முடிவிலி - தானா விஷ்ணு


 மிகப்பெரும் சாம்ராச்சியத்தை ஆண்ட பராக்கிரமன் இறந்து கிடக்கும் போது மனதுள் வலியும் ஏமாற்றமும் ஏற்படுவதனைத் தவிர;க்க முடிவதில்லை. அவன் மீதான நம்பிக்கை அவனது மரணத்தை ஏற்றுக்கொள்ள அனுமதிப்பதுமில்லை. கற்பிதங்களாலும் கற்பனைகளாலும் அவன் மீதான நம்பிக்கைகள் பிணைக்கப்பட்டுவிடுகின்றன. அந்த நம்பிக்கை புத்தியை இயங்கவிடுவதில்லை. சரியாகப் புத்தியைப் பயன்படுத்தும் ஒருவன் தீரா ஆராச்சியின் பின் உண்மையைக் கண்டடைந்து விடுவான். ஆனால் தீவிரத் தன்முனைப்புடன் இயங்கும் போது எத்தகைய ஆராச்சிக்குரியவனும் மனதுள் கருக்கொண்டிருக்கும் விந்தணுக்களின் மையத்தைப் பற்றியபடி அதனை முன்னிறுத்தியே செயற்பட முனைவான். இங்கு புத்திபின்தள்ளப்பட்டு நம்பிக்கை முன்வெளிக்கருக் கொள்கிறது.

இது இன்றைய நேற்றைய நிலவரமல்ல பு+மியின் போர் முனைப்புக் கொண்ட அசாத்தியமானவர்களின் வாழ்க்கையை மையமிட்டு நோக்கும் போது பல எடுத்துக்காட்டுகளை முன்வைக்க முடியும்.

நான் அறிந்தவரையில் வரலாற்று வாய்க்கால்களிடை எத்தனையோ பராக்கிரமர்கள் தோன்றியிருக்கிறார்கள், சாகசம் செய்திருக்கிறார;கள், பலர் சாம்ராட்சியத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கியிருக்கிறார;கள். சிலர் கண்டபிணமாகியிருக்கிறார்கள் சிலர் காணாப்பிணமாகியிருக்கின்றார்கள். சிலர் என்ன ஆனார;கள் என்று தெரியாமலே போயிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீதான தீராத நம்பிக்கை கொண்டோர் அவர்களை இன்றுவரை உயிர;ப்பிக்க முனைந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்களை சகாசக்காரர்களாகவும் சிரஞ்சீவிகளாகவும் உருவகித்துக் கொள்வதில் பிரியம் நிறைந்தவர;களாக தங்களை காண்பித்துக்கொள்ளவும் முனைகிறார்கள்.

வன்னிச் சாம்ராச்சியத்தின் இறுதி  மன்னனுக்கு முதல்  மன்னன் என்ன ஆனான் என்பதனை இன்றுவரையில் புரிந்து கொள்வதற்கு முடியாமல் இருக்கிறது. வௌ்ளையர்களால் தோற்கடிக்கப்பட்டதற்கான நடுகல் ஒன்று தடயமாகவுள்ளது. பின் என்ன ஆனான் என்பது புதிரானது. அவன் மீண்டும் படை திரட்டி வௌ்ளையர்களை வெற்றி கொள்வதற்காக காட்டுக்குள் புகுந்தான் என்று வாய்மொழி வரலாறு குறிப்பிடுகின்றது. காட்டுக்குள் வாழ்ந்த காலத்தில் கொலரா நோய் பீடித்து இறந்தான் என்று இன்னொரு வாய் மொழி வாசிப்பு உண்டு. அவை ஆதாரபு+ர்வமான தடயங்கள் இல்லை என்றாலும் மன்னனை நம்பிய குடியானவர;கள் மீண்டும் வருவான் என்ற நம்பிக்கையுடன் தமது ஆயுளை முடித்துக் கொண்டார;கள். ஆனால் மன்னன் மீண்டும் வெளிப்பட்டதற்கான சான்று இதுவரை இல்லை.

இங்கு நம்பிக்கை வாழ்வின் எல்லையாகப் போயிருக்கின்றது.  மன்னன் வீரனா? கோழையா? என்பது எவருடைய புத்திக்கும் எட்டியதாகத் தெரியவில்லை, தோற்கடிக்கப்பட்ட கணத்திலேயே உயிர் துறந்தானாகில் வன்னிச் சாம்ராச்சியத்தின் மிகப்பெரிய வீரனாக இப்போதுவரையில் விழா எடுப்பதற்கும் போற்றுவதற்கும் அர்த்தம் உண்டு. ஆனால் தப்பித்தான் என்பது அவனது பராக்கிரமத்தின் மீது சந்தேகத்தினைப் பதித்துச் செல்வது தவிர;க்க முடியாததாகின்றது. தோற்கடிக்கப்பட்ட இடத்தில் அந்தக் கணத்தில் மரணித்தான் என்ற உண்மை யாராலேனும் திட்டமிட்டதற்கமைவாக மறைக்கப்பட்டுள்ளதா? அல்லது வௌ;ளைத்துரைமார்கள் அவனைத் தப்பிக்கவிட்டார;களா? அல்லது குடியானவர;கள் யாரேனும் உயிர்ப்பித்தார்களா? எனும் சந்தேகங்களைப் புத்தி தோற்றுவித்திருந்தால் அதன் ஆழம், அர்த்தப் பொருண்மைகளை கண்டடைவதற்கான ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும்.

அரசன் கடவுள் நிலைக்கு ஒப்பானவன், அவன் தோன்ற வேண்டிய நேரத்தில் தோன்றுவான் என்பது குடியானவர்களின் நம்பிக்கை.

நம்பிக்கை என்பது பலம். இன்னொருவிதத்தில் பலவீனமும்தான். இறைவன் மீதான நம்பிக்கை ஆன்மீக விழுமியத்தின் பலமாகத் தோன்றும், அதே நம்பிக்கை வேற்றுமதத்தின் மீதான வன்முறைகளைக் கட்டமைக்க முனையும் போது பலவீனமாக உருமாறிப் பின்னடைந்து போகிறது. அதி தீவிரமான நம்பிக்கை புத்திமீதான அழுத்தங்களை இயக்குகின்றது. புத்தி இயங்க மறுத்து ஆபத்தின் எல்லைவரை சென்றடைகிறது.

யாரொருவர் எதன் மீதான நம்பிக்கையில் தீவிரம் கண்டடைகிறார;களோ அது தொடர்பான மறுதலிப்பினை ஏற்க மறுக்கிறார். கடவுள் மீது அதி தீவிர நம்பிக்கை முடிச்சை முடிந்து கொண்டிருக்கும் மக்களிடம் அது பொய்யான நம்பிக்கை என்று சொல்லிப்பாருங்கள்,புதிய சிலுவைகள் உங்களுக்காகத் தோன்ற இருக்கின்றன என்பது புரியும்.

எல்லையற்ற வானத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் மாபெரும் சாம்ராச்சியங்களின் பராக்கிரமர;களின் வாழ்வின் முடிவு நம்பிக்கைக்கு மறுகரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போரின் இறுதிக்காலங்களில் விசித்திரமாக அவர்கள் மறைந்துவிடுகின்றார்கள்;, எதிரிகள் தம்மை அணுகிக் கொள்ளமுடியாதவாறு தமக்கான முடிவினை அவர்கள் எடுத்திருப்பார்கள் என்பது நம்பிக்கைவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

தமது வாழ்நாட்களில் நிகழ்த்தக் கூடிய அதிசயங்களையும் வீரதீரச் செயல்களையும் செய்து உலகின் நாயகர்களாக தம்மை விஸ்வரூபப்படுத்தியவர்கள், தமக்கான விசுவாசிகளை ஏராளமாக சம்பாதித்தவர்கள் மரணத்தின் பின்னும் வாழ்வார்கள். இது பொதுப்படையான அறிதலுக்கு உட்பட்டது. என்றாலும் பராக்கிரமர;களின் எதிர்பாராத மரணத்தினை சகித்துக்கொள்ளும் சக்தியும் அவர;களின் விசுவாசிகளிடம்; இருந்ததில்லை. ஆதலால் அந்த மரணத்தினையும் மறுதலிக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையென்பது பராக்கிரமர;கள் சாதாரனமானவர்கள் இல்லை, அவர்களுக்கு அப்படி அல்லது இப்படி நடந்திருக்காது போன்ற நியாயங்களைத் தமக்கு முன்னால் நட்டு வைத்துக் கடவுள் ஸ்தானத்தில் பு+ஜைவழிபாடு செய்கிறார;கள்.

ஒரு சாம்ராச்சியம் சிதைக்கப்படும் போது குடிகள் அபலைகள் ஆகின்றனர். வாழ வழியற்று மாண்டவர்கள் போக எஞ்சிய பாக்கியவான்கள், பாக்கியவதிகள் எதிராளிகளிடம் தஞ்சம் கோhp உள் நுழைகின்றார்கள். சாம்ராச்சியம் மயானமாகிறது. எங்கும் பெருநெருப்பு, கரும்புகை, துர்வாடை, அழுகையொலி, மரணஓலங்களுடன் அது வென்றார் வசமாகிறது. வெல்வது சாதாரணமானதல்ல அசாத்தியமான தீவிரச் செயல்கள் அதற்குத் தேவை கொலை செய்யத் தெரிந்திருத்தல், அபலைப் பெண்களைக் கதறடித்துகற்பழிக்கத் தெரிந்திருத்தல், சந்தேகத்துக்குரியவர்களாயின் கேள்விகளற்றுக் கொல்லத் தெரிந்திருத்தல், இன்னும் மாபெரும் சாம்ராச்சியத்தை மயான பு+மியாக்கத் தெரிந்திருத்தல், போன்றதகுதிகளை தம்மில் தயார;ப்படுத்தி படை நடத்தத் தெரிந்திருத்தல் வேண்டும்.

ஒரு சாம்ராச்சியம் கட்டியுருவாக்கப்படும் போது முன்னொரு சாம்ராச்சியம் உருக்குலைக்கப்படுகின்றது. முன்னைய சாம்ராச்சியம் என்றைக்கும் யாருக்கும் ஞாபகங்களில் நிலைத்துவிடாதிருக்க தமது கிரீடங்களையும் வெற்றிவாள்களையும் சாம்ராச்சிய தேசமெங்கும் எல்லோரும் பார்க்கும் படி வெற்றியாளா;கள் நிலைநிறுத்த முனைகிறார்கள்.

மாபெரும் அரசனின் எழுச்சி மற்றுமொரு அரசனின் வீழ்ச்சியுடன் தொடர்புற்று நிற்பதாக நினைக்க முடிந்தாலும்,வீழ்ச்சி என்பது வெற்றியின் பால் நிகழ்ந்துவிடும் ஒன்றாகக் கருதிவிட முடியாது. சூழ்ச்சி நிறைந்து நிலைத்த பு+மியில் எதுவும் சாத்தியமானதே. ஆனால் எப்படியாயினும், வீழ்ச்சியின் பின்னாலும், வெற்றியின் பின்னாலும் பார்வையை நிலைப்படுத்தினால் குருதியும், சதையும், அவலமும், அலறலும் நிறைந்த மயானதேசம் ஒன்றிலிருந்தே மற்றுமொரு சாம்ராச்சியத்தைக் கட்டி நிறுவுதல் முடியும்.

சிற்சில தோல்விகளுடன் கூடியதான மாபெரும் வெற்றியைக் கண்டடைந்தவனும், மிகப்பெரும் சாம்ராச்சியத்தைத் தனதாக்கியவனும் வீரதீரச் செயல்களுக்கு அதிபதியாக விளங்கியவனுமானமகாபராக்கிரமன் இங்கு தனது இராச்சியத்தை இழக்கிறான், தனது மக்களை இழக்கிறான் எப்படி இழக்கிறான் என்பது பெருங்கதை ஆனால் சுருங்கக் கூறின் இத்தனை காலத்துத் தனது போர் அனுபவங்களையும், இராஜதந்திரங்களையும் மீட்டு பார்க்கத் தவறியதும், தன்னை நம்பியவர்களின் அபிப்பிராயத்தை இழந்ததும் உள்ளும் வெளியும் பல்வேறு சூழ்ச்சிகள் தோன்றியதனை அவதானிக்கத் தவறியதும் புதிய போர் முறைகளை மீட்டுருவாக்கம் செய்யத் தவறியதும், பலரை நம்பியதும், பலரை நம்பாமல்ப் போனதும், தோல்வியின் பிரதான காரணங்களாகக் கொள்ளலாம்.

இவை சகதிவெளியொன்றில் அடையாளம் காணப்பட்ட உடலாக இவன் கண்டெடுக்கப்படுவதற்கு காரணமாகியது. மாபெரும் சாம்ராச்சியத்தையும் அதன் மக்களையும் ஆளுகைக்கு உட்படுத்தியிருந்த வீரதீரப் பராக்கிரமன் இறந்த செய்தி முதலில் எல்லோர் மீதும் அதிர்வினை ஏற்படுத்தியது, பின் நம்பிக்கைக்கும் அறிவுக்குமான போராட்டத்தில் சாம்ராச்சிய வெளிக்கு வெளியே வாழக் கொடுத்து வைத்திருந்த பாக்கியவான்கள், பாக்கியவதிகளின் நம்பிக்கைகள் மாப்பொம்மையாகி எல்லோர் கொளுவிலும் ஏறி உட்கார முண்டியடித்தது.

நம்பிக்கைக்கும் அறிவுக்குமான போராட்டத்தில் அறிவு நம்பிக்கையையும், நம்பிக்கை அறிவையும் தின்று கொண்டிருந்த குழப்பமான சூழ்நிலையில் பராக்கிரமன் சின்னாபின்னமாக சிதைவடையத் தொடங்கினான். அவனது மரணம், அவனது உடல், அவனது தப்பித்தல், அவனது மறைந்து வாழ்தல் புதிய சாம்ராச்சியத்துக்குள்ளும், வெளியிலும், கடல்கடந்தும் வியாபாரப் பண்டமாகியது. விற்பனை சூடு பிடிக்கத் தொடங்க வியாபார முகவர்கள், கடை முதலாளிகள் இலாபங்கள் சூழ மகிழவும் குதூகலிக்கவும் தொடங்கினர். குடிகள் தோல்வியின் அவமானத்தாலும் பராக்கிரமனின் இழப்பினாலும் அழுது விம்மிக் கொண்டலையலானார்கள்.

உலக வரலாற்றில் அதன் வரைபடத்தில் அறிந்தவரையில் மாபெரும் சாம்ராச்சியத்தை ஆண்டவனும் சாம்ராச்சிய மக்களின் நாயகனும் இத்தனை கேவலமாக கூறு போட்டு விற்பனை செய்யப்பட்டது இதுவே முதல் தடவையாக இருக்கும்.

தனது சாம்ராச்சிய வரலாற்றில் வெற்றிமேல் வெற்றியையும், வீரதீரங்களையும் செயல் நுணுக்கங்களையும் தனக்கெனச் சொந்தமாக்கிக் கொண்ட பராக்கிரமன் தன் வெற்றிக்கும் தன் சாம்ராச்சிய உருவாக்கத்திற்கும் தன் வாழ்தலுக்கும் எப்போதுமே ஆதாரமாகவிருந்த தளபதிகளும் படைகளும் கண்ணுக்கு முன்னால் சிதைந்து உருகுலைந்து ஆகி விட்டகன்று போகவும், தான் மட்டும் தப்பித்தான் என்று யாரேனும் நம்பிக் கொள்வது தவறில்லை என்றாலும் அவனது வீரத்தையும் தியாகத்தையும் நுன் அனுபங்களையும் மலம் நிறைந்த குழிக்குள் இட்டு தீ வைத்துக் கொளுத்தும் போது எல்லோர் நம்பிக்கையும் மலக் குழிக்கு வெளியிலிருந்து கண்களைக்கட்டி “ எவடம் எவடம் புளியடி புளியடி, எவடம் எவடம் புளியடி புளியடி. என்ற விளையாட்டை விளையாடுவதனை பாh;க்கும் போது அல்லது கேள்வியுறும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?

எனக்கு அந்தப் பராக்கிரமனின் ஆவி அந்த மலக்குழிக்கு மிக அருகே நின்று தேம்பித் தேம்பி அழுவதாகத் தோன்றுகிறது.

00

Related

சிறுகதைகள் 1450446737019823442

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item