அஞ்சலி- லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து இயல் விருதினை 2007 ஆம் ஆண்டு பெற்றவரும்தமிழ் இலக்கியத்தை உலகம் எங்கும் பரவும் வகை செய்திடுவோம் என்னும் பாரதியின் வரிக்கு உயிர்ப்பூட்டிவருமான லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் காலமானர். இவர் 1935 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறையில் இளமானிப் பட்டம் பெற்ற இவர் லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தார். 

இவருடைய கணவர் மார்க் ஹோம்ஸ்ரோம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆவார். இவர்கள் இருவருக்கும் ராதிகா, சாவித்திரி என இரண்டு மகள்மார் உள்ளனர். ஆர்.கே.நாராயணனின் படைப்புக்களை வாசிக்க ஆரம்பித்த பிறகுதான் இவருக்கு இலக்கிய ஆர்வம் கிளைத்தெழுந்தது. அந்த ஆர்வமே இவரைப் பெண்களின் எழுத்துக்களின் மீதும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதும் திரும்பியது

பிரித்தானியாவில் SALIDAA வின் (South Asian Diaspora Literature and Arts Archive). நிறுவகராகப் பணியாற்றிய இவர் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக நவீனத் தமிழ்ப் புனைகதைகள், கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வந்தவர். மௌனி, புதுமைப்பித்தன், மாதவையர், சல்மா, சேரன்,சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந.முத்துசாமி, அம்பை,பாமா, இமையம் போன்றவர்களின் படைப்புகளை மொழிபெயர்த்தவர். சுந்தர ராமசாமியின் "குழந்தைகள் பெண்கள் ஆண்கள்" என்ற புதினத்தையும் ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளார்.மற்றும் ஆகியோரின் படைப்புகளை சிலவற்றையும் சிலப்பதிகாரம்,மணிமேகலை ஆகிய காவியங்களையும் ஆங்கிலத்தில் அழகுற மொழிபெயர்த்தவராவார்.இங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்புப் பட்டறைகளை நடத்தித் தமிழ் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்வதற்குப் புதியவர்களை ஊக்குவிப்பதில் பெரும் பங்காற்றி வந்தவர். தமிழ்க் கவிதைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் லண்டனிலும் பிற இடங்களிலும் தமிழரல்லாதவர்கள் மத்தியில் வாசித்துக் காட்டியுள்ளார். மற்றும் பாமாவின் கருக்கு, அம்பையின் காட்டில் ஒரு மான் ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக ஹட்ச் கிராஸ்வோர்ட் புக் (Hutch Crossword Book) விருதை முறையே 2000, 2006ஆம் ஆண்டுகளில் பெற்றவர்
அண்மையில் இவரால் வெளியிடப்பட்ட Lost Evenings, Lost Lives ஆங்கில மொழியாக்கம், ஈழத்தின் மூத்த தலைமுறை முதல் இன்றைய தலைமுறைக் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளைஉள்ளடக்கியுள்ளது. பேராசிரியர் சி.மௌனகுரு கூறுவதைப்போல் “தமிழ் இலக்கியத்தையும் அதனூடாகத் தமிழர் வாழ்க்கை அனுபவங்களையும் அவர்களது உணர்வுகளையும் துன்ப துயரங்களையும் பிற மொழி பேசுவோர்க்கு அறிமுகம் செய்து வைத்தவர் லக்சுமி ஹோல்ம்ஸ்டோம்”. இவருக்கு இயல்விருது வழங்கப்பட்ட சமயத்தில் இயல் விருது தன் தரத்தை இழந்துவிட்ட தாகக் கூறி கடுமையான விமர்சனத்தை எழுத்தாளர் ஜெயமோகன். முன் வைத்தார் என்பதையும் கூறி இக்குறிப்பை முடிக்கிறேன்.
சி.ரமேஷ்

Related

அஞ்சலி 172765566658780980

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item