தருணம்


இந்த யுகத்தின் கடைசி இருதயத்தை
உனக்குப் பரிசளிக்கின்றேன்.
முற்றிலும் துயரங்களால் இழைக்கப்பட்ட அதை
நீ என்னதான் செய்வாய்
ஒரு சுமையாக உன் முதுகில் சுமந்தபடி
இன்னொரு யுகத்துக்கு எடுத்துச் செல்வாயா?
நான் அறியேன்
எனினும் என்னிடம் இருக்கும்
அதியுயர்ந்த பொருள் இது ஒன்றுதான்.
முட்களின் மீதுதான்
அது எப்போதும் இருந்துகொண்டிருந்தது
இன்று அது விடுதலை பெறுகிறது
இந்த யுகக் கொண்டாட்டததில்
நான் கடையிருக்கை பார்வையாளனாகிவிடுகின்றேன்.
இருதயம் இல்லாத
எந்த ஒரு மனிதனும் என்னுடன் இல்லாத
இந்தப் பொழுதில்
மகத்துவமான விடுதலையின் பாடலுடன்
நீ நகர்கின்றாய்
நீலம் பாரித்திருக்கும் உன் கண்களில்
உறைந்துபோன
சிறகுகளை நான் காண நேர்ந்தபோதில்
குருதியின் நாளங்கள் சுருங்கிய உனது இருதயத்தை
நீ விட்டேகி
பல யுகங்களாகிவிட்டதை உணர்ந்தேன்.
ஒரு மலையில் பு+த்த சூரியன்
பிறிதொரு மலையில் உதிர்வதை
பின்னொரு போதும் நான் கண்டதில்லை.

00

Related

கவிதைகள் 5369241242935786969

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item