அறிகைசார் வரைபடத்தின் அழகியல் : சில கவிதைக் கோடுகள்


ந.மயூரரூபன்

இலக்கியத்தின் செயல் எதுவாக இருக்கவேண்டுமென்ற கேள்வி பல திசைகளில் எழுந்திருக்கிறது, எழுகிறது.  உண்மையில் எழுதுபவர்களுக்கு இதைப் பற்றிய பிரச்சினை என்றுமே இருக்கப்போவதில்லை.  ஆனால் விமர்சகர்களுக்கும், புறநிலை அவதானிகளுக்கும் இது பற்றிய எண்ணங்களால் காலந்தோறும் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

சமூகங்களில் கலாசார அதிர்வுகள் காலத்துக்குக்காலம் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன.  படிமங்களாலான சமூகம் (ளுழஉநைவல ழக iஅயபந) என்பது எமது மனதின் உள் அடுக்குகளை கணந்தோறும் அருட்டிக்கொண்டே இருக்கும்.  இலக்கியத்தின் செயல் என்பது குறித்த சமூகத்தை, அதன் இருப்பை விவரிக்கும் தன்மையுடையதல்ல.  அதனைக் கேள்விக்குட்படுத்தி விமர்சிக்கும் இயங்கியல் அங்கிருக்க வேண்டும்.

படைப்புகளின் போதனை செய்யும் பண்பு சமகாலத்தில் மறுக்கப்படுகிறது.  ஒரு குறித்த நீதியை சாரமாக்கும் ‘நீதிக் கதைகள்’ புறந்தள்ளப்படுகின்றன.

இங்கு ‘பிரடரிக் ஜேம்சன்’ சொல்லுகின்ற ஒரு விடயம் கவனத்திற்குரியது.  கருத்து - கருத்தியல் - சிந்தனை என்கிற வார்த்தைகள் புறந்தள்ளப்பட்டு ‘வரைபடமாக்குதல்’ (அயிpiபெ) எனும் சொற்றொடர் இவரால் அறிமுகப்படுத்தப்படுகிறது.  “அறிகைசார் வரைபடத்தின் அழகியல்” (யn நயளவாயவiஉ ழக உழபnவைiஎந அயிpiபெ) எனும் பெயரை ஜேம்சன் கூறுகிறார்.

இங்கு ‘வரைபடமாக்குதல்’ என்பது|
ஒரு குறித்த இடத்தையும் இன்னொரு இடத்தையும் (இங்கு இடம் என்பதை வெளி எனும் அர்த்தத்துக்குள் கொண்டுவரலாம்) கருத்துருவ அடிப்படையில் இணைத்தல் என்பதாகும்.

குறிப்பாக இன்றைய சூழலில் ஒரு தனியனின் இருப்புக்கான வடிவம் குலைந்த பின்பு - தனது எண்ணங்களில் படிமங்களால் உறைந்துள்ள சமூக, பண்பாட்டு, அரசியல், கலாசாரப் பொருண்மைகளை| தனது எழுத்துக்களில் எப்படி முன்வைக்கிறான் என்பதே இங்கு பேசுபொருளாக அமைகிறது.

இங்கு படைப்பாளி| தனது நிலைக்கும் (pழளவைழைn ழக hiஅஃ hநசளநடக) புறச் சூழலுக்கும் இடையிலான ஒரு பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த முனனகிறான்{ ள்.

“நீயோ நீங்களோ
நானோ நாங்களோ
வயிற்றின் பசியை உணரத்
தலைப்படும் பொழுதில்
அவர்களது நாவு
மூளையை முடித்து
கண்களை முடித்து
நாவைச் சுவைத்த பின்
தொண்டை வழியிறங்கி
இதயத்தையும்
நுரையீரல்களையும்
நக்கத் தொடங்கியிருக்கும்.”
(வாழ்வின் குறிப்புகள், கை. சரவணன்)
“நானொரு பறவையை வரைந்தேன்
அது போராயுதமாயிற்று
அதன் நிழல் என் உறக்கங்களிலிருந்து
என்னைத் துரத்துகிறது
...................
...................
நிழல்
நிழல்
பறவைகளின் குரலின் நிழல்
குழந்தைகளின் சிரிப்பின் நிழல்
காலமாகிய மனிதனின் கடைசிச் சொல்லின் நிழல்
எல்லாமே அச்சமூட்டுவன.”
(துரத்தும் நிழல்களின் யுகம், சித்தாந்தன்)
இந்தப் பகலை
கொய்து
சுவரில் அறையுங்கள்
ஒரு பகலில் எதுதான் தோற்கும்
எதுதான் வெல்லும்.
வாழ்வைத் தோற்கடித்த
மரணத்தின் முன்னே இரவென்ன பகலென்ன
சிலுவைக்கருகில் சாவின் பிணமும்
சேகரித்த சிரிப்பும்
தனிமையில்.”
(சூடியபோதில் மாலை, கருணாகரன்)
“எனது இரகசியங்களில்
திசைவழிப் பயணங்களை
பிசைந்தபடி செல்கிறது
இருளின் கரம்!”
(ஞாபகங்களின் அச்சக் கோடுகள், த. அஜந்தகுமார்)
வகை மாதிரிகளாகத் தரப்பட்டுள்ள இக் கவிதைகளில்| அந்தப் படைப்புகளின் செயல் என்ன என்று கேட்டால் கூறமுடிவது என்ன?  படைப்புகள் ஒரு காலத்தை அதன் தளத்தை மன நிகழ்வாக முன்வைக்கிறது.  உலகத்தின் உன்னதத்தை, இலட்சியத்தை, போதனையை இவை தரப்போகின்றதா?

ஒரு தனியனின் வாழ்க்கை ஊடறுத்துச் செல்லும் குழுவினது, சமூகத்தினது, இனத்தினது அதிகாரத்தை, அடக்குமுறையை - அது தரும் பயங்கரத்தை, பயத்தைப் பேசும் படைப்புகள் இவை.

எங்களது பசி - அவர்களது நாவு எனப் பேசும் கை. சரவணனும்|பறவை போராயுதமாயிற்று எனும் சித்தாந்தனும்| வாழ்வைத் தோற்கடித்த மரணத்துடன் கருணாகரனும்| அச்சக் கோடுகளுடன் த. அஜந்தகுமாரும் இயல்பான உணர் நிகழ்வுகளால் சில படைப்பு முன்முடிவுகளை புறந்தள்ளி விடுகின்றார்கள்.

இவர்களது படிமங்களாலான சமூகம், அவலச் சாவுக்கான உணர் நரம்புகளைப் பரிசளித்துள்ளது.
உண்மையில் சமூகப் பொதுப் படிமம்| மரணம் - மரணத்தின் பாதை - அதன் நொருக்கம் என அமைகிற போது| சித்தாந்தன் கூறுவது போல,
‘காலமாகிய கடைசி மனிதனின் சொல்லின் நிழலும் எல்லாமும் அச்சமூட்டுவன’ எனும் உணர்வுத் தளம் வெளிப்படுகிறது.

இங்கு கவிஞர்கள்| ஜேம்சன் குறிப்பிடும் வரைபடமாக்குதலை நிகழ்த்தியிருப்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.  எழுதுபவனின் நிலை, அவனது சமூகப் பொருண்மைகளை ஊடறுத்து| படைப்பாகும் வரைபடத்தினை - அறிகைசார் வரைபடத்தின் அழகியலை இந்தக் கவிதைகள் தருகின்ற அனுபவங்களிடையே காணமுடியும்.

ஒரு படைப்பாளியால் தன் சூழலை பிரதிநிதித்துவப்படுத்துதல் சாத்தியமா என்ற விவாதம் உள்ளது.  ஆனால் அல்தூசரும், ஜேம்சனும் அதற்கான முயற்சிகளை மார்க்சிய தளத்தில் செய்துள்ளனர்.

இந்தப் பிரதிநிதித்துவ இயங்கியலின் அடிப்படைகளை நாம் இவர்களின் மேற்காட்டிய கவிதைகளில் கண்டுகொள்ளலாம்.  தங்களுக்கான கருத்துருவ அட்சரங்களால் அவர்கள் ஒரு அழகியல் வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.Related

கட்டுரைகள் 1680467998599244336

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item