பகல் வேண்டும்


தேன்மொழி தாஸ்
எனது இரவுகளில் பல கோடி துயிலாத விழிகள் இமைக்காமல் கிடந்து வைரமாகிவிட்டன குடைமரங்களென இலைதாழ்ந்தும் அதன் பூக்களென செந்நிரத்தில் நிமிர்ந்தபடியேயும் துயில் பகலில் சோழியின் இருளில் தாயமாய் இருந்ததை உங்களிடம் எப்படிப் பகிர்வேன் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் அடுப்படிப் புலம்பல்கள் விதைகளற்ற தாவரங்களின் வருத்தங்களாய்  வெறுமனே வெளியை பிடித்து கதறி அசைகின்றன மொழியை அழிக்க காத்திருப்பவன் முதுகில் மொழி சூலாயுதமாய் முளைத்துப் பூக்கும் எனது மூதாதயரின் முத்தங்கள் வன மூலிகைகளின் துடுப்புகளாய் ரத்தக் குழாயில் பயணிக்கையில் நிலம் தொலைத்து நிற்கும் சகோதரனின் கண்கள் பாதாள வாசல் எண்ணங்களின் மேல் கழுகின் கண்கள் பொருந்திய காலத்தில் மலைகளின் மேலும் மடியின் கீழும் குண்டுகள் வெடித்ததுச் சிதறின தாய்மண்ணின் ஊற்றுத் தண்ணீர் தொண்டைக்குழியில் சுதந்திரமாய் இறங்க வேண்டும் 31.5.2016

Related

கவிதைகள் 5252814275079699865

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item