கொழும்பு சர்வதேச திரைப்படவிழா – 2014

உலக அரங்கில் இலங்கை சினிமாவை முதன்மைப்படுத்துவதற்கான ஒரு திறவுகோல்


இதுவரை காலமும் சர்வதேச திரைப்பட விழா ஒன்று இலங்கையில் நடைபெற்றதில்லை. சிங்களப் படங்களுக்கான விருது விழாக்கள் அல்லது வேறு ஒரு நாட்டின் எம்பசிகள் இடைக்கிடையே நடத்தும் விழாக்களே இலங்கையில் நடைபெற்றுள்ளன. பல சர்;வதேச  விருதுகளை வென்றுள்ள திரைப்படங்களை தயாரித்துள்ள இலங்கைக்கு இது ஒரு பின்னடைவாகும்.

'கொழும்பு சர்வதேச திரைப்படவிழா' என்ற பெயருடன் முதன்முறையாக இலங்கைச் சினிமா நெறியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இவ்விழா,செம்டம்பர் 2 இல் இருந்து 7 வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. இவ்விழாவானது இலங்கை சினிமா வரலாற்றில் ஒருபுதுயுகமாக அமையும் என்பதோடு  இலங்கையின் சினிமா ரசிகர்கள், மாணவர்கள், சினிமா ஊக்கிவிப்பாளர்கள் இடையே வரவேற்பையும் பெறும் என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

உலகம் முழுவதும் உள்ள சுயாதீனமாக இயங்கும் ர்வதேச திரைப்பட விழாக்கள் எல்லாவற்றிலும் இலங்கை திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றிருந்தும் கூட, எமக்கான ஒரு சர்வதேச விழா கடந்த காலத்தில் நடைபெறாமல் இருப்பது பெரும் குறையாகும்.

நெறியாளர்கள் சங்கம் இந்தப் மிகப் பெரிய பொறுப்பை ஏற்று அதை நடத்துவதற்கு, ஒக்கியாமா (யப்பான்) சர்வதேச திரைப்படவிழா ஏற்பாட்டார்களின் உதவியை நாடியுள்ளது.

 இந்தத் தகவல்களை சமீபத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் அசோகா றெங்கம தெரிவித்தர். எமது நீண்டநாள் கனவு நிறைவேறியுள்ளதனால் தான்  பெரிதும் மகிழ்வுறுவதாக மேலும் கூறினார்;.

கட்டணமின்றி நடைபெறப்போகும் இத்திரைப்படவிழாவில், சமீபத்தில் ஐரோப்பாவில் திரையிடப்பட்ட படங்கள் திரையிடப்படும். அதேவேளை இவை ஆசியாவில் முதன்முறையாக திரையிடப்படபோகும் திரைப்படங்களாகவும் இருக்கும்.

திரையிடப்படும் இப்படங்கள்  பலவகையான பகுதிகளைச் சார்ந்த கலைப்படங்களாகும். இதுவரை காலமும் இலங்கை திரையரங்குகளை அலங்கரிக்காதனவாகவும் இருக்கும். மேலும் இலங்கையைச் சேர்ந்த கலைஞர்களையும், திரைப்பட தயாரிப்பாளர்களையும் வெளி உலகுக்கு அறிமுகப்படுத்துவதற்கு இத்திரைப்பட விழா உறுதுணையாக அமையும் என்றார் றேங்கம.  “எப்படி எமது தணிக்கையாளர்;களை சமாளிக்கப் போகிறீர்கள்“ என ஊடகவியலார்கள் கேட்டதற்கு, இந்த விழாவிற்கு ஒருங்கமைப்பாளராக செயல்படப்போகும் அனோமா கருணாரத்தின, “தணிக்கையாளர்களும் நவீன சினிமாவை விரும்பும் பார்வையாளரர்களும் திரைப்படத்துறையில் எதிர்காலத்தில் ஈடுபடவேண்டும் என்ற கனவைக் கொண்டுள்ள மாணவர்களும் சர்வதேச திரைப்படவிழா ஒன்றில் பங்குபற்றும் போது ஏற்படும் உணர்வை முழுமையாக அனுபவிக்கும் வகையில் செயல்படுவர்கள் என எதிர்பார்ப்பதாக“ கூறினார்.

இந்த விழாவின் முதன்மை கேந்திர நிலையமாக கொழும்பு ரீகல் அரங்கு விளங்கும் அத்தோடு படங்கள் திரையிடப்படப்போகும் மற்றைய திரை அரங்குகளாக மெஜஸ்ரிக் மற்றும் எம்பயர் என்பன அமையும்.

மூன்று பிரிவுகளாக இவ்விழா அமையப்போகிறது. முதலாவதாக திரைப்பட விழா, இரண்டாவதாக மாற்றான திரைப்படங்கள்,மூன்றாவதாக அடுத்த ஆண்டிலிருந்து இந்து சமுத்திர நாடுகளிடையே நடைபெறப் போகும் திரைப்படப்போட்டிக்கான முன்னெடுப்பு முயற்சிகள் என அமையவிருக்கின்றது.


இம்முறை ஸ்பானிய சினிமாவே முதன்மைப்படுத்தப்படவுள்ளதால், இரண்டு புகழ்பெற்ற நெறியார்களின் திரைப்படங்களின் மீள்பார்வையாக அமையும் வகையில்  யு+லிற்றி பினோச்சி, மைக்கல் அங்கிலோ அன்ரனியோனி என்பவர்களுடைய திரைப்படங்கள் முதன்மைப்படுத்தப்படவுள்ளன.

நெற் (Net) பாக் (Pac) திரைப்படங்கள், ஒக்னேவாவிற்கான ஒரு திறவுகோல், சிறிலங்காவின் புதியவகை திரைப்படங்கள், சிறிலங்காவின் டயஸ்பறா திரைப்படங்கள், அத்துடன் சிறுவர்;களுக்கான திரைப்படங்களும் காண்பிக்கப்படவுள்ளன.

கல்விசார் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் (மாணவர்கள் இவ் வகை விழாக்கள் பற்றி அறிந்து கொள்ள) திரைப்பட ஆர்வலர்கள், திரைப்பட துறை பயிலுனர்கள் சீனியர் சிற்றிசன்கள் எனப் பலரும் பார்வையாளர்களாக அழைக்கப்படவிருக்கிறார்கள்எழுபதுக்கு மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன

இந்த விழாவில் சிறுவர்களுக்கான திரைப்படங்கள், டைரக்டர்கள் படைப்புக்களின் ஓர் மீள்பார்வை, யப்பானிய சினிமாவுக்கான ஒரு பார்வை, குறுப்படங்கள், மற்றும் சில விபரணப்படங்களுக்கும் முதன்மையளிக்கப்படவுள்ளன.

பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள ஆரம்பவிழாவில் இலங்கையின் திரைப்படப் பிரமுகர்;கள் மற்றும் சர்;வதேச பிரதிநிதிகள் செங்கம்பள விரிப்பில் ரீகல் திரைஅரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இலங்கைச் சினிமாவின் தலைமகன் என விதந்துரைக்கப்படும் யேம்ஸ் பிரிசிற்கு விசேட மரியாதைகள் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவரே இலங்கை திரைப்படத்தை சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கியவர்;.

இலங்கை திரைப்படங்கள் 1947 இல் வெளிவரத் தொடங்கிய போதும் 1956 இல்தான் அந்தத்துறை இந்த நாட்டின் உண்மையான தோற்றுவாயுடன் மீண்டும் பிறந்தது. யேம்ஸ் பீரிசின் Silver line உலகப் புகழ்பெற்ற  கான்ஸ் திரைப்பட விழாவில் 1956இல் இடம்பெற்ற பின்னரே இலங்கைச் சினிமா சர்வதேச அளவில் உற்றுப் பார்க்கப்பட்டது. அதன்பின்னரே இலங்கை சினிமா பல சர்வதேச திரைப்பட விழாக்களைச் சந்தித்தது.


நன்றி -சண்டே ரைம்ஸ்

ஆங்கிலம் வழியாக தமிழில் -சு.மகேந்திரன்.

Related

கட்டுரைகள் 8846815534974753635

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item