சாந்தனுக்கு விருது.
ஐ.சாந்தனின் ஆங்கில நாவல் FAIRWAY நஷ்னல் இலக்கிய ஆங்கில மொழிப் பரிசை வென்றது.

சு. மகேந்திரன்.

முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மேற்கூறிய விருது,  மூன்று மொழிகளிலும் வெளிவந்த நாவல்களுக்கான விருதாக இடம் பெற்றுள்ளமை சிறப்பு அம்சமாகும். சிங்கள மொழிக்கான விருது, சிப்பிலி மாயாதுன்னையின் மகாசமி என்னும் நாவலுக்கு வழங்கப்பட்டது. ஆங்கில மொழிக்கான விருது, ரிஸ்வான மொசித்தின் இற் இஸ் நொற் இன் அவர் ஸ்ரார் என்ற நாவலுக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் .சாந்தனது ரெயில்ரன் பரலல் என்ற நாவலுக்கும் இணைப் பரிசாக வழங்கப்பட்டன. செல்வி சஜானி செனநாயக்க (வயது 15) என்ற இளம் பெண்ணிற்கு எழுத்தாற்றலை ஊக்குவிப்புக்கான பரிசு கிடைத்தது. அவர் ஆங்கிலத்தில் பேர்ல் ஒப் த ருத் என்ற நாவலை எழுதியுள்ளார்.


 16 ஆங்கில நாவல்களும் 69 சிங்கள நாவல்களும் 5 தமிழ் நாவல்களும் தேர்வுக்கு வந்தன. தமிழ் நாவல்கள் யாவுமே தகுதியற்றவையாக தேர்வுக்குழுவால் நிராகரிக்கப்பட்டன. தேர்வுக்குழுவைச் சார்ந்தவர்கள் (தமிழில் எந்தப் பெரிய படைப்புக்களையும் எழுதியவர்கள் அல்ல) ஏதாவது ஒரு நாவலைத் தேர்ந்தெடுத்திருந்திருக்கலாம்.
கடைசிச் சுற்றுக்கு வந்த (ஆங்கிலம்) 5 நாவல்களில் சாந்தனின் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டது சிறப்பானது. நல்ல வேளை சாந்தன் தன் நாவலை ஆங்கிலத்தில் எழுதியது. தமிழில் எழுதியிருந்திருந்தால் புகழ் பெற்ற விமர்சகர்களால் கிழித்தெறியப் பட்டிருக்கக் கூடும்.

500000 ரூபாவினை பரிசுத் தொகையாகப் பெற்றுள்ள சாந்தன் அவர்களை மேன்மேலும் முயற்சிகளில் ஈடுப்பட வாழ்த்துவோம்.

கா..சு கூறுவது போல மிகப் பெரிய படைப்பாளிகளே தேர்வில் ஈடுப்பட வேண்டும். தமிழில் தேர்வுகளில் ஈடுபடுபவர்கள் தமது நிலையினை முதலில் பரிசீலிக்க வேண்டும். தகுதியற்றவர்களை தேர்வாளர்களாக நியமிப்பதை விருதுக்குழுவும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

உதவி- சண்டே ரைம்ஸ்
ஜனவரி 17
                          

Related

பதிவுகள் 9174353311861031169

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item