மாறிக்கொண்டுவரும் மரபு - ஒரு கருதுகோள் குறிப்பு -1


எஸ்.சத்யதேவன்
அறிமுகம்
இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம் ஈழத்தமிழரின் வாழ்வியல்க் கோலங்களில்இருந்து மாறிக் கொண்டு வரும் மரபுகளை  மக்களின் கவனத்திகுக் கொண்டு வந்துஆவணப்படுத்துதலே ஆகும்.

இவ்வாய்வுக் கட்டுரை இரண்டு பெரும் பகுதிகளையும் அதன் தாற்பரியங்களையும்கொண்டதுமரபு என்பதைப் பற்றி ஏலவே சொல்லப்பட்டு வந்த மரபார்ந்த கருத்துவிளக்கங்களுடன்  மரபு பற்றி இதுவரை ஆய்வு செய்யப்பட்ட கருத்துக்களையும் மரபின் தொடர்ந்தேர்ச்சியான பரிணாமம் கடந்த காலங்களில் எவ்வாறுஇருந்ததென்பதையும் கவனத்திற்கொண்டு மரபு என்பதன் பருமட்டானஅடையாளப்படுத்தலை எனது வாசிப்பினூடாகவும்  ஆய்வினூடாகவும்   தருவதாகமுதற்பகுதியும் ; ஈழத்தமிழர் வழக்கங்களாக இருந்துவரும் மரபில் நேர்ந்தமாற்றங்களையும் அதன் வேறுபாடுகளையும்  இனங்காணலாக இரண்டாம் பகுதியும் அமைகிறது.

மரபு  
மனிதர்களின் இருப்பினைஅடையாளப்படுத்தும் அவர்களின்வாழ்க்கை முறைகளைஅடையாளப்படுத்தும்அவர்களின்வாழ்வாதாரத்தின் நிகழ்வுகளைஆவணப்படுத்தும்மனிதஅடையாளங்களுக்கு அவர்களின்நடத்தைக்  கோலங்கள்தொடர்பாக பெயரிடும்ஒவ்வொன்றும் மரபாகும்பல வேறு கூர்ப்புகளிட்கும்ஆற்றல்களிற்கும் உட்பட்டுஅடையாள வேறுபாடுகளைக்கொண்ட சமூகங்கள் மனித இனம்விருத்தி அடைவதற்கும் அதன்நிலைப்பை உறுதி செய்வதற்கும்  மனித உற்பத்தியின் தனித் தன்மையைப்பேணுவதற்கும் ஒரு காட்டிச் செயற்பாடாய் அமைவதே மரபினைப் பேணல்ஆகிறது

இயல்பிலேயே அமைந்த இயற்கை வேறுபாடுகளாலும்தரைத்தோற்றஅமைப்புக்களாலும்உடலியல் வேறுபாடுகளாலும்  மனித சமுகம் சிறு சிறுகுழுக்களாகவே அதன் சமுக உற்பத்தியில் தொன்று தொட்டு ஈடுபட்டிருந்துவந்திருக்கிறது.

 எனவே மனித இனத்தினை எவ்வாறு தூய இனம் என்று எவ்வாறு சொல்லமுடியாதோஅவ்வாறே மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து செயற்பட்டுக்கொண்டு வரும் விதத்தினை  தூய மரபாகச்  சொல்ல முடியாதுஆகவே மரபு என்பதுமாறிக்கொண்டு வரும் ஒரு கூறு என்பது தெளிவாகின்றது.

மனித இனம் தனது வாழ்வாதாரத்தை நிலைப்பதற்காக பல வேறுமாற்றங்களினூடாக தன்னைக் கொண்டு சேர்ப்பதை தக்கணப் பிழைத்தல் என்றுஅறிவியல் ரீதியாகச் சொல்லுகிறோம்மனிதனது உடலமைப்பிலும்,உள்ளஅமைப்பிலும் சிந்தனா சக்தியிலும்பொறிமுறையைக் கையாளும்திறனிலும்  பல  வேறு சிறப்பான அடையாளங்களைப் பெற்று  அமைப்பு  ரீதியானமாற்றங்களையும் உள்வாங்கிதரைத்தோற்ற அமைப்பில் மற்றகுழுமங்களுடனாக செயல்த்திறனில் இருந்து வேறுபடுகிறான்அவ்வாறே தனதுவேறுபாட்டினை பேணுதல் தான் தங்கி வாழும் குழுமத்தின் நிலைப்பிற்க்குஅத்தியாவசியமாகிறது.

மரபு என்பது ஒரேயடியாகக் கொணருவித்துப் போடப்பட்டது அல்லஅது சிறுகச்சிறுக ஏற்படுத்தப்பட்டுக் கொண்டே வருவதுஆகவே மரபினை எல்லைப்படுத்தும்பொதுஅதன் குழுமமும் காலப்பகுதியும் இன்றியமையாதனவாகும்எனவேமரபினைக் கட்டறுத்தல் தொடர்பான எல்லையாக  ஈழத்தைச் சார்ந்த தமிழர்கள்எனும் குழுமம் மட்டுமே எனது ஆய்வில் பங்கு வகிக்கப் போகிறதுஇனி அவைசார்ந்தே எனது கருத்துக்கள்கருதுகோள்கள்ஆய்வின் எல்லைகள் அமையும்.

மரபு என்றதும்ஒரு குழுமத்தினால் , தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டுவருவதும்,மீறக்கூடாததும்,பெருமைக்குரியதும்,வழிபாட்டுக்குரியதுமானதாகவும்,அக்குழுமத்தினை அடையாளப்படுத்த அதிகளவில் பயன்படுவதும்  நவீனமாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு வருவதும் , அம்மாற்றத்தினைகாலப்போக்கோடு சீர்செய்யும்  வகையில் உள் எடுப்பதும்ஒவ்வொரு காலமாற்றநேரக்கோடு களுக்குள்ளாக நுழைந்து வந்ததானதும்,  நவீன மாற்றங்களால்முந்தையை அடையாளங்கள் சிதைவதுமான  ஞாபகப்பதிவுகளே உள்ளன.

பழமை மற்றும் மாறாத்தன்மையூடைய தொடர்ச்சி  என்பவையே மரபு என்பதின்உடனடி  நினைவுகளாக அமைகின்றனமரபினது அழுத்தம் அதனது குழுமத்தைநீடித்து நிலை பெறுவதில் உள்ள அடையாளமாகும்இதனால் சமுதாய விருத்தியில்இதன் பங்கு அளப்பரியதாகிறது.  இன்னும் சில சாரர் மனித விழுமியங்கள் என்பர்.விழுமியங்கள் மரபிநின்றும் சற்றே வேறு பட்டு , மரபுகளில் இருந்து வரும் தேவைசார்ந்த கூறுகளை சமுக நோக்காகக் கடைப்பிடித்தலாகிறதுஇதை நான்கூர்புக்குள்ளான மரபு என்பேன்.

 தமிழின் முதனூலான தொல்காப்பியத்தின் பொருளாதிகாரத்தின் இறுதியாகமரபியல் வைக்கப்பட்டிருக்கிறதிலிருந்து தமிழ் சமூகத்தில் மரபின் மரபை அறிந்துகொள்ளலாம்.  மரபுவழியான தமிழிலக்கிய அறிஞர்கள்  மரபை இலக்கணஇலக்கியங்களுடன்  தொடர்பு படுத்திப் பார்த்தார்கள் . “மரபு இலக்கணம்முறைமைதன்மை என்பன ஒரு பொருட்கிளவி”  என்பார் நச்சிநிக்கினியார்அவர்க் கூற்றுப்படி  ‘மரபு’ என்ற சொல்லின் பொருள் இலக்கணம் என்பதாகும். “தொன்று தொட்டு வந்தவழக்கு என்பார் அரசஞ்சண்முகனார்[1]

பின்வந்த  ஆய்வாளர்கள்  மரபை சமூக வழக்கங்களோடும் நம்பிக்கைகளோடும்சேர்த்தே அடையாளப்படுத்தினர்அதுவே மரபின் அடையாளமாக இருப்பதற்கும்பொருந்துவது.  “பரம்பரை பரம்பரையாக வரும் பழக்கங்களும் வழக்கங்களும்மரபெனப்படும்’ வழிவழி வரும் சம்பிரதாயங்களும், தொன்று தொட்டு வரும் சமூதாய கலாச்சார முறமைகளும் இதன்பாற்படும்”.[2 ]

மனிதனது பிறப்பு முதல் இறப்புவரை தொடரும் நிகழ்வூகளும் சடங்குகளும்நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைகின்றனவிவசாயம்உணவுமருத்துவம்கல்வி,இசை கூத்துசோதிடம்வழிபாடுகள் , சடங்குகள்விழாக்கள்உற்சவங்கள்போர்இடப்பெயர்வுமொழிகதை கூறல்மனித விழுமியங்கள்   ஆகியவை தொன்ற தொட்டு கடைப்பிடிக்கப்பட்டுவரும்பழமையானவையெல்லாம் மரபு மரபு  சார்ந்தவை ஆகவே கருதப்படுகின்றன .[3]

ஒரு காலத்தில் மக்களால் தேவை கருதி மேற்கொள்ளப்படும் ஒரு செயல் நிகழ்வு  நன்மையுடனும்உண்மை சாந்ததாகவும்   இருக்குமாயின் பின்வரும்தலைமுறையினாரால் தொடர்ந்து  பின்பற்றப்பட்டுச் சமூகச் செயல்பாடாகநிலைபேறடைகிறதுஇதுவே மரபாகவும் மரபு சார்ந்த அறிவாகவும் பேணப்பட்டுவருகிறது.  [4]

மரபு என்பதற்கு அகராதிகள் தரும் பொருள்களும் மேற்கூறியவற்றைஆதரிப்பதாகவே அமைகின்றன
திருமகள் தமிழகராதி “முறமை இயல்பு நல்லொழுக்கம் பெருமை பாடு வழிபாடு”[5]என்றும்யாழ்ப்பாண அகராதிபழமை, முறமை, வமிசம்”[6] என்றும் மரபைக்குறிக்கின்றன.கிரியாவின் தற்கால தமிழ் அகராதி இன்னும் கொஞ்சம்தெளிவுபடுத்தி மரபு என்பதை  “(பண்பாட்டின் எல்லா அம்சங்களிலும்பலகாலமாகப்பின்பற்று வருவது அல்லது பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதி  பாரம்பரியம்’’[7]என்று கூறுகிறது.
 அது பண்பாடு என்பதை “குறிப்பிட்ட இடத்து மக்களின் பழக்க வழக்கங்களும்இநம்பிக்கைகளும் கலைகளும் வெளிப்படுத்தும் முறைகளும் ; மக்களின் சிந்தனைவெளிப்பாடு”[8]என்றும் பொருள் தருகிறது.
மேற்கூறிய கருத்தக்கள் எல்லாவற்றிலும் மரபு எனப்படுவதை தொன்றுதொட்டுமாறா நிலையில் தொடர்ச்சியாக  பேணப்படுவது என்ற கருத்து இழையோடிநிற்பதை காணலாம்மரபு என்பதில் உள்ள கால நீட்சியும்  தோன்றின காலங்களில்இருந்த விடயங்கள் அக்காலத்திற் இருந்தவாறே பிரதிபண்ணப்பட்டு கடத்தப்படுவதுஎன்பதான நம்பிக்கையே மரபு தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நம்பிக்கை
  
மரபு என்பது மாறா இயல்புடையதா? “பழையன கழிதலும் புதியன புகுதலும் காலவழுவல” என்ற தமிழ் சமூகத்தில் மாறா இயல்புடையதாக இருந்தவை மரபாகினஎன்பது ஏற்படையதாக இருக்கின்றதா

இது பற்றி பேராசியாசிவசேகரம்  அவர்களின்  கருத்து இங்கேபொருத்தப்பாடுடையது.
 ‘
மரபின் மாறா இயல்பு பற்றிய  கருத்து மரபு என்பது அடையாளப்படுத்தும் வழிவழிஎன்ற வரலாற்றுக்கு முரணானதாகவே அமைகிறதுமதக்கோட்பாடுகளுக்கு ஒருவர் வழங்கும் நிரந்தரத் தன்மைகள்  அறிவு சார்ந்த  விசயங்களுக்கு அப்பால் ஆனவை.ஆனால் மரபு பற்றி நிலைப்பாடுகள் அவ்வாறனதல்லமரபென்பது மனிதருலுகில்உருவாகி விருத்தி பெற்றதொன்றுஅது எவராலும் சிருட்டிக்கப்ப்பட்டதல்லஎனவேமரபின் மாறாத்தன்மை பற்றி பேசுவோர் ; மரபையும்  அது செயற்படும் காலத்தின்அளவையும்  எல்லைப்படுத்தல் அவசியமாகின்றது.

வாழ்க்கை முறையின் வழமை தொடர்பானதாகவும்  சமுதாய நடைமுறையின்ஒவ்வொரு செயற்பாடு தொடர்பானதாயும்  உள்ள  மரபின் வலிமைக்கு முக்கியகாரணம் அது தன் பல்வேறு குறைபாடுகள் மத்தியிலும் நீண்டகால மனிதஅனுபவத்தை அது தன்னுள் கொண்டுள்ளமையே.[10] மரபு பொதுவாக காலமாற்றத்துக்குள்ளான நீண்டதொரு ஆராய்ச்சியைத் தர வல்லது.

இதிலுள்ள நீண்ட கால மனித அனுபவம் என்பதனால் குறிக்கப்படுவது மரபுதோன்றிய ஒரு தலைமுறையைச் சேர்ந்த   அனுபவம் நீண்டகாலம் தொடர்கின்ற காலநீட்சியை மட்டுந்தானா ?  நாகரிக வளர்ச்சியில்  மனிதர் பெற்றக்கொண்டவளமான அம்சங்களும் அனுபவ அறிவும்   மரபினுள் பொதிந்து மரபு வளமானதாகமாறிக்கொண்டு வருவதையே மரபினுள் உள்ள நீண்ட காலமனித அனுபவம்என்பதால் குறிக்கப்படுகிறது.

இது குறித்தே மரபு பற்றிப் பேசும்போது  பேராசிரியர் கைலாசபதி “உண்மையானஉயிர்த்துடிப்பான  மரபு என்பது கடுமையான வரையறை அற்றதுஅது காலத்துக்குகாலம் தன்னைத்தானே புதுப்பித்தும் தனக்கு வேண்டிய ஜீவ சத்துப் பெற்றும்இயங்கிச் செல்வதே ஆகும்.[11]  என்று மிகவும் தெளிவாக மரபைச் சுட்டுவார்.

மரபு என்பதில் கால நீட்சி பற்றியம் சிறிது நோக்க வேண்டும்தற்போதும்வழக்கமாக பின்பற்றப்படுகின்றவைதான் மரபுகளா?  ஏனெனில் குறிப்பிட்டகாலங்கள் மரபாக பெருவழக்கில் இருந்து மறைந்து போனவை மரபுகள்இல்லையாபல்லவர்  காலத்தில் நிலைபெறத்தொடங்கி  சோழர் காலம் தொட்டுநீண்டகாலம் உறுதியாகப் பேணப்பட்டு 1930களில் பிரித்தானியர்  ஆட்சியில் சட்டம்மூலம் இல்லாமல் செய்யப்பட்ட தேவதாசி முறையை  தமிழ்மரபாக இருந்ததுஎன்பதை மறைக்கப் போகின்றோமா ?

 அல்லது குருகுலக்கல்வி மூலம் 18ம் நூற்றாண்டு வரை கல்வி மரபு பேணப்பட்டதைமரபல்ல என்று நாம் கொள்ள முடியுமாஐரோப்பியர்  வருகையுடன் மறைந்தஓலைச்சுவடி எழுத்தாணிகளை எமது மரபல்ல என்று சொல்லமுடியூமா?வசனநடைகளின் உருவாக்கத்தோடு அரிதாகிப்போய்விட்ட செய்யுள் பிரபந்தங்கள்மரபானவை என்று தானே கொள்கிறோம் . இன்னும் விஜயநகர காலத்தில்பெருவழக்காகி 1930பதுகள் வரை தமிழ் நடையாகக் கோலச்சிய மணிப்பிரவாளநடை அக்காலத்தில் உயர்ந்த தாக்கம் செலுத்தும் மரபாத்தானே இருந்தது ?

இங்கு நாம் கவனிக்க வேண்டி விடயம் மரபென்பது குறிப்பிட்ட காலத்தின்தேவைகள் சமூக சூழல்கள் மற்றும் ஆதிக்க பண்பாடுகள் காரணமாகத்தோன்றுகிறதுஅந்தத் தேவைகள் சமூக சூழல்கள் பண்பாடுகளின் மாற்றங்களைமரபும் உள்வாங்கி மாறிகிறதுஅந்தத் தேவையோ சமூக சூழல்களோஆதிக்கப்பண்பாடோ  மறையும்  போது அந்த மரபுகளும் வழக்கொழிந்துபோகின்றனஅதாவது தமது குழுமத்தின் நிலைப்பிற்குத் தேவை ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வரைதான் அதன் பயன்பாடு காலம் செயற்படும்  காலமாகஇருக்கிறது.

மேற்கூறியவற்றில் இருந்து மரபு என்பதை அடையாளப்படுத்தும் பின்வருமாறுபருமட்டாக அடையாளப்படுத்தலாம்.

குறித்த காலச் சூழலின் தேவைகருதி மக்களால் செய்யப்பட்ட செயல்அல்லது நிகழ்வு  பலரால் ஏற்கப்பட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குகடத்தப்படுவதும் ஒவ்வொரு தலைமுறையின் அனுபவங்களையூம்வளமான அம்சங்களையூம் பெற்று செழிப்படைந்து வளர்கிறதும் குறித்தகாலச் சூழலின் தேவைகள் உள்ளவரை பேணப்படுவதுமான வாழ்க்கைமுறையின் வழமை தொடர்பானதாகவும்  சமுதாய நடைமுறையின்ஒவ்வொரு செயற்பாடு தொடர்பானதாயும் ,சமுதாய விழுமியங்களாயும்  உள்ள பண்பாட்டு கூறு ஆகும்.

இது வாய்வார்த்தையாகவோ, போலச்செய்தல் மூலமாகவோ பரவும் தன்மையுடையது. சமூக நிர்ப்பந்தம், பொதுப்பயன்பாட்டு நிலை, முன்னோர் பண்பு, அதிகாரம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றிரண்டு காரணங்களால் ஆழமாக வேரூன்றச் செய்யப்படுகிறது.[12]

அடிக்குறிப்புக்கள்
 1. கனகரத்தினம்.இரா.வை, நாவலர் மரபு,சு.விசுவலிங்கம் நினைவு நூல்வெளியீடு, 2008 பக்.01.
 2. முத்தையாஒ, மரபும் மரபு சார்ந்ததும்,  பதிப்புரை, காவ்யா, சென்னை.2012. 
 3.  முத்தையா.ஒ, மரபும் மரபு சார்ந்ததும், வாழ்த்துரை, காவ்யா, சென்னை, 2012.
 4. முத்தையா.ஒ, மரபும் மரபு சார்ந்ததும், காவ்யா, சென்னை, 2012,பக்.01.
 5.  திருமகள் தமிழகராதி, திருமகள் நிலையம், சென்னை, 2002.
 6.  யாழ்ப்பாண அகராதி, தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2005.
 7.  க்ரியாவின் தற்காலத் தமிழகராதி,  க்ரியா, சென்னை, 2005.
 8. மே.கு.நூல்
 9. சிவசேகரம்.சி, மரபும் மார்க்ஸியவாதியும், சவுத்  விஷன், சென்னை,1999பக்.27.
 10. மே.கு.நூ.பக்.33.
 11. முன்னுரை, மேற்கோள்,கனகரத்தினம்.இரா.வைநாவலார் மரபு, சு.விசுவலிங்கம் நினைவு  நூல்வெளியீடு, 2008, பக்.01.
 12.  தனஞ்சயன்.ஆ, நாட்டார் வழக்காறுகளில் நெய்தல்(கட்டுரை),   கானலம்பெருந்துறை, அ.கா.பெருமாள் (தொகு.ஆ), தமிழினி,சென்னை,2005,பக்.63.
(தொடரும்)

Related

தொடர் 6269502670151115235

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item