபாடும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய விடுதலை இயக்கப் போராளிகள் குறித்த எதிர்ப்புணர்வும் நாவலின் இயங்குவெளியைச் சிதைத்து விடுகின்றன. ஈழப்போராட்டத்தின் உறுதிக்கட்டுமானம் சிதையத் தொடங்கிய காலவெளியை மீள்வாசிப்புக்குட்படுத்தும் போது அவை ஆழமாகப் பரிசீலிக்கப்படவேண்டும். கொள்கைத் திட்டங்களை வரையறை செய்து கொண்டு வரலாற்றை நோக்காது மனிதநேயப் பார்வையுடன் வரலாற்றுத் துயர்களை, இழப்புக்களை, சம்பவங்களை இயல்பான கோணத்தில் நேர்த்தன்மையுடன் நோக்கி ஈழத்து அரசியல் வரலாற்றை மீள்வாசிப்புக்கு உட்படுத்தவேண்டும். துயர் கவிந்த தமிழ் மக்களின் சிலுவைப்பாடுகளின் வெளிப்பாடுகள் ஒரு பக்கச் சார்பாக நோக்கப்படும் போது வரலாற்றுப் புனைவொன்றின் பிரதி தன்னியல்பிழந்து ஒற்றைப்பாpமாண அரசியலுக்கூடாக முகம் பதிக்கும் என்பதற்குத் தக்கசான்று தமிழ்நதியின் பார;த்தீனியம் ஆகும்.

சு+ரியன் தனித்தலையும் பகல் எனும் முதல் தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் அடையாளங் காணப்பட்ட கலைவாணி இராஜகுமாரன் என்னும் தமிழ்நதி 1996 இலிருந்து கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர;சனங்களை எழுதி வருபவர். இறுதியாக தமிழ்நதியால் எழுதப்பட்ட ‘பார;த்தீனியம்’ 1983க்குப் பிற்பட்ட ஈழத்தினை குவிவுபடுத்தி எழுதப்பட்ட நாவலாகும். குறிப்பாக 1987 ஒப்பந்தத்துக்குப்  பின்னரான காலப்பகுதியில் இலங்கை, இந்திய இராணுவத்தால் ஈழத்தமிழர்; எதிர் நோக்கிய அவலங்களை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட இந்நாவல் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் எழுச்சியையும் இச்சு+ழலில் அவர;கள் எதிர; கொண்ட துயர்களையும் பேசுகிறது. ஒரு பக்கசார்பு மனோநிலையில் எழுதப்பட்ட இந்நாவலில் பெரும்பாலான பகுதிகள் விபரணங்களாகவே காணப்படுகின்றன. தமிழ் மக்களுக்கு இந்திய இராணுவம் செய்த அநீதிகளையும் அவர;களின் துணையுடன் மாற்றுக் குழுக்களால் அரங்கேற்றப்பட்ட  சகோதரப்படுப்கொலைகளையும் நாவலில் சம்பவக் கோவையாக்கி ஆவணப்படுத்த விளைவது அவரின் சார்புநிலை மனோ இயங்கியலின் விளைவெனக் கூறினாலும் நாவலில் எடுத்துரைக்கப்பட்ட சம்பவங்களோ, நிகழ்வுகளோ பொய்யில்லை. இந்திய இராணுவத்தின் அநாகாpகப் போக்கால் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர் கொண்ட இன்னல்களையும் இந்தியாவுக்கு எதிரான தமிழ்மக்களின் மனோநிலை மாற்றங்களையும் அப்பட்டமாக புனைவற்று தமிழ்நதியின் நாவல் வெளிப்படுத்துகிறது. நாவலில் சித்திhpக்கப்படும் பன்னிரண்டு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில் இருபத்தி மூன்று வயதில் திலீபனின் உயிர் பறிக்கப்பட்டதை அடுத்து தமிழ் மக்களின் நம்பிக்கைகள் சிதறு  தேங்காய் போல சில்லுச் சில்லாகச் சிதறிப் போனதையும் நாவல் அருமைநாயகத்தினூடாக சித்திhpத்துச் செல்கிறது. ஆயுதக்களைவு, ஆட்கடத்தல், இயக்கங்களுக்கிடையிலான மோதல், பிரம்படிப்படுகொலை முதலான விடயங்களை தமிழ்நதியின் நாவல் பேசினாலும் அவை உணர்வுத் தளத்தில் விபாpக்கப்படவில்லை. பக்கச் சார;பற்ற நிலையில் ஈழத்தில் நிலைகொண்ட இந்திய இராணுவச் சு+ழலை சயந்தனின் ஆறாவடு ஏலவே வெளிப்படுத்தியிருந்த நிலையில் தமிழ்நதியின் இந்நாவல்  ஈழத்தமிழர்களின் பொதுமனோநிலையில் மாற்றியக்கங்கள், இராணுவம் குறித்தான எவ்வகையான கற்பிதங்கள் உண்டோ அவை குறித்தான சார்புநிலைப் பதிவுகளாகவே வெளிப்படுகிறது. இயக்கங்களுக்கிடையிலான மோதல்களை நாவல் வெளிப்படுத்தினாலும் அம்மோதலுக்கு அடிப்படையாக அமைந்த சம்பவங்கள குறித்த பதிவுகளையோ போராட்டத்தின் உட்சிடுக்குகளையோ  வெளிப்படுத்தவில்லை. 

பாவற்குளத்தில் வசிக்கும் குறும்புக்கார மாணவர;களில் ஒருவனான வசந்தன் தன் காதலியான வானதியைப் பிரிந்து தவக்குமாரன், சத்தியன் வில்சன், சிதம்பரம் முதலான பதினொருவர;களுடன் இந்தியா சென்று ஆயுதப் பயிற்சியை மேற்கொள்கின்றான். வசந்தன் பரணியாக பெயர; மாற்றம் செய்யப்பட்டு ஐந்தாவது படையணியில் ராதாவின் மேற்பார;வையின் கீழ் பயிற்சியை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பி அரசியல் வேலைகளிலும் இயக்கப் பணிகளிலும் ஈடுபடுகிறான். இயக்கத்தின் மீது பற்றுறுதியும் தலைவர் மீது பேரன்பும் கொண்ட பரணி மக்கள் மீது நேயம் கொண்ட அரசியல் போராளியாகவும் பல்வேறு சமர;களில் பங்கு கொண்ட விடுதலை வேங்கையாகவும் உருமாறி ஈற்றில் இயக்கத்தை துறந்து  காதலும் கைகூடாத நிலையில் உதிரியாகி தனித்துவிடப்படுவதுடன் நாவல் நிறைவு பெறுகிறது. பரணி வானதி ஆகிய இரு பிரதான பாத்திரங்களின் ஊடாட்டத்தை மையச்சரடாகக் கொண்டு நாவலை நடத்திச் செல்லும் தமிழ்நதி இந்திய இராணுவத்தின் காலப்பகுதியில் செய்யப்பட்ட கடுமையான சித்திரவதைகள், குற்றச் செயல்கள், பாலியல்ரீதியான குற்றங்கள், கொலைகள் என்பனவற்றைப் பேசுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறார;. பார;த்தீனியம் என்ற பெயர் சு+ட்டப் பெற்றமையும் இந்நோக்கத்தின் விளைவாகும். புலிகளை அழிப்பதன் பொருட்டு இந்திய இராணுவம் சகோதர இயக்கங்களைப் பயன்படுத்தி கொண்ட பின்னணி குறித்தும் இந்நாவல் விரிவாக ஆராய்கிறது.

 ஆச்டெரேசியே வகைப் பு+ந்தாவரமான பார்த்தீனியம்  நட்சத்திரம் போன்ற வெண்பு+க்களால் படரப்பட்ட அழகிய தாவரமாகும். இது 3 அல்லது 4 அடி வரை வளரக் கூடிய ஆழ்வேர்களைக் கொண்டது. இந்திய இராணுவம் இலங்கையில் நிலை கொண்ட சமயத்தில் அவர;களால் கொண்டு வரப்பட்ட செம்மறி ஆடுகளின் பிலுக்கைகளில் இருந்து பரவிய தாவரமாக இது காணப்படுகின்றது.  இத்தாவரத்தின் மகரந்தம் மற்றும் வித்துக்கள் விலங்குகள் மற்றும் மனிதர;களுக்கு சுவாசக்கோளாறுகளையும், ஒவ்வாமைகளையும் ஏற்படுத்துகின்றன.  இவற்றை உண்ணும் பசுக்களின் பால் ஒரு வித கசப்புத்தன்மையுடன், நச்சுத்தன்மையையும் கொண்டது. இயற்கையெதிரியாக அறியப்படும் இத்தாவரம் மண்ணின் வளத்தையும் உறிஞ்சி எடுத்து விடுகிறது. இலங்கையில் சமாதானத்தையும் அமைதியையும் ஏற்படுத்தி தமிழர;களுக்கு நன்மைகளைச் செய்யும் பொருட்டு  இந்தியாவினால் அனுப்பப்பட்டஇந்திய இராணுவம் புலிகளை அழித்தொழிக்கும் நோக்கில் பொது மக்களுக்கு எண்ணில்லாத துன்பங்களை விளைவித்தது. இதன் உள்ளகக் குறியீடே பார;த்தீனியம்.  27 னுநஉ 2016 அன்று இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்தது என்ன? என்ற தலைப்பில் தினக்குரல் இந்திய இராணுவப் புலனாய்வுத் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட கேணல் ஆர்.ஹரிகரனின் பேட்டியைப் பிரசுரித்திருந்தது. அதில் உரைக்கப்பட்ட கருத்துக்கள் இந்தியாவின் உள்ளகநோக்கையும் இரண்டகநிலையையும் வெளிப்படையாக தெளிவுபடுத்தி இருந்தது. இலங்கை அதிபர் “ஜெயவர்த்தனாவுக்கு நம்பிக்கை அளிப்பதற்காகவே இந்திய அமைதி காக்கும் படைகள் அனுப்பப்பட்டன.” எனக் கூறியிருந்தார். எனவே இந்தியாவின் கபட நாடகத்தையும் இரட்டை நிலைப்பாட்டுத் தன்மையையும் இது தோலுரித்துக் காட்டுகின்றது. அமெரிக்காவைச் சேர்ந்த சிகரில்லா அபச்சி மக்களுக்குப்  ‘பார;த்தீனியம்’ மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட போதும் அதனால் தீமையே அதிகம். அது போல இந்தியாவால் 13ஆம் திருத்தச்சட்டம், மாகாணசபை போன்ற ஒரு சில நன்மைகள் விளைந்த போதிலும் இந்திய அமைதி படையினரால் விளைந்த கேடுகளோ ஏராளம். எனவே பார;த்தீனியம் என்னும் தலைப்பு இந்நாவலுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை வழிமொழிதல், இந்திய இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட வன்கொடுமைகளை வெளிப்படுத்தல் என்னும் நோக்கிளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்;ட இந்நாவல் புனையப்பட்ட கதையாடல் வாயிலாக ஈழப் போராட்டத்தின் குறிப்பிட்ட கால வரலாற்றைப் பேசிச் செல்கிறது. தமிழ்நதியின் போக்குக்கும் நோக்குக்கும் எற்ப இந்நாவல் இந்திய இராணுவம் தமிழ் மக்களுக்கு இழைத்த சீர்கேட்டை வெளிப்படுத்துகின்றாரேயன்றி விடுதலைப் புலிகளின் உள்ளக அரசியல் முரண்பாடுகளையோ அல்லது அக்காலப்பகுதியில் அவர;களால் நிகழ்த்தப்பட்ட மனித வன்முறைகளையோ வெளிப்படுத்தவில்லை. எனவே ஈழத்தமிழரின் வரலாறு தமிழ்நதியின் மனப்போக்குக்கு ஏற்ப துதிபாடுதல், வழிபடுதல், விடுபடுதல்களுடன் கூடிய புனைவுடன் கூடிய வரலாறாக அமைகின்றதேயன்றி முழுமையான வரலாறாக அது அமையவில்லை. எனவே போதாமைகளுடன் கூடிய எதிர்விளைவுகள் பற்றிய பிரக்ஞையுடனே பார்த்தீனியம் நாவலை அணுக வேண்டியிருக்கின்றது. 

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர; பிரபாகரன் மற்றும் மாத்தையா, கிட்டு, ராதா, ஜெயம், பொன்னம்மான். புலேந்தியம்மான், திலீபன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகளும் அதே பெயரிலேயே கதாபாத்திரங்களாக வருகின்றனர;.  அக்காலப்பகுதியில்  உபதலைவராக விளங்கிய மாத்தையா தவறான கண்ணோட்டத்திலேயே சித்திரிக்கப்படுகின்றார். இது தமிழ்நதியின் புலிச் சார்ப்புத்தன்மையையே எடுத்துக்காட்டுகின்றது. கோபாலசாமி மகேந்திரராஜா என்னும் இயக்கப்பெயரையுடைய மாத்தையா விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் 1989 இல் விடுதலைப்  புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் முன்னணி என்னும் அரசியல் கட்சியினுடைய தலைவரகவும் செயற்பட்டவர். 1987 -1988 காலப்பகுதியில் வன்னிப்பிரதிநிதியாக இருந்த இவர் அக்காலப்பகுதியில் சகோதரப் படுகொலைகளை முன்னின்று நடாத்தியவர் 1989 ஆம் ஆண்டு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சுட்டுக்கொலைச் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னரே மாத்தையா இந்திய உளவு நிறுவனமான றோவுடன் (சுயுறு - சுநயளநயசஉh யனெ யுயெடலளளை றுiபெ) இரகசிய தொடர;புகள் பேணினார; என்னும் குற்றச்சாட்டு விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்டது. அதுவரை அவரை நோக்கி ஒரு விரல் கூட அசைந்ததாக நான் அறியவில்லை. அத்தகைய ஒருவரை ஆரம்பம் முதல் இழிவாகச் சித்திரிப்பது தமிழ்நதியின் புலி அபிமானத்தின் வெளிப்பாடு எனலாம்.
நாவலில் பேசப்பட்ட விடயங்களுக்கு அப்பால் விடுபடுதல்கள் அதிகளவில் காணப்படுகின்றன. தரவுகள் பற்றிய போதாமைகளுக்கப்பால் தமிழ்நதியின் புலிசார்பு குறிப்பான, தமிழர் வாழ்வில் முக்கியமானதெனக் கருதப்படும் சம்பவங்கள். நிகழ்வுகளைக் கூட பேச அனுமதிக்கவில்லை. குறிப்பாக அக்காலப்பகுதியில் முருகேசு ஆலாலசுந்தரம், வி.தர்மலிங்கம் ஆகியோரின் படுகொலைகள் மக்களை அதிரவைத்தன. இவர்கள்  ஈழ தேசிய விடுதலை முன்னணியினரால் சுடப்பட்டதாகக் கூறப்பட்டாலும் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோவின் கட்டளைக்கிணங்க தமிழீழ விடுதலைக் கழகமே நிகழ்த்தியதாகப் பரவலாக இன்றும் தமிழ் மக்களால் நம்பப்படுகிறது. திம்புப் பேச்சுவார்த்தைகளுடன்  இதனையும் இணைத்து நாவல் எழுதப்பட்டிருந்தால் நாவல் பிறிதொரு தளத்துக்கு சென்றிருக்கும். அது போல இக்காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் மேற்கொல்லப்பட்ட சிறி சபாரத்தினம், ராஜினி திரணகம, பத்மநாபா முதலானோரின் படுகொலைகள் நூலில் உள்ளடக்கப்படாமையும் தமிழ்நதியின் புலிச் சார;புநிலைக்கு தக்க சான்றாகும். வரலாற்றின் ஊடாக புனைவை மேற்கொள்ளும் போது வரலாறு சார;புநிலையற்று வெளிப்படுத்தவேண்டும் இதனை தமிழ்நதியின் நாவலில் காணமுடியாமல் போனது தமிழர;களின் துர; அதிஸ்டமே.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சிகள் குறித்து குறிப்பிடும் அத்தியாயங்களில் உயிர்ப்பில்லை. அதில் மிகைப்படுத்தப்பட்ட விவரணத்தன்மைகளே அதிகம் உள்ளன. குணாகவியழகனின் நஞ்சுண்டகாடு உணர;வும் உயிர்ப்புமாக பயிற்சி முகாம்களில் இடம்பெறும் தொடர; பயிற்சிகளைக் கூறிச் செல்ல உணர்வின் தீவிரத்தன்மையுடனும் புனிதத்தின் கட்டுமானங்களுடனும் தமிழ்நதியால் மொழியப்படுகின்ற பயிற்சிகள், பயிற்சி முகாமின் விபரணைகள் யதார்த்த இயங்கியல் போக்கில் இருந்து விடுபட்டு போகின்றமையைக் காணலாம்.குணாகவியழகனின் நாவலில் சம்பவ விவரிப்புகளுக்கூடாக புனைவைக் கட்டமைக்கும் அனுபவங்களுடன் கூடிய கதை சொல்லுதலின் மொழி பயிற்சி முகாம் குறித்த விடயங்களைச் சாத்தியமாக்குகின்றது. இது போல உதயனின் ர.p.83 உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த பயிற்சிகளை விவரணத்தன்மையில் மொழிந்தாலும் அப்பயிற்சியில் கலந்து கொண்டவனின் உணர்வு நிலையை அது உளப்பு+ர்வமாகச் சித்திரிக்கிறது.
தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவலில் கட்டுரைத் தன்மையான விவரணமொழியே பெரும்பாலான இடங்களை ஆக்கிரமிக்கிறது. இந்திய இராணுவத்தின் பேரழிவுச் சித்தரிப்பினை எடுத்துக் கூற  மினிமலிசம் என்னும் எளிமையாகச் சொல்லும் குறைத்துரைத்தல் முறையைத் தமிழ்நதி இந்நாவலில் கையாண்டு இருப்பாரேயானால் அது நாவலை எளிதாக வாசகர் கண்டடைவதற்கும் அதனோடு ஊடாடுவதற்கும் வாய்ப்பாக அமைந்திருக்கும். அத்துடன் உணர்வுகளை மிகையில்லாமல் நம்பகமாகச் சொல்லவும் இந்நடை கைகொடுத்திருக்கும். ஆனால் நாவலில் இடம்பெறும் தேசம், தேசியம், புலிகள் குறித்தான தொழுகைகள் வழிபாடுகள், இந்திய இராணுவம் குறித்தான எதிர்ப்புணர்வு மீதெழும் உணர்வுநிலை மனோபாவம் நாவலின் மொழியைப் பல்வேறு இடங்களில் சிதைக்கிறது. அத்தியாயம் 45இல் அறிமுகமாகும் சுபத்திரா தனக்கு நடந்த பாலியல் கொடுமைகளை வானதியிடம் கூறும் இடங்கள் தமிழ்நதியின் வக்கிர மனோ நோக்கை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது. எந்த யாழ்ப்பாணத்து குடும்பப் பெண்ணும் தான் சிதைக்கப்பட்ட கதையை முன்பின் அறிமுகமாகாத பெண்ணிடம் வரிவரியாக விவரிக்கமாட்டாள். “இந்த உடம்பை நினைச்சா அருவருப்பா இருக்கு. ஒருத்தன் என்ரை வாய்க்குள்ள… சாப்பிட முடியயேல்லை. அவன்ரை மூத்திர மணந்தான் ஞாபகம் வருகுது” என முன்பின் தெரியாத வானதியிடம் சுபத்திரா கூறுவது இந்திய இராணுவத்தின் இழிந்த செயலை வெளிப்படுத்த தமிழ்நதியால் கையாளப்பட்ட அருவருப்பான மொழிதல் உத்தியெனலாம். இன்றைய சு+ழலில் உடனடியான பதிவுகள் உணர்வுபு+ர்வமாக வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் உணர்வுரீதியான புனைவுகள் என்னும் பெயரில் ஆபாசமாக வருவது கண்டிக்கத்தக்கது.

இதுபோல பல்கலைக் கழக முன்னாள் மாணவன் அருணகிரி விஜிதரனின் கடத்தல் வெறுமனே பதிவுகளாகவும் சம்பவங்களின் கோர்வைகளாகவுமே காணப்படுகின்றன. யாழ் பல்கலைக்கழகத்தில் பாரியளவில் உணர;வுபு+ர;வமாக முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம் தமிழ்நதியால் கொச்சப்படுத்தப்படுகிறது. நாவலில் பல இடங்கள் இப்போராட்டத்தைக் கொச்சப்படுத்தப்படும் வகையில் வெளிப்படுகின்றன.1986ஆம் ஆண்டு பல்கலைகழகத்தில் பகிடிவதைகளில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் மூர;க்கத்தனமாகத் தாக்கப்பட்டனர். இதனால் கொதிப்புற்ற மாணவர;கள் சகோதரப்படுகொலைகள் களையப்படவேண்டும் பல்கலைக் கழக மாணவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி வன்முறைக்கெதிரான அமைப்பொன்றை உருவாக்கி போராட்டங்களை நிகழ்த்தினர். இதற்கு தலைமை தாங்கி விஜிதரன்  போராட்டங்கள் முன்னெடுத்த சு+ழலில்  4.11.86 அன்று தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு அன்றிரவே கொலை செய்யப்பட்டார;. விஜிதரன் கொலைசெய்ப்பட்டதை அறியாமல் 18.11.86 முதல் பல்கலைக் கழக மாணவர;கள் சிலர; சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர;. அப்போராட்டம்    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பெருமெடுப்பில் அதில் மாணவர;கள் பங்குபற்றினர;.
அச்சமயத்தில் 22.11.86 சனிக்கிழமை அன்று முல்லைத்தீவு மேற்குப்பகுதி பாடசாலைகளின் மாணவர; ஒன்றியங்களும் பாடசாலை பழைய மாணவர;களும் ஒன்று சேர;ந்து பாதயாத்திரை ஒன்றை மேற்கொண்டனர;. பொதுமக்கள் என்ற பெயரில் விடுதலை அமைப்பொன்றினால் அப்பாதயாத்திரையை முடக்கப்பட்டது. விஜிதரன் விடுதலைக்கு முன்னின்று உழைத்த விமலேஸ்வரன், சேரன், சபாநாவலன், ,ராயகரன் முதலான மாணவர;களுக்கு கொலை அச்சுறுத்தல் ஒன்றும் விடுக்கப்பட்ட சு+ழலிலும் விஜிதரனின் பெற்றோர;களுக்கு விஜிதரன் வெளிநாடு ஒன்றில் வைத்து விடுதலை செய்யப்படுவார; என விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கிட்டு கூறியதன் அடிப்படையிலும் அப்போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் நாவலின் இருபத்தேழாம் அத்தியாயத்தில் அக்கொலை ரதியின் கூற்றினூடாக நியாயப்படுத்தப்படுகிறது. “விசரா உனக்கு? றாக்கிங் பண்ணுறாங்கள்…ப்ரா சைஸ் என்னெண்டு கேக்கிறாங்கள், எண்டு முட்டைக்கண்ணீர; வடித்துக் கொண்டு திரிஞ்சது நீ தானே… பகிடிவதை செய்தவர;களுக்கு ஆதரவாக விஜிதரன் இருந்தான் என்ற காரணத்தாலேயே அவன் கடத்தப்பட்டதாக பல்கலைக் கழகத்தினுள் கதை உலாவிற்று” என்ற கூற்றுக்கள் அப்பாவி மாணவனின் கொலையை நியாயப்படுத்துகின்றன. பகிடிவதைக்குத் தண்டனை மரணம் என்பதை தமிழ்நதி ஒருவரால் தான் நியாயப்படுத்த முடியும். 

விஜிதரனுக்காக உண்ணா விரதமிருந்த ஔவை, குகன். செல்வநாயகம், பிரசாத், விமலேஸ்வரன், விஜயகுமாரி முதலானோரை நாவலில் வானதி என்ற பாத்திரம் பார;க்கச் சென்று அவர;களின் முகத்தை ஆராய்கிறது. வானதி பாத்திரம் மகத்தான கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்துகிறது. அது தான் உண்ணாவிரதம் இருந்து சோரவேண்டிய நண்பர்களின் முகங்கள் வானதி பார்க்கும்போது தெளிவாக இருக்கின்றன. உண்டு விட்டு அவர்கள் உண்ணாவிரதம் இருப்பதாக கூறி தமிழ்நதியால் வானதி மூலம் சோடிக்கப்பட்டு இட்டுக்கட்டப்படும் அவ்வுரையாடல் என்றோ நடந்த உன்னதமான மாணவர;களின் போராட்டத்தைக் கொச்சப்படுத்துகிறது. இப்பின்னணியில் எழும் பதிவுகளும் நாவலில் உணர;வுபு+ர;வமாகக் கூறப்படவில்லை.

விடுதலைப் போராட்டத்தின் மகத்துவத்தையும் போராளிகளின் தியாகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நதியால் படைக்கப்பட்ட பாத்திரங்கள் அப்பணியைச் செவ்வனே செய்திருந்தன. போராளிகள் தாய்மண் மீது கொண்ட அன்பினையும் தேசியத் தலைவர; மீது கொண்ட விசுவாசத்தையும் பரணி பாத்திரம் துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. நாவலில் இடம் பெறும் மரியான், ஜெசி, மதுரன், வினோதன்,  ரமே‘;, ஜனா. மோகன், செந்தூரன் முதலான பல பாத்திரங்கள் விடுதலைப் புலிகளின் முக்கியத்துவத்தையும் போராளிகளின் போராற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள். அதிலும் செந்தூரன் பாத்திரம் தன்னோடு தப்பியோடி வரும் சக தோழி இராணுவத்தின் காவலரண் வேலியில் சிக்குண்டு தப்பமுடியாது தடுமாறிய வேளையில் அவளைக் காப்பாற்றி விட்டு அவளுக்காக தன்னுயிரை நீக்குகின்ற பாத்திரமாகும். தியாகங்களின் வழி கட்டியெழுப்பட்டதே விடுதலைப் புலி இயக்கம் என்னும் கூற்று தமிழ்நதியால் இப்பாத்திரம் மூலம் மெய்ப்பிக்கப்படுகிறது. அப்பாத்திரமும் அப்பணியைக் கச்சிதமாகச் செய்கிறது. 
மாற்று இயக்கத்தைச் சேர;ந்த போராளிகளை கொடூரமானவர;களாகவும் கேவலமானவர;களாகவும் காட்டுவதற்கென்று தமிழ்நதியால் உருவாக்கப்பட்ட தெய்வம், சீலன், மாணிக்கதாசன், பரந்தன் ராஜன் முதலான போராளிகள்  புலிவேட்டையில் ஈடுபடுபவர;களாகவும் ஈனமற்றவர;களாகவும் சித்திரிக்கப் படுகின்றனர;. உண்மையிலேயே மாணிக்கதாசன், பரந்தன் ராஜன் போன்றவர;கள் மனித வேட்டையாடிய மிருகங்களாகக் காணப்பட்டாலும் இக்காலப்பகுதியில் நு.P.சு.டு.கு இல் இருந்த பத்மநாபா, சிவா, பாறுக், நேசன், பாபு, சுகு முதலான போராளிகள் பலர் மனிதநேயமுள்ளவர;களாகவும் மக்கள் மீது அன்பு கொண்டவர;களாகவும் காணப்பட்டனர;. அவர;களைக் காயடிப்புச் செய்து நாவலை நகர;த்திச் செல்வது நாகரிகமான செயலன்று. அதிலும் மரியசீலன் என்னும் பாத்திரத்தைத் தலித்தாகச் சித்திரித்து தன்னை ஈனமற்று மனிதாபிமானமற்று நடாத்திய சமூகத்தை பலிவாங்க அவன் ஆயுதம் தரிப்பதாகச் சித்திரிப்பது தமிழ்நதியின் வக்கிரமனப்பான்மையின் பிறிதொரு வெளிப்பாடாகும். மாற்று இயக்கப் போராளிகள் தலித்தாகத் தான் இருக்க வேண்டும் என தமிழ்நதி சித்திரிப்பது நாகரிமான செயலாகப்படவில்லை. விடுதலைப் புலிகளால் கொடூரமாகப் பலிவாங்கப்பட்ட, பாதிக்கப்பட்ட பலர; மாற்று இயக்கத்தைச் சேர;ந்த போராளிகளாக உருமாறி யுள்ளனர;. அது குறித்த பதிவுகளோ, குறிப்புக்களையோ நாவலில் காண முடியாதுள்ளது. அரசியல் சாய்வுகளுக்கு அப்பால் நின்று வரலாற்றைப் நோக்குகின்ற தூல சிந்தனையின்மையின் விளைவே இதுவெனலாம்.

நாவலின் பிரதான நோக்கங்களில் ஒன்று கறைபடியாத, புனிதமான அமைப்பாக விடுதலைப் புலிகளைச் சித்திரிப்பது. நாவல் எந்நோக்கத்துக்காக எழுதப்பட்டதோ அந்நோக்கை நாவல் செவ்வனே செய்தது எனலாம். விடுதலைப் புலிகள் பற்றிய விமர;சனங்களை முன் வைப்பவர;களாக அமைகின்ற தனஞ்சயன், கீதபொன்கலன், ஜீவானந்தம் முதலான பாத்திரங்களும் பார;த்தீனியத்தின் இறுதிப்பகுதியில் விடுதலைப் புலிகளின் அரசியல் செல்நெறியை ஏற்றுக் கொள்பவர;களாகவே மனமாற்றம் அடைவதும் இதனை தெளிவுபடுத்துகிறது. விடுதலைப் போராட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்துச் சென்றனர; என்பது வெளிப்படை. அப்போராட்டம் கொச்சப்படுத்துவது, காயடிப்பது எனது நோக்கமன்று. ஆனால் அவர்களால் மனிதபிமானமற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை துரோகத்துக்கான தண்டனையாக வழிமொழிவது தவறு. அதனையே நான் கண்டிக்கிறேன். 

தணிகாசலம், அருமைநாயகம், வேல்முருகு, சஞ்சீவன், தனபாக்கியம் முதலான பாத்திரங்கள் யாழ்ப்பாண மண்ணோடு கலந்து ஒட்டி உறவாடுகின்ற பாத்திரங்களாக அமைந்தாலும் அவையும் நாவலின் நோக்குநிலை கருதி உருவாக்கப்பட்ட பாத்திரங்களாகும். ஆயினும் இலங்கை அரசாலும் இந்திய இராணுவத்தாலும் நிலைகுலைந்த யாழ்ப்பாண சமூகநிலையை எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட இப்பாத்திரங்கள் போராட்ட காலத்தில் மக்கள் உணவு, உடை, வதிவிடமின்றி அல்லற்பட்டு வழ்வை எதிர; கொண்ட நிலையை எடுத்துரைக்கும் பாத்திரங்கள் என்னும் வகையில் வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்திய அமைதிப்படையினர; ஈழத்தில் செய்த கொடுமைகளை அவர;கள் இங்கு நிலைகொண்ட காலப்பகுதியில் ஜெயகாந்தன், சோ முதலான எழுத்தாளர;கள் மறுதலித்து அவர;கள் செய்த பாதகச் செயல்களை நியாயப்படுத்தியும் வந்தனர;. பிற்பட்ட காலப்பகுதியில் விடுதலைப் புலிகளாலும் அதன் ஆதாரவாளர;களாலும் இப்பிரச்சாரம் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜெயமோகன் கூறியதுடன் ‘வரலாற்றின் கசப்பான பழிவாங்கல்’ எனவும் இதனை நியாயப்படுத்தினார;. கவிஞர் திருமாவளவன் ஜெயமோகனுக்கு இது குறித்து எழுதிய மின்னஞ்சலுக்குப் பின் தன் கூற்றினை மாற்றிக் கொண்டார;. இந்நிலையில் இந்நாவலின் வருகை காத்திரமானது. இலக்கிய கர;த்தாக்களும் முன்னாள் இந்தியப்படை அதிகாரிகளும் மறுத்து வரும் நிலையில் இந்திய இராணுவத்தின் வன்கொடுமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் தமிழ்நதி சகோதரப்படுகொலைகளுக்கூடாக வளர்ந்த ஈழப் போராட்டத்தின் குரூர யதார்த்தத்தை கண்டு கொள்ள தலைப்படவில்லை. உண்மைகளும் அனுமானங்களும் கலந்து உருவாக்கப்பட்ட இப்பிரதி தனிமனித விருப்புக்கேற்ப வரலாற்றை விலகி நோக்கல், வரலாற்றைத் திரித்து நோக்கல் என்னும் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. ஈழத்தின் உண்மை நிலையை அறிந்த யமுனா ராஜேந்திரன் போன்ற ஒரு சிலரும் இப்பிரதியை “பேரழிவின் மானுட சாட்சியம்”(தடம் - ஜீன் -2016 - பக். 33-36) ஆக காணவிளைகிறார்கள். இது ஆபாத்தான செயன்முறையாகும். இது போல தர்மு பிரசாத் முதலானோர்கள் பாதீனியம் நாவலை- பேரழிவின் பிறழ் சாட்சியமாகக் கருதுகின்றனர் (ஆக்காட்டி யு+லை - செப். பக்.18-22) முற்று முழுதாக பிரதியை நிராகாிக்கும் இச்செயற்பாடும் இலக்கியத்துக்கு ஆரோக்கியமானதன்று.

ஈழத்து தமிழ் வரலாற்றுச் சூழலில் போர்க் கால அனுபவங்களை உள்வாங்கி படைக்கப்பட்ட நாவல் என்பதாலும் இந்திய இராணுவத்தின் வன்முறைப் போக்கை பெண் புனைவுக் கூடாக வெளிப்படுத்தும் நாவல் என்பதாலும் தமிழ்நதியின் பாதீனியம் நாவல் முக்கியமானது. ஈழப் போராட்டத்தின் குறிப்பிட்ட ஒரு சாராரை முன்னிறுத்தி எழுதப்பட்ட நாவல் என்பதாலும் முக்கியமான விடுபடுதல்களுடன் கூடிய வரலாற்று ஆவணமாக இந்நாவல் விளங்குவதாலும் இந்நாவல் தொடர்ச்சியான விவாதத்துக்குரிய பேசுபொருளாக அமையும் எனன்றால் அது மிகையில்லை.

00
நன்றி- ஜீவநதி

Related

விமர்சனங்கள் 615920948767054549

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item