வேட்டைவாளிகள் - வி.கௌரிபாலன்.


கீழைக் கடலில் தெறித்த இரத்தச்சேறு
வானத்தில் மோதி
வீட்டுப்
படலைகளில் வீழ்ந்து
பாஸ்கா குறியாகும்

கோட்டையில் ஏறிய வேட்டைவாளிகள்
குழவிக் கூடுகளை முற்றுகையிடும்
முற்றுகையில் கொடுக்குகளை முறித்துச்
சரணடைந்த குள(ழ)விகளை
சமாதி கட்டும் வேட்டைவாளிகள்

(சண்முகம் சிவலிங்கம்)


ஆம்பிளைப்பிள்ளை என்பதற்காக மனைவி தேடி வாங்கிய நீல நிற கம்பித் தொட்டிலில்,தன் குழந்தை நரிக்கொத்தான் விரட்ட,முகத்தை சுழித்துச் சிணுங்கிப் பின் சிரித்துக்கிடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். நீலம் பாரித்த நரம்புகள் வெளிப் புடைத்துக் கிடக்க ஒடுங்கி வெளிறிப் போன கைகளுக்குள் துணியைப் பொத்தி தொட்டிலுக்குள் ஒருக்கனித்துப் படுத்திருக்கும் குழந்தையை ரசித்துக் கொண்டிருந்தான். பிறந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும், அதற்குரிய வளர்ச்சியை அடையாது கிடப்பதால் கவலையானான். கடும் யுத்த காலத்தில் கருவானதை நினைவு கூர்ந்தான். பசியுடனும், தாகத்துடனும், செல் அடிச்சத்தத்துக்குள்ளும், பெரும் வெடி ஓசைகளுக்குள்ளும், கடும் குளிரிலும், வெய்யிலிலும் தன்னுடன் மனைவி அலைந்து திரிந்த போது கருவில் வளர;ந்த குழந்தை என நினைத்துக் கொண்டான். தடித்த யன்னல் சீலை தொங்கிக் கொண்டிருந்த மிதமான குளிரூட்டப்பட்ட மருத்துவ அறையில் வைத்து, மருத்துவர் குழந்தைக்கு இதயத்தில் துவாரம் இருப்பதால், வளர்ச்சி குன்றி விட்டது எனக் கூறிய போது துவண்டு போனான். தொடர்ச்சியான கவனிப்பும், சத்திர சிகிச்சையும், குழந்தையை மீட்டு விடும் என்று மருத்துவர் கூறிய போதும், நாளாந்தம் நலிவடையும் குழந்தையைப் பார்த்துக் கவலையானான். வெளிறிச் சிவந்த உதடுகளைத் திறந்து, வாயைச் சுழித்து கொட்டாவி விட்ட குழந்தையை கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தான். கண்னைத் திறந்து, தன் கண்களை கூர;ந்து பார்க்கும் குழந்தையை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். நக்கல் சிரிப்புடன், நெஞ்சால் உண்ணி மேல் எழுந்து கதவைத் தாண்டி வெளியேறி தென்னை வட்டுக்கும்,வேப்ப மரத்துக்கும், இடையே மேல் கிளம்பிப் பறப்பதை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். திடுக்கிட்டு எதுவோ உந்த தன் உணர்வுள்ள காலை நிலத்தில் ஊன்றி, உணர;வற்ற செயற்கைக் கட்டைக் காலைத் துhக்கி வைத்து வெளியே நகர;ந்து, ஆகாயத்தில் மிதக்கும் குழந்தையை ஏக்கத்துடன் பார்த்து நின்றான். பின் தானும் நெஞ்சால் உண்ணி பறந்து விட முடியும் என  நினைத்தான். செயற்கையான கட்டைக் கால் தடையாக இருப்பது போல் பட்டது. கட்டைக் காலை கழட்டி விட்டு விட்டு நெஞ்சால் உண்ணி மேல் எழுந்த போது தன் உடல் காற்றில் லேசாகி மிதப்பதை உணர்ந்தான். நீண்ட காலை நீள விட்டு மிதி வெடியில் சிதைந்து போன தன் பாதிக் காலை மடித்த நிலையில், குழந்தை முந்தியும், பின் தான் முந்தியும் என பறத்தலின் சுகத்தை ஏகாந்தமாய் அனுபவித்துப் பறந்தான். தெருவிலும், ஒழுங்கைகளிலும், வளவுகளுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் நடக்கும் அர;த்தமற்ற சண்டைகளைக் களைந்து, அதன் உண்மைத்தன்மையை, காலத்தை முன் நகர்த்தியும், பின் நகர்த்தியும், நிகழ்காலத்துடன் ஒப்பிட்டுக் காட்ட விரும்பினான். ஒழுங்கற்ற தன்மையால் அழகியலாக மாறும் ஆற்று விழிம்போரத்தையும், நீண்ட வெண் மணல் பரப்புடன் கூடிய கடற்கரை விழிம்போரத்தையும் காட்ட முனைந்தான். பெரும் காடுகளிலும், பற்றைக் காடுகளிலும்,வாழும் ஜீவராசிகளின் வாழ்க்கையை, கால நீட்சியில் மரணித்து மண்ணோடு கலக்கும் சொற்பமான கட்டற்ற வாழ்வைக் காட்டமுனைந்தான். சுடலைகளில் எhpயும்; அல்லது புதைக்கப்படும் பிணங்களை அவா;களின்  வாழ்வின் உன்னதங்களை, கசப்புகளை, கயமைகளைக் காட்ட ஆசைப்பட்டான்.

குழந்தையின் வீரிட்ட அலறல் சத்தத்தில் திடுக்கிட்டு நினைவு வந்தவனாய் பரபரப்புடன் தொட்டிலை கூர்ந்து ஆராய்ந்தான். கண்களில் நீர; ததும்ப அழும் குழந்தையைப் பார்த்து தடுமாறிப் போனான். தொட்டிலின் விழிம் போரம், பச்சையும், கடும் காவி நிறமும், நீலமும் கலந்த வேட்டைவாளி ஒன்று ஒட்டி ஒழிந்திருப்பதை பதட்டத்துடன் அவதானித்தான். பதட்டத்துடன் புறங்கையை வீச, விரல் நுனிகள் தொட்டிலின் விழிம்போரம் பட்டு வலிப்பதை உணர்ந்தான். விருட்டென்று எழுந்த வேட்டைவாளி தன் காதடியைச் சுற்றி, நடுக் கூடத்தில் திரும்பி முன் கதவு வழியாக வெளியே போவதைப் பார்த்திருந்தான். ஒரு புழுவைப் போல் சிறுத்துக் கொண்டுவரும் தன் குழந்தையை வேட்டைவாளி துாக்கிச் சென்றுவிடுமோ எனப் பயந்தான். தன் குழந்தையை துhக்கிச் சென்று, தன் உமிழ் நீரைச் சுரந்து, கூட்டுக்குள் வைத்து தன்னினமாக மாற்றி விடுமோ எனச் சினந்து வெகுண்டெழுந்தான். தரையின் தொடுகையில் சில்லிடும் தன் ஒற்றைக் காலை வலுவாக ஊன்றி, உணர்வற்ற தன் செயற்கை கட்டைக்காலை நிலத்தில் பதித்து, எழுந்து நின்று தன் பார்வையை கூர்மையாக்கி வேட்டைவாளிக் கூடுகளை ஆராயத் தொடங்கினான். கோளின் யன்னல் நிலைகள் உள் வீட்டுக் கதவு நிலைகள், சுவர் மூலைகள் என, களிமண்ணாலான வேட்டை வாளிக்கூடுகளை, நன்கு புலனாய்வு செய்து திட்டமிடப்பட்ட முகாம் தகர்ப்பிற்கான உணர்வுடன் உடைக்கத் தொடங்கினான். உடைந்த முகாமின் களிமண் சிதிலங்களுக்குள் இருந்த புழுக்களை பக்குவமாக எடுத்து அவற்றிற்கு விடுதலை அளித்த உணர்வுடன் வெளியே விட்டான். மீண்டு வந்து தொட்டிலைப் பார;த்தவன், தன் உடல் பதட்டத்துடன் தன்னிச்சையின்றி நடுங்குவதை உணர;ந்தான். தன் குழந்தையின் கை, கால்கள் சூம்பி, விரல்கள் அற்று கூலமாகிக் கிடப்பதைப் பார்த்து, கடல் பேரலைக்குள் சிக்குண்டு மூச்சுத்திணருவது போல் உணர்ந்தான். இவை எதுவும் உணராது துாங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை ஏக்கத்துடன் பார்த்து நின்றான். தன் செயற்கையான கட்டைக் காலை உதறி எறிந்து விட்டு குழந்தையை மார்பில் அணைத்தபடி உந்தி சுழன்றெழுந்து, ஓட்டைப் பிய்த்துக் கொண்டு பிரபஞ்ச வெளியில், தப்பித்த உணர்வுடன் மிதந்தான். சுய ஒளியற்ற நிலவின் பொய் விம்பத்தை உடைத்துக் காட்ட விரும்பினான். சுழலும் விண் கற்களையும், நட்சத்திரங்களின் பிரமாண்டத்தையும், கோல்களின் பிரமாண்டத்துடன் கூடிய சுழற்சியையும் காட்ட விரும்பினான். நீண்ட நேர புலன் இழப்புக்கு இடம் கொடுக்காத வேட்டைவாளியின் விதிர்… விதிர்க்கும் இரைச்சலினால் அருவருப்புடன் உணர்வு கொண்டான். ஆள் அரவமற்று வீடு மௌனத்தில் உறைந்து கிடப்பதால், விதிர; விதிர்க்கும் இரைச்சல், எங்கிருந்து வருகின்றது என கூர்ந்து அவதானிக்க முடிவதாக நினைத்தான். தனது படிப்பறையில் இருந்து இரைச்சல் எழுவதை அடையாளப் படுத்தக் கூடியதாக இருப்பதை உணர்ந்தான். தன் பாரமான கட்டைக் காலை இழுத்து நகர்த்தி, ஓசை எழாது கூடத்தில் இருந்து படிப்பறை நோக்கி தும்புத் தடியுடன், கிடைவாக்கில் சுவரில் ‘கவர் எடுத்தபடி தான் யாருடையதோ கட்டளைக்கு கட்டுப்பட்டு நகர்வதைப் போல் உணர்ந்தான். புத்தக அலுமாரியின் பலகை இடுக்கில் பெரியதோர் செம்மண் கூட்டைக் கண்டு தடுமாறிப் போனான். தும்புத் தடியை இலக்கு நோக்கி உயர்த்தி, சிறிது நேரம் அமைதியாக நின்று பின், ஓரு தன்னியங்கித் துப்பாக்கியின் உதறலுக்கு இணையான வேகத்தில் தும்புத்தடியை இயக்கி கூட்டை நொருக்கித் தள்ளினான். பழைய காலத்து அந்த அலுமாரியின் குறுக்குப் பலகை, தனது இடியின் வேகத்தில் கழண்டு விழ, புத்தகங்கள் சிதறி நிழத்தில் விழுவதை கவலையுடன் பார்த்து நின்றான். கூட்டின் களிமண் ஓடுகளை பக்குவமாக சிதைத்து, புழுக்களை பக்குவமாக வெளியே கொண்டு போய் விட்டான். கட்டைக் காலின் சுமையுடன் அலைந்து, களைத்துச் சோர்ந்து போய் தொட்டிலுக்கருகில் வந்தமர்ந்தான். தொட்டிலுக்குள் குழந்தையின் தோற்றத்தைப் பார;த்து, உடல் வலுவிழந்து துவண்டு போனான். சூம்பிய கைகளும், கால்களும் உடலுக்குள் செருகி தலையும், உடலும் மட்டும் கொண்ட புழுவாக, தன் குழந்தை மாறிவிட்டதை இயலாமையுடன் பார;த்துக் கொண்டிருந்தான். இலையொhன்றில் குழந்தையை கிடத்தி, பெரும் கானக வெளியில் மிதக்கவிட்டு தான் பின்னே மிதந்து போனான். பு+க்களில் தேன் வாடை நுகரப் பழக்கினான். மெல்லிய காற்றின் ஓசையை செவிமடுக்கப் பழக்கினான். பெரும் மிருகங்களின் உறுமலை, பிளிரல்களை, பயமின்றி செவிமடுத்து, அதன் திசையறிந்து விலத்தி நடக்கப் பழக்கி குழந்தையுடன் மிதந்தான். குருவிகளின் கீச்சிடல்களை ரசித்து, தனித்துவங்களை இனங்கண்டு தரம்பிரிக்கும் ஆற்றலைக் கண்டடையக் கற்றுக் கொடுத்தான். நினைவற்ற நினைவில் தன் கண்களுக்குள் சாமி அறை நோக்கி இரைச்சல் எழாது போகும் அதிக காவி நிறம் கொண்ட வேட்டைவாளியின் பறத்தலைக் கண்டு நினைவு கொண்டான். ஆத்திரமும் அவமானமும் உந்த ஆவேசமாய் மீண்டும் தும்புத்தடியைத் துாக்கி, சாமி அறை நோக்கி எந்தவித நிலையெடுப்பும் செய்யாது முன்னேறினான். காளியின் படத்துக்கும், பிள்ளையின் நலத்துக்காக காஜ்ஜீயார; ஓதிக்கொடுத்த “அல்லா என்ற அரபு எழுத்துப் பதித்த படத்துக்கம் இடையில் வேட்டைவாளிக் கூட்டைக் கண்டான்.  சாமிப்படங்களை நோக்கி தும்புத் தடியை நீட்ட சங்கடப்பட்ட போதும், கூட்டை தகர;க்க வேண்டும் என்ற ஆவேசத்தில் இடித்தான். பதட்டத்தில் இலக்குத் தவறிய கையால் சாமிப்படக் கண்ணாடிகள் நொருங்குண்டு நிலத்தில் சிதறி விழுவதை ஏமாற்றத்துடன் பார்த்து நின்றான். விழுந்து நொருங்கிய கண்ணாடிச் சட்டத்துக்குப் பின்னே ஆயிரக் கணக்கான புழுக்களின் எச்சங்களும், வெண்ணிற செதில்களும் கிடப்பதைப் பார;த்து உறைந்து போய் நின்றான். மீண்டும் இலக்குத் தவறாது நிதானமாக வேட்டைவாளிக் கூடுகளை தகர்த்து உட்கிடந்த புழுக்களை விடுவித்தான். மீண்டும் தொட்டில் அருகே ஸ்ரூலில் வந்து அமர்ந்த போது எதுவித பிடிப்புமற்று நம்பிக்கை இழந்து போயிருந்தான். முற்றாக முள்ளந் தண்டு எலும்பை இழந்து போயிருந்த குழந்தை, துண்டு, துண்டான தசைக் கோர;வையாக நெளியும் புழுவாக மாறி விட்டிருப்பதைக் கண்டான். முற்றாக நம்பிக்கை இழந்து, துவண்டு சிந்திக்கும் ஆற்றல் அற்றுப் போன கணத்தில், வெளியே வேட்டைவாளிகளின் நிதானமான பறத்தல் ஓசையைக் கேட்டான். வேகமாக எழுந்து யன்னல்களையும், கதவுகளையும் மூடி தன் குழந்தைக்காக தன்னை ஒடுக்கிக் கொண்டு உள்ளே இருக்க முனைந்தான். வெளியே வேட்டைவாளிகளின் இரைச்சல் அதிகமாகிக் கொண்டு வருவதையும், யன்னல் கண்ணாடிகளில் “நங் என்ற ஓசையுடன் முட்டி இரையும் வேட்டைவாளிகளின் ஓசை தன் மண்டையைக் குடைந்து நிம்மதியை இழக்கப்பண்ணுவதை உணர;ந்தான். ஆவேசத்துடன் முன் கதவை திறந்து தும்புத் தடியுடன் வெளியே பாய்ந்தான். வெளியில் ஆழமான நிசப்பதம் உறைந்து போய்க் கிடந்ததால் நிலைகுலைந்து போனான். தாக்குதலுக்கான இலக்குகள் ஏதும் இல்லாததால் சுய நினைவற்று காற்றில் தும்புத்தடியை நாலாபுறமும் வீசி தன்னிச்சையின்றி சண்டை செய்தான். சோர்ந்து களைத்து நிலத்தில் வீழ்ந்தான். மீண்டும் வெளி ஆழமான நிசப்தத்தில் உறைந்து போனது. தன் மூச்சிறைப்பின் ஓசையையும் மீறி காற்றின் அதிர்விரைச்சலை உணர;ந்தான். அயல் வீட்டின் வேலி ஓரக் கம்பிக் கட்டைப் பொந்தில் இருந்து வேட்டைவாளிகள், எதுவித தளம்பலுமற்று துப்பாக்கி சன்னத்தின் வேகத்துடன் இரைச்சலற்று பிரதான வாயிலை நோக்கி பறந்து வருவதைக் கண்டான். தன்னை சுதாகரித்துக் கொண்டு எழ முன்னரே, அடுத்தடுத்து பல வேட்டைவாளிகள் அசுர வேகத்தில் வீட்டுக்குள் நுழைவதை கையாளாகாத தனத்துடன் பார்த்து நின்றான். தடுமாறி எழுந்து மம்மலான இருள் பரவிக் கிடந்த கூடத்துக்குள் வந்தான். தொட்டிலுக்குள் புழுவாகி உறங்கிக் கிடந்த குழந்தை காணாமல் போய் விட்டிருப்பதைக் கண்டு திணறிப் போய் நின்றான். பச்சையும், காவி நிறமும், நீலமும் கலந்த நுாற்றுக் கணக்கான வேட்டைவாளிகள் கதவு நிலையில் பெரிய கூடு ஒன்றை, தீவிரமாக களிமண்னும் தமது உமிழ்நீரும் கொண்டு அமைப்பதைக் கண்டான். கூட்டுக்குள் திணிக்கப்பட்ட பெரிய புழுவொன்றின் வெண்ணிற அடிப் பகுதியை மூடிவிடுவதற்கு வேட்டைவாளிகள் வேகமாக இயங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். தம் உமிழ் நீரில் களிமண்னை குழைத்துக் கூட்டுக்குள் தன் புழுவாகிப் போன குழந்தையை வைத்து மூடுவதற்கு, வேட்டைவாளிகள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பதை இயலாமையுடன் பார்த்து நின்றான். முழுமையாகக் கூட்டை அமைத்த திருப்தியுடன் வேட்டைவாளிகள் பிரதான வாயில், யன்னல், ஏனைய கதவுகள் என காவல் நிற்பதை பயத்துடன் பார்த்து நின்றான். கூட்டை இடித்தால், கூட்டுக்குள் இருக்கும் புழுவாகிப் போன தன் குழந்தைக்கும், தனக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சி, தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, புலனை லயிப்புக்கான விடயங்களில் கவனம் செலுத்த முடியுமா என சிந்திக்கத் தலைப்பட்டான். இதயத்தில் துவாரத்துடன் புழுவாக தன் குழந்தை இறப்பதைவிட, வேட்டைவாளி என்னும் இன்னோர் இனமாக உயிர்வாழ்வது குறித்து திருப்தியடைய முடியும் என நினைத்தான். வேட்டைவாளிகளின் நேர்த்தியான கூடமைக்கும் ஆற்றல் பற்றி திருப்தியடைய முயற்சித்தான். மூடுண்டு இருக்கம் கூட்டுக்குள் புழுக்கள் வேட்டைவாளியாக மாறும் வரை, சுவாசிக்கக் காற்றும், கூட்டுக்குள் உருமாற இடவசதியும் வழங்கும் வேட்டைவாளிகளின் நுண்திறனில் புளகாங்கிதம் அடைய முயற்சித்தான். கூட்டின் வெளித் தோற்றப்பாட்டின் அழகியல் அம்சங்கள் தரும் போதையின் கிறக்கத்தில் மூழ்கிப் போக ஆசைப்பட்டான். கூட்டை யாரேனும் உடைத்து விடுவாரகளோ என்ற அச்சம் தனக்குள் பரவிப் படர்வதை உணர்ந்தான். மிக நீண்ட பாரம்பரியத்தில் இருந்து வருகின்ற காவல் காக்கின்ற பொறுப்புணர்வு மிக்க கடமையை தன்னியல்பாக ஏற்று, வேட்டைவாளிக் கூட்டைப் பாதுகாப்பது என தனக்குத்தானே திடசங்கற்பம் கொண்டான். புழுவாகி கூட்டுக்குள், அணு அணுவாக வேட்டைவாளியாகி கூட்டை பிரித்துக் கொண்டு வெளிவர இருக்கும் தன் குழந்தைக்காக,காலத்தைக் கரைத்துக் காத்து நின்றான்.

(“வேட்டைவாளிசுயமான இனப்பெருக்க ஆற்றல் இல்லாத குழவி வகையைச் சேர்ந்த இது, சு+ழலில் காணப்படும் சிறு புழுக்களைக் கொண்டுவந்து தனது களிமண் கூட்டுக்குள் வைத்து தன் உமிழ் நீரைச் சுரந்து மூடி விடும், பின் அப்புழுக்கள் வேட்டைவாளிக் குழவியாக அச் சுரப்பிக் கூட்டைப் பிரித்துக் கொண்டு வெளிவரும் என்பது ஐதீகக் கதை. இவை தமது உடலில் காவி, நீலம், பச்சை எனும் மூன்று நிறமும் கலந்து காணப்படும்.)
00

Related

சிறுகதைகள் 1040846715277277543

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item