மய்யம் -அந்தியில் உதிரும் வர்ணங்கள்


சித்தாந்தன்

இப்படித்தான் 
இரவின் இளம் பச்சை நிறத்தினை 
அவிழ்க்கத் தொடங்கினேன்.
தீராத வர்ண வெளியாக
என் இரவுகள் நீண்டபடியே இருந்தன.
அலகுகளால் வர்ணங்களை கொத்திச் செல்லும்
பறவைகளின் நிழலின் வர்ணம் எது?
இரவுகள் காய்க்கத் தொடங்கும்
அந்தியில் இல்லாத வர்ணங்களா
கோடையின் தகிப்பை வரைகின்றது?
எப்படியோ
தூரத்தில் வானத்தை தடவும் மலைகள்
சூரியனின் வர்ணங்களை தின்றுவிடுகின்றன.
அருவிகளால் அடங்கா தன் தாகத்தை
காடுகள் 
வர்ணங்களைத் தின்றே போக்குகின்றன.
நான் இரவின் இளம் பச்சை நிறத்தினை
அவிழ்க்கின்றேன்.
நட்சத்திரங்களைப் போல
மெல் ஓளி சிந்தும் ஒரு கீதம்
இரவின் மையத்திலிருந்து கசிகிறது.
புராதனமான அந்த இசை
அத்தனை வர்ணங்களின் சாயல்களையும்
என்னில் பரவ விடுகின்றது.
இரவு 
இளம்பச்சை
மாய இசை
இரவு காய்க்கும் அந்தி
காடுகள்
மலைகள்
யாவற்றையும் நான் கடந்தேகுகின்றேன்

வர்ணங்களாலானதுதான்
வாழ்வென்னும் பாதாளம்.
00

Related

கவிதைகள் 8164855050768307033

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item