காலனித்துவப்பார்வையில் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாட்டவன் நகர வாழ்க்கை.


 நாடக எழுத்துரு ஓர் பார்வை

எஸ்.ரி.குமரன்  

KKanapathipillai.jpgஇலங்கையின் முன்னோடி நவீன நாடக ஆசிரியராக விளங்கும் பேராசிரியர். கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்து சமூதாய பேச்சு வழக்கு மொழியில் முதன் முதல் நாடகங்களினை படைத்து நாடக உலகில் புதிய மாற்றத்தினை ஏற்ப்படுத்தியவார். சமூகத்தில் உள்ள விடயங்களினை காலத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சமூகப்பிக்ஞையுடன் நாடக எழுத்துரப் படைப்புக்களை உருவாக்கி நாடக உலகில் மாறுதல்களினை ஏற்ப்படுத்தியவார்.

இவ்வகையில் பேராசிரியர் அவர்களினால் படைபக்கப்பட்ட நாடக எழுத்துருக்களில் காலனித்துவப பார்யிவையில் பேராசிரியா; கணபதிப்பிள்ளையின் நாட்டவன் நகரவாழ்க்கை  என்னும் எழுத்துருவை நோக்கும் போது முதலில்
1. காலனித்துவம் என்றால் என்ன
2. இலங்கையிற் காலனித்துவம்
3. பேராசிரியா; கணபதிப்பிள்ளையின் நாடகங்கள்
4. நாட்டவன் நகர வாழ்க்கை எழுத்துரு போன்ற விடயங்களின் அடிப்படையில் நோக்குதல் பொருத்தமாக அமையும்
காலனித்துவம்
16ம் நுாற்றாண்டில் கடல்பயணம் பிரித்தானிய சாம்ராச்சியம் உலகை அரசியலுக்குள் உட்படுத்தியது. காலணித்துவத்திற்கு உட்பட்டநாடு சுதேச தன்மையை இழக்கத்தொடங்கியது. காலணித்துவம் சுதேசியம் கலந்த வேறு பண்பாடு வளரத்தொடங்கியது. இதன் பிற்பாடு காலணித்துவத்திற்கு உட்பட்ட நாடுகள் சுதந்திரம் அடையத் தொடங்கியது. காலணித்துவத்தில் இருந்து விடுபட்ட நாடுகள் அணுகும் கோட்பாடாக பின்காலணித்துவம் அறியப்படுகிறது. இதன் காரணமாக சுதேசிகள் மேலைத்தேய வாதிகள் என்ற பகுப்பை இணம் காணக்கூடியதாக உள்ளது.

ஆட்சியாளா; அடக்கப்பட்டவர் என்பதை பகுத்து விளக்கும் கோட்பாடு இதன் காரணமாக சுதேசிகள் அவர்களுடைய நாடு பண்பாடு என்பவற்றின் சொந்தவரலாறுகளை சுதேசிய மொழியில் எழுதத் தொடங்குகிறார்கள்.(சுதந்திரத்திற்கு பிறகு) மொழி தடைநீக்கலாக அமைகின்றது.
காலணித்துவத்திற்கு பின் உடன்நிகழ்காலத்தை பார்த்தல் கலாச்சார ரீதியான இனம் காணல் படைப்புகளில் வெளிப்படுது. எப்படி மக்கள் காலணித்துவ விதிகளுக்கு அமைவாக செயற்பட்டார்கள் என்பதையும் இணம் காணுகின்றனர்.

இலங்கையில் காலனித்துவம்

ஆங்கிலேயார் வருகை பெருந்தோட்ட காலணித்துவத்தை இலங்கையில் ஏற்படுத்தியது. இவா;கள் தமது அரசியல் தளத்தை ஸ்திரப்பதுவதற்காக கலாச்சார ஆக்கிரமிப்பில் ஈடுபட்டனர். இதன் பிரதான வெளிப்பாடாக ஆங்கில மொழிக்கல்வி மூலழும் கிறீஸ்தவ மதப்பரம்பல் மூலமும் சுதேசிகளை ஐரோப்பிய மயமாக்கும் முயற்ச்சி இடம்பெற்றது. இவா;கள் ஆங்கில அரசின் நிர்வாக இயந்திரத்தை இயக்குவதற்கு உரிய லிகிதா;களாகவும் ஆங்கிலக்கல்வியை போதிக்கும் ஆசிரியா;களாகவும் இருந்தனர்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை மிசனறிப்பாடசாலைகள் ஆங்கிலப்பாடசாலைகள் இதற்கு மிகவும் உதவி வந்தன. மத்திய தரவா;க்கம் எழுச்சி பெற்றது. இதற்கு இவர்கள் காரணமாக இருந்தனர். இவர்கள் உத்தியோகம் தேடி நகர்ப்புறம் சென்றனர். நகர்ப்புறத்திலே வாழவும் விரும்பினார்கள். கலாச்சாரப்பண்பாட்டு சுதேசியத்தன்மையின் சீரழிவின் மையமாக கொழும்பு விளங்கிது. இவ் மத்திய தரவர்க்கத்தினர் தமக்கென ஒரு நாடக வடிவத்தினை தமது வசதிக்கும் வாய்ப்பிற்கும் ஏற்ப நாடியதில் வியப்பில்லை. ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய நிறுவனமயம் அரங்கவரலாற்றிலும் நிறுவனங்களின் தோற்றத்திற்கு வித்திட்டது. இதனுhடாக ஈழத்திலும் நவீன நாடகம் பிரக்ஞை பூh;வமாக தோற்றம் பெற்று வளர ஆரம்பித்தது.

பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் நாடகங்கள்.

பேசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட நாடகங்கள் சில தொகுதிகளாகவும் தனித்தொகுதிகளாகவும் வெளிவந்துள்ளன. நாநாடகம்(1930) இரு நாடகம் (1952) என்பன தொகுதிகளாக வெளிவந்தன. தனித்தனியாக வெளிவந்தவை மாணிக்கமாலை(1952) சங்கிலி (1956)
நாநாடகத்துக்குள் உடையார் மிடுக்கு முருகன் திருகுதாளம், நாட்டவன்நகரவாழ்க்கை, என்பனவும் இருநாடகத்தில் பொருளோ பொருள் தவறான எண்ணம் என்பன அடங்குகின்றன.

கணபதிப்பிள்ளையின் நாடகத்தின் பொதுப்பண்புகள்

1936 முதல் இலங்கைப்பல்கலைக்கழகத்தில் இவரது நாடகங்கள் மேடையேறின. இதற்கு பல்கலைக்கழகம் சிறந்த களமாகியதுது. இவரது நாடகங்கள் சமூகப்பண்பு கொண்டனவாக காணப்பட்டன. யாழ்ப்பாண மத்தியதர குடும்பப்பிரச்சினைகள் சமூகப்பிரச்சினைகள் என்பவற்றை தனது நாடகங்களில் கொண்டு வந்தார்.

ஆங்கிலப் பொருளாதார சமூக அமைப்பிற்கும் பழையவிவசாயப் பொருளாதார அமைப்புத்தந்த  சிந்தனைக்குள் அகப்பட்டிருந்த பழைய வாதிகளுக்கும் இடையிலாண முரண்பாடுகளை அங்கதச்சுவையுடன் இவரது நாடகங்கள் வெளிக்கொணர்ந்தன. சரிந்து கொண்டு வந்த நிலமாணிய உறவுகளையும் நகர வாழ்க்கை மனித உறவுகளைப் பாதிக்கும் விதத்தினையும் இவரது நாடகங்கள் எடுத்து காட்டின. சமகால அரசியல் பிரச்சினைகளும் சமூகப்பிரச்சினைகளும் இவரது நாடகங்களின் பின்னனிகளாகும்.

ஈழத்து நாடக உலகில் முதலில் யாழ்ப்பாணத்து சாதாரண கதாபாத்திரம் உலாவத்தொடங்கியது. சாதாரண பேச்சு மொழியை பிரக்ஞை பூh;வமாகக் கையாண்டார்.  யாழ்ப்பாணத்தில் பொதுவாக பருத்தித்துறைப்பகுதிக்கு சிறப்பாக உள்ள மொழி நடையை கையாண்டார்.

நிஜபாத்திரங்களான சாதியாசாரம், மரபு, பழமைபேணும் உடையாh;, விதானையார், மணியகாரர், ஆகியோரையும், கிராமத்து குடியானவன் சீனிக்குட்டி, கிழவி, வள்ளிப்பிள்ளை, தற்பெருமை பேசும் யாழ்ப்பாணத்து பிரக்கிராசிமாh;, அரசியல் வாதிகளையும் உலாவவிட்டார்.

சமூகமாற்றம் அவர் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருந்தது. பழமையும் புதுமையும் மோதிக்கொண்டிருந்தன. இவரை தமிழ் இயற்பண்பு வாத நாடக உலகின் முன்னோடி என அழைத்தல் பொருந்தும்.

நாட்டவன் நகர வாழ்க்கை எழுத்துரு

இவ் எழுத்துருவை நோக்கின் இதன் மூலம் காலணித்துவத்தின் மையமான கொழும்பையும் சுதேசிய பிரதேசமான கிராமத்தையும் (யாழ்ப்பாணம்) ஒப்பியல் நோக்கில் பார்க்கிறார். நகரத்தையும் கிராமத்தையும் ஒப்பியல் நோக்கில் பாh;க்கிறார். பருத்தித்துறையில் ஒரு கிராமமம் தும்பளை கதை நிகழும் களமாகியது.

இவ் நாடக எழுத்துருவில் வரும் கதாபாத்திரங்களாக சங்கரப்பிள்ளை ( சங்கா; டாக்டர்) , பரிமளசுந்தரி, (சங்கரப்பிள்ளை மணைவி), விசாலாட்சி( சங்கரப்பிள்ளை மச்சாள்), சிதம்பரப்பிள்ளை ( சங்கரப்பிள்ளையின் தமையன்), சிவகாமி( சிதம்பரப்பிள்ளை மகள்) வேலுப்பிள்ளை ( சிதம்பரப்பிள்ளை மகன்) வள்ளிப்பிள்ளை ( அயல்வீட்டுக்கிழவி), அன்னபூரணம்(அயல்வீட்டுக்காரி), செல்லையா( அயல்வீட்டுக்காரன்) மற்றும் வடிவாம்பிகை, சுந்தரகாந்தி, வல்லி, ஆழ்வர்;, சின்னவி, கட்டாடி, கார்த்திகேசு, மருந்து கலப்பவர், டாக்குத்தர் மாட்டின், மாணிக்கம் போண்ற கதாபாத்திரங்கள் காணப்படுகின்றன. இவ் எழுத்துருவை வெறுமனே நாடகப்பகுப்பாய்வாக நோக்காது காலணித்துவத் தாக்கத்தை அடிப்டையாகக் கொண்டு பகுப்பாய்வு செய்யப்படுகின்றது.
1. காலனித்துவ வாதிகளைப் பின்பற்றுவோh;
2. சுதேசிகள்
3. நகரம், கிராமம்
4. பேச்சுமொழி
5. நடைஉடைபாவணை என்பவற்றை அடிப்படையாக கொண்டு பகுப்பாய்வு செய்யப்படுகின்றது.
காலனித்துவத்தை பின்பற்றும் கதாபாத்திரங்களாக சங்கரப்பிள்ளை (டாக்கடா; சங்கா;) பரிமள சுந்தரி வடிவாம்பிகை , சுந்தரகாந்தி போண்றவற்றை குறிப்பிடவாம்.

சங்கரப்பிள்ளை : ஆங்கிலேய கல்விக்கு உட்பட்டவராகவும் லண்டன் சென்று படித்த னுசஆகவும் காணப்படுகின்றர்; .படித்து பெரிய நிலைக்கு வந்தவுடன் அன்னிய கலாச்சாரத் தாக்கத்தால் ஊர் உறவுகளை மறந்தவராக காணப்படுகின்றார். ஆடம்பர பகட்டு வாழ்க்கைக்கு உட்பட்டு கொழும்பு பெண் பரிமள சுந்தரியை மணம் முடிக்கிறார். காலணித்துவம் விதைத்து விட்ட போலியான வாழ்க்கைக்கு உட்பட்டவராக காணப்படுகின்றார். ஆங்கில வைத்திய முறை செய்பவராகவும் ஆங்கிலத்தில் பேசுபவராகவும் காணப்படுகின்றார்.

உ-ம் Attendan  Send him out
 
பரிமள சுந்தரி : நகார்ப்புற காலனித்துவ சிந்தனைக்கு உட்பட்ட கலாச்சாரச் சிந்தனையுடன் கொழும்பில்; வசிப்பவளாக காணப்படுகின்றாள். போலியான ஆடம்பர வாழ்வை விரும்புவளாகவும் சுதேசிகளை கிண்டல் செய்பவளாகவும் மேலைத்தேய பண்பாடு கலாச்சாரம் தான் நாகரீகம் என கருதுபவளாகவும் காணப்படுகின்றாள். மாதத்துக்கு ஒரு கார் கிழமைக்கொரு சாரி, றெனிஸ்ஜாக்கெட், கெக்றெயில் பாட்டியல் சோசலுகள், லேடிஸ்லீக்குகள், என்று திரிபவளாக காணப்படுகின்றாள். இதனுhடாக சுதேசிய வாதிகளை கிண்டல் செய்யும் தன்மை மதியாத்தன்மை காணப்படுகிறதது.

உ-ம்: நாட்டவத்தியலை மரிபண்ணிக்கொண்டிருக்கிறது. கறட்டியூர். அங்கையாரும் சிவிலை செட்டான ஆக்களும் இருப்பினமே. பணங்கொட்டையள். அவையின்ர பெண்டுகள் ஏன் பேசுவான் ? உடுக்கத்தெரியாது. மனிதரோட பேசத்தெரியாது.

வள்ளிப்பிள்ளை சின்னவி உரையாடல் ஊடாக நடை உடை பாவனை காட்டப்படுகிறது.

வள்ளி : …. பொம்பிளை வடிவாமோடா?
சின்னவி… உதுகலெலல்லாம் வடிவில்லை எங்கடை பெட்டயளின்ர கால் துhசுக்கும் பெறாது. புதுப்புது மொடியாத்திரியுது. மோடியில மயங்கித்தான் உவங்கள் போய்விழுறது.

சின்னவி: பெடியளைப்போல கிறில் வெட்டிக்கொண்டு ஒரு அலவல் சீலையும் கட்டிக்கொண்டு கார்; விட்டுத்திரயிறாவாம். ஆரைக்கண்டாலும் இங்கிலீஸ் தான் தமிழ் இல்லை.

வள்ளி : நாளைக்கொரு காற்சட்டையுடம் போட்டுக்கொண்டு திரிவாவாக்கும்.  என்பவற்றின் ஊடாக காலனித்துவதாக்கத்தின் நடைஉடை பாவணை காட்டப்படுகிறது.

இவருடைய பேச்சு மொழி உரையாடலிலும் காலனித்துவ தாக்கம் மிகுந்து காணப்படுகிறது. ஆங்கில உரையாடல் ஆங்கிலம் தமிழ் கலந்த உரையாடல்.

உ-ம்: 7   8   9   4  Please  Hollow  It  is  7   8   9   4 ,  Hellow  Darlin  என்ன வேலை கடுமையோ இந்த சான்சை  விடக்கூடாது. எங்கட ஸ்ரேற்றற்றை பார்க்க வேண்டாமே

சாதரண கடைகளில் பொருட்களை வேண்டாது ளுரிpநச அயசமநவ இல் அந்தஸ்து கருதி பொருட்களை வாங்கல் பொருட்களின் பொருட் கொள்வனவில் செக் பணன்படுத்தல் உ-ம்: எங்கட ஸ்றேற்றற்றுக்கு வேற இடத்தில என்னென்டு போய் வாங்குதல். டீன்னர் செற்றும் வாங்கினான்.
காட்ஸ் விளையாடுதல். நுபெடiளா னுயடலை நேறள வாசித்தலை குறிக்கலாம். சுதேசிய கலாச்சாரத்துக்கு மாறாக விவாகரத்து வேண்டுபவளாகவும் காணப்படுகின்றாள். காலனித்துவத்தின் அடிமைப்பதவியான கவுன்சிலார் பதவிக்கு கணவரை போட்டி போடும்படி கூறுதல்.

வடிவாம்பிகை சுந்தரகாந்தி : பரிமளத்தின் தோழிகள் கொழும்பு நகரில் வசிப்பவார்கள். காலனித்துவ நாகரீகத்தையே பெரிதாக நினைப்பவா;கள் ஆங்கிலம் பேசுபவராக காணப்படுகின்றனர்.

மேற்கூறியவை காலனித்துவத்திற்கு உட்பட்ட பாத்திரங்களாக காணப்படுகின்றது. இவர்களுடைய வீட்டு தளபாடங்கள் மேலைத்தேய காலனித்துவத்தை பின்பற்றுவனவாக காணப்படுகின்றன.

சுதேசிய பாத்திரங்களான கிராமத்து பாத்திரங்களை நோக்குவோம்.
சுpதம்மபரப்பிள்ளை: பழமைவாத விவசாய சிந்தனையில் உள்ளவராகவும் வேளாண்மையை பிரதான தொழிலாக  கொண்டவராகவும் காணப்படுகின்றார். கல்வி கற்றாலும் கிராமத்து ஊர் சூழல் பண்பாட்டுடன் வாழ்பவராகவும் காணப்படுகின்றார். இவருடைய வீட்டு அமைப்பு பயன்படுத்தும் தளபாட அமைப்பு சுதேசிய தன்மையுடன் காணப்படுகின்றது. வந்தவர்களை வரவேற்பதற்காக வெற்றிலை தட்டம் கொடுக்கும் பண்பாடு காணப்படுகின்றது.

வேலுப்பிள்ளை : சிதம்பரப்பிள்ளை மகன்  விவசாயம் செய்பவராக காணப்படுகின்றார்.
செல்லையா ஊர் நடப்பு காரணாக காணப்படுகின்றார். இவருடைய வீட்டு அமைப்பு சுதேசிய தன்மையை காட்டுகின்றது. விருந்தினா; தங்குவதற்கு வீட்டுக்கு பக்கத்தில் மால் அமைக்கப்பட்டுள்ளது.

வள்ளியார் மரநிழலில் பணங்காய்க்காய் விற்றல். மண் சுங்கான் பிடித்தல். அன்னபூரணம் சருவக்குடம் பயண்படுத்தல். சின்னவி பீலிப்பட்டையுடன் தோட்டத்துக்கு போதல் வேலுப்பிள்ளை பட்டை நாh;க்கட்டு என்பவற்றை குறிப்பிடுதல்.

விசாலாட்சி: யாழ்ப்பாண மண்வாசனையில் வாழ்பவராக காணப்படுகிறாள். ஒருவரை நினைத்தால் அவரைத்தவிர வேறொருவரை மணம் முடிப்பதில்லை என்ற பிடிவாதத்துடன் வாழ்பவர்.
கட்டாடி: சுதேசிய சலவைத்தொழிலாளி. சாதிய வகுப்பை காட்டுகிறது.  வல்லி சாதியத்தில் தாழ்ந்த பாத்திரமாக காணப்படுகின்றார். மாராப்புடன் வருதல் உடையமைப்பை காட்டுகிறது. செட்டியார் பாத்திரம் இந்திய வம்சாவழியாகவும் மஹமாத்கனி முஸ்லீம் கதாபாத்திரமாகவும் குறிக்கப்படுகின்றது. இவர்கள் தங்களுக்குரிய சுதேச மொழிநடையை கொண்டவராக காணப்படுகின்றனர்.

சுதேசிய பாத்திரங்களுக்குரிய உரைநடை உரையாடல் அமைப்பு வடமராச்சிக்கே உரிய மொழிநடையை கொண்டு விளங்குகின்றது.  இவ் உரையாடல் ஊடாக மண்வாசனை சுதேசத்தன்மை காட்டப்படுகின்றது.

அடுத்து காலனித்துவத்தின் தாக்கத்தால் வந்த உயர்பதவிகளை குறிப்பிடலாம். பிரக்கிராசியாh; வேலை கவுன்சில் தெரிவு கச்சேரி நிர;வாக மையம். வோட் பண்ணும் முறை உ-ம்: கவுன்சில் தெரிவுக்கு சிவத்தை கடுதாசி பச்சை கடுதாதசிக்கு புள்ளடி என்ற போலியான ஜனநாயகம் காட்டப்படுகின்றது. நிர்வாக ஆட்சி மையம் கொழும்பு காட்டப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தவார்தெரிந்து கொண்டே போலியாண பண்புகளை ஏற்றுக்கொள்ளும் பண்பு கூறப்படுகின்றது. உ-ம் : கந்தா;-- யாழ்ப்பாணத்தான் கெட்டிக்காரனென்டு தனக்குள் சொல்லிக்கொண்டு இருக்கிறது. மற்றவன் வந்து புலுடாப்போட்டு தன்னை விளையாடிக்கொண்டு போறதை நினைக்கிறேலை.
உணவு வகைகள் கூறப்படுகின்றது. எமது பண்பாட்டிற்குரிய உணவு வகைகளாக  திணை,  சாமி, பணங்காய்பணியாரம் , ஒடியள்பிட்டு, பினாட்டு, போண்றன கூறப்படுகின்றது. எமது சுதேசிய உணவுகளை விடுத்து மேலைத்தேய உணவுகளை உண்பதால் வரும் கேடு காட்டப்படுகிறது. உ-ம்: இப்ப சம்பா சாப்பிட்டு சலரோகம் வருது என்ற உரையாடல் ஊடாக அறியலாம். சுதேசிய உணவு காலனித்துவம் அறிமுகப்படுத்திய சம்பா அரிசி இதனால் வரும் விளைவு காட்டப்படுகின்றது.

குடிவகைகள் ஊரில் கள்ளு காலனித்துவ தாக்கம் சாராயத்தையும் குறிப்பிடகின்றது. உ-ம்: கவுன்சில் தெரிவுக்கு புள்ளடி போட சாராயப் போத்தல் வழங்குதல்.
உறவு முறைகளை சொல்லி அழைத்தல் உ-ம் : சீனியம்மா சீனியப்பு போன்ற உறவு முறைகளை குறிப்பிடலாம்.

தொழில் முறைமைகள் காட்டப்படுகின்றது. சுதேசிய தொழிலான விவசாயம் காட்டப்படுகின்றது. உ-ம்: சிதம்பரப்பிள்ளை - மோனை பரந்தனிலை இந்த முறை எப்பிடி வேளான்மை எங்கட வயல் ஏதும் விளைஞ்சிருக்குதோ, கந்தா; -- வெட்டு விதைப்பு காலம் பாருங்கோ மூச்சு விடமுடியாத வேலைபாருங்கோ.

வைத்திய முறையாக சுதேசிய தமிழ் வைத்தியமும் காலணித்தவ ஆங்கில வைத்தியமும்  காட்டப்படகின்றது. சின்னவி ஆழ்வார் உரையாடலில் மண்டி அடைஞ்சு வயித்து குத்து மானிப்பாய் ஆசுப்பத்திரிக்கு போணான் வயிறு வெட்டி சுகப்படுத்ததுறம் எண்டவை.  ஆழ்வார்-- கோழி இறைச்சியும் ஒடியல் கூழும் குடிச்சால்  தீரும் என்பதன் ஊடாக நாட்டு வைத்தியம் காலணித்தவ வைத்தியமுறை என்பன கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தவரது நம்பிக்கை காட்டப்படுகின்றது. நாவுத்து பாh;க்கிறது. உ-ம்: நாவுறு பார்த்த அடுப்பு சாம்பலை பிள்ளை நெற்றியில் போடுதல். வைரவருக்கு தலைமாட்டில் அரைரூபா முடிஞ்சு விடுதல். நோயை வைத்தியரிடம் காட்டுவதற்கு நாள் பர்த்தல் என்பனவும் சமய நம்பிக்கையின் சின்னமாக சாமியார் பாத்திரம் காட்டப்படகின்றது. கிரகநிலை கைரேகை பார்த்தல் இதை காலனித்துவத்தின் தாக்கத்ததிற்கு உட்பட்ட பரிமள சுந்தரியும் ஏற்கும் தன்மை காணட்டப்படுகின்றது.

சீதன முறைமை பிள்ளை குட்டிக்கு சீதனம் கொடுத்து உத்தியோகத்தா; மாரை கட்டுதல். சீதனமாக காசு கல்வீடு தரும்படி கேட்டல் என்பன காலனித்துவ தாக்கத்தின் நிலைமைகளை காட்டுகின்றது.

சுதேசிய நம்பிக்கைகளில் ஒன்றான விதியை நம்புதல் காட்டப்படுகின்றது. விசாலாட்சி உரையாடலில் “ நிதியும் கணவணும்   நர்படினும் தத்தம் விதியின்பயன் எண்டது போல” என கூறப்படுகிறது.

காலனித்துவ தாக்கத்தின் பிரிப்பு சீமை உள்ளுர் என்ற பிரிப்பை காட்டுகிறது. தபால் எழுதுதல் தந்தி அடித்தல் தொலைபேசியில் கதைத்தல் காட்டப்படுகின்றது. காலணித்து வளர்ச்சி வேட்டிஉடுத்தவருக்கு மரியாதை இல்லை. காற்சட்டை போட்டவரை கதிரையில் இருத்தல்.   துரை எண்டு அழைத்தல் போண்ற நிலைமைகள் காட்டப்படுகின்றது.

இவ்வாறு நோக்கும் போது பேராசிரியர்  க.கணபதிப்பிள்ளையினுடைய நாட்டவன் நகர வாழ்க்கை என்னும் நாடக எழுத்துருவானது கலனித்துவ உடனடி நிலைமைகளை புலப்படுத்துவனவாக விளங்குகின்ற தன்மையினை அவதானிக்கலாம்.

00Related

கட்டுரைகள் 6625174954949963056

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item