ஒரு பொழுதுக்காய்


 கனக ரமேஷ்

கனவுகள் சிதறிக் கலைந்த
நஞ்சுண்ட பெருவெளியில்
குருதி மெல்லக் கசிய
பகலினை விழுங்கிய
இரவின் கதையை
காற்று உரத்துக் கூவிச் சென்றது.
உண்மைகள் தம் அம்மணத்தை
ஆடைகளால் போர்த்திக் கொள்ள
மரணத்தின் வாயிலைத்
தரிசித்தபடி
அழிவுண்ட நகரின்
நாட்குறிப்புக்களை
வரையத் தொடங்கினான்
ஆதிகவி
பௌர்ணமியாய் ஒளிரும்
வெள்ளை விகாரைகளில்
சிகாலோகவாத சூத்திரத்தினைச்
சாக்குருவி இசைக்க
சோகத்தின் இழைகளில்
வேட்டைக்காரனின்
கூரிய விழியோடு
காலம் காத்திருந்தது
காவுகொண்டவனின்
வாழ்வினைக் கௌவ.

00

Related

கவிதைகள் 1742191646918497158

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item