அந்நியமாதல் நிலத்தின் ரணம்

கோ.நாதன்

நான் பிறந்து வளர்ந்த
ஊரின் வெள்ளை மணல் நிலத்தில்
வளர்ந்திருக்கும் ஒரு அரசமரம்,
உயிர்ந்திருக்கும் ஒரு விசால விகாரை
அதனினுள் விற்றிருக்கும் ஞானப் புத்தர்
இவைகளை ஆக்கிரமித்து.ஒரு இருத்தல் 

புழுதி மண் குடித்து
புழுதி மண்ணில் புரண்டு கிடந்திருந்த
என்னுடைய தேகம்
காயப்பட்ட  நெஞ்சினில் மனலலைகளை
தத்தளிகின்ற  வலி மட்டுமே இறைஞ்சின்றன.

துரத்தியடிக்கப்பட்ட  எனதினம்
காடுகளுள் புற்புதரிடையே குடிபுகுந்து
ஒவ்வொரு இரவுகளையும் அச்சத்தில்
தப்பிக்கின்ற உடல்களால் பதற்றமடைந்திருந்தது ?


விடிய ற்ற வெளிச்சத்தில் புலரும் குடிசை
அரவமெல்லாம் படைகளின் காலடித் தடங்கள்
நீள் வரிசையாக பூத்திருக்கும்
காற்றில்  ஆயுத வாசனைகள்
சூரியன் சுட்டெரித்த வெளியெங்கும் கலைந்திருந்தது.?

உடைந்து கிடக்கும் வீட்டின் சுவரெல்லாம்
துப்பாக்கிக்குறி பற்றிருக்கும் ரவைப் பொத்தல்கள்
வீட்டின் போர் அவமானக் குறியீட்டைஏந்திருந்தது ?

எஞ்சியிருக்கும் மீதிச் சுவரின்
செங்கல்த் துண்டுகளிலும்,
சுண்ணாம்புத் துகள்களிலும்,
சீமெந்துச் சாந்துகளிலும்
நாய்களினதும் ,மற்றவைகளினதும்
சிறுநீர்க் கழிப்பு கசிவு அந்நியமாதலின் அழிப்பாகியது?

00

Related

கவிதைகள் 1959139425588130016

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item