காவியம்

சித்தாந்தன்

காலத்தின்
மிக இளையதான இந்தக் கடிகாரம்
சுழன்றபடியிருக்கின்றது.

வலஞ்சுழியில் தேக்கி வைத்திருந்த
 மலா்நதியை
இடஞ்சுழி நோக்கி நகர்த்துகையில்
ஓய்ந்துபோன கடிகார முட்களிடை
சீழ் கட்டிய காயமாக 
ஒரு காவியம்.

காலம் சுருண்ட கணத்தில்
அத்திப் பூக்களைச் சூடிய ஒருவனின் பெயரால்
எழுதப்பட்டிருந்த காவியம்.

யாரேனும் சொல்லக்கூடும்
அவனைக் கடவுள் என.
ஆனபோதும்
நான் சொலலுவேன்
சீழ் கட்டிய காவியம்
அவனது காவியந்தான்.

கடிகாரம் 
எப்போதும் அவனைப் போலவே 
இளையதாக இருக்கின்றது.
சொற்கள்தான் மிகப் பழையதான சொற்கள்
ஒரு சரிவான அந்தியில்
சரியாயும் பிழையாயும் கிறுக்கப்பட்ட சொற்கள்
மிகப் பழைய சொற்கள்
00

Related

கவிதைகள் 6708474338786946592

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item