இவர்கள் அறியாமலிருக்கிறார்கள்...


மன்னார் அமுதன்

யூதாஸ் !
இவர்களுக்கும் காட்டிக்கொடு...
அன்று சிலுவையில் அறையப்பட்டவனை...

துயருற்றோருக்கும்
கைவிடப்பட்டோருக்குமாய்க் குரல் கொடுக்க 
தொழுவத்தில் பிறந்தவனை...

எளிய சொற்களால்
என் அந்தரங்கத்தில் முகம் புதைத்துள்ள
அந்தத் தச்சன் மகனை.....

யூதாஸ்...
இவர்களுக்கும் காட்டிக்கொடு...

இவர்கள் அறியாதிருக்கிறார்கள்
பாதிரிக்கும் போதகனுக்கும் 
இடையாக அந்த கிடை மேய்ப்பனை 
அணுக முடியாதென்பதை....

முலாம் பூசிய சிலுவைகளோ
வானம் தொடும் கோபுரமோ
பரந்த பீடத்தின் முன் மண்டியிடுதலோ
அவனை மகிழ்ச்சியிலாழ்தாதென்பதை

பேராலயங்களுக்கு வெளியே
மந்திரவழிபாடுகளுக்கு அஞ்சி
மலைத்தொடரிலும் புல்வெளியிலும் 
அங்கவஸ்திரம் புழுதியில் நனைய
ஒடுக்கப்பட்டவர்களோடு 
அலைந்து திரிகிறான்
அந்தத் தச்சன் மகனென்பதை

இவர்கள் அறியாமலிருக்கிறார்கள்..

மேலுமவன்
என்றோ கொத்தியெறிந்துவிட்டான்
மதங்கள் அறையப்பட்ட சிலுவையை...

யூதாஸ்
முத்தமொன்று தருகிறேன்
இந்த மந்தைகளுக்கும் காட்டிக்கொடுக்கிறாயா...
அந்தத் தச்சன் மகனை

00

Related

கவிதைகள் 190678661890486323

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item