கவந்தம் - இ.சு முரளிதரன்


காலம் 1

ஆறு பெருகுகிறது! ஆறு பெருகுகிறது!! அணைகட்ட எல்லோரும் வாருங்கள்

      அரிமர்த்தனபாண்டியனின் சேவகர்கள் ஊர் ஊராகச் சென்றுஅறிவித்தனர். ஆற்றின் பேரலைகள் பாண்டியதேசத்தைகொடூரவேகத்தோடுநிர்மூலமாக்கிவரும் தகவலைவள்ளுவன் முரசறைந்துபகிரங்கப்படுத்தினான். எண்பேராயமும் ஐம்பெருங் குழுவும் நகரெங்கும் குடிகளை ஒருங்குகுவித்து அணைகோலிகளைஉடனடியாக அனுப்பிவைக்குமாறு நிர்ப்பந்தித்தனர். வல்லமையின் நீட்சியாக ஆறு அகலித்திருந்தது. பெருநிலங் களைச் சங்காரஞ் செய்தகர்வத்தோடுகரைமீறத் துடித்தது. ஆற்றங்கரையே நாகரிகத்தின் தொட்டில். சலசலப்பிற்குகிறங்கிப் போதல் மனிதகுலத்தின் குருதிக்கலங்களில் உறைந்துகிடக்கிறது. நுரைகழல் புனைந்தவைகை ஊழிக்கூத்தின் ஒத்திகையாய் ஆர்ப்பரித்தது. எல்லைதாண்டிமண்ணைவிழுங்கி செரிக்கும் சீற்றத்தோடுகொக்காpத்தது. வைகையின் பிறப்புநீலம் விரவியநெடுமாலின் தடக்கை ஸ்பாpத்ததால் நிகழ்ந்ததாகும். நெடுமால் நீரோடானவாழ்வுடன் அத்வைதமானாh;. அரிமர்த்தனபாண்டியனும் நீர்மைபடர்ந்தநெய்தலின் கரையில் பிறந்துகொடுந்திரைகளைஎதிர்க்கும் குணாம்சத்தால் கொற்றவனானவன் தான். மூர்க்கமாகக் கரைதொட்டகிளையாறுகளைஅணையிட்டுத் தடுத்தஅசகாயசூரன்! எனினும் திருவாதவு+ரன் பக்திநெறியுள் பதுங்கிய தருணத்திலிருந்து அரிமர்த்தனபாண்டியன் அபத்தச் சுழியில் சிக்கிக் கொண்டான். புரவிக் கொள்வனவு நிமித்தம் அயல்நாடுபயணித்ததிருவாதவு+ரன் ஊழல் புhpந்ததாக ராஜதுரோகக் குற்றம் சுமத்தப்பட்டான். அதிகாரத்தின் கபாலம் அதிர்வுக்குள்ளாக்கியது. மீன்கொடியில் கருவாட்டின் வெடில் வீசியது. விஷமப் புன்னகை சூடியபரிமேலழகர் திருவாதவு+ரனுக்கு சரணாகதி வழங்கினார்.

      “உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்
            றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
      எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப் போம்கேள்
            எங்கொங்கைநின்னன்பரல்லார் தோள் சேரற்க
      எங்கைஉனக்கல்லாதெப்பணியும் செய்யற்க
            கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க
      இங்கிப் பரிசேஎமக்கெங்கோன் நல்குதியேல்
            எங்கெழிலென் ஞாயிறுஎமக்கேலோரெம்பாவாய்

என்று மறுபாலாருக்கும் சேர்த்தே திருவாசகத்தை திருவாதவு+ரன் ஓதத் தொடங்கினான். பக்தி அபசுரமாகிப் பிசிறடித்தபோதும் வைராக்கியத்தோடுஞானத்தேடலில் இறங்கினான். வெப்பத்தின் வாத்சல்யத்தை மூர்க்கமாகஎதிர்த்து ஆற்றுப் பெருக்கினைஅவாவினான்.

பரமன் செம்மனச்செல்வியின் குடிலின் முன்னேநின்றான். செம்மனச் செல்விதுணையிலி. அரசபணியாற்றஅங்கத்தவரற்றோh; கூலிகொடுத்தேனும் கொற்றாள் ஒருவனைஅனுப்பிவைத்தாகவேண்டும். பாண்டியனுக்கேதரியாமல் சேவகர்கள் செயற் படுத்தும் ஆணையென மதுரைவாசிகளில் சிலர் பேசிக் கொண்டனர். எனினும் மக்களுக்கு இக்கருதுகோளைவாய்ப்புப் பார்க்கும் தருணம் வந்தமையவே இல்லை. பிறைசூடியபெருமானிடம் நிகழ்த்திய பிரார்த்தனையின் பலனாகவேபரமன் கூலியாளாக வந்ததாக செம்மனச் செல்வி நம்பினாள். மதுரைக் குடிகள் மீட்பரான அரிமர்த்தனபாண்டியனை சாத்தானாகவும் கருதிக் கலங்கி மனமுடக்கத்திற்கு உள்ளாகினர். அணைகோலிகளாகப் பிள்ளைகளைஅனுப்பமறுத்து இல்லங்களில் வினோதவியு+கங்களில் கரந்துவைத்தனர். எனினும் மதுரைமாநகர்ச் சேவகர்களின் பட்டறிவுநுட்பத்தால் பதுங்கியிருந்தோர் இணங்காணப்பட்டு மண்சுமக்க அனுப்பப்பட்டனர். பரமன் முழு ஈடுபாடின்றிஊழியம் நிகழ்த்தியதால் முதுகில் வடுவேற்றான்.

      கங்குல் கவசமணிந்துதிரண்டது. ஒளியை இறுக்கிக் கட்டிப் போடக் காலம் எத்தனித்தது. மண் சுமந்தபரிகள் மிரண்டுநிற்க பாகர்கள் வெகுளஏதேதோநிகழ்வுகள் அரங்கேறின. புரவிகள் ஊளையிடத் தொடங்கின. பரிகளைக் கடித்துக் குதறியதோடு,எஞ்சியவற்றுக்கு ஊளையோசைகற்றுக்கொடுத்தன.

கிளைபிhpந்தவைகையாறுஅனைத்துமருங்கிலும் ஆவேசமாகத் தாக்கியது. அணைகளில் விரிசல் விழுந்தது. நீரின் பிரவாகம் மூர்க்கமடைந்தது. காட்டாறுபாய்ந்தது. நீரின் நாக்குகள் உயிர்களைத் தின்றுதீர்த்தன. நுரைகள் உடைமைகளைஅள்ளிச் சென்றன. சலசலத்த சலங்கை நர்த்தனங்களுக்கு மரணக் கரகோஷங்களே வேட்கையாய் இருந்தன. மதுரைவாசிகள் தலைதெறிக்கஓடினர். தண்மைவியு+கம் அமைத்துவியாபித்தது. சதை,எலும்பு,குருதிஎன்பனபிசைந்துகுயவன் செய்தபாத்திரங்கள் தற்காப்புநாடித் தவித்தன. மந்திரஉச்சாடனங்கள் பலனளிக்கவில்லை. அற்புதங்கள் காலாவதியாகியதால் கடவுளரும் மௌனித்தனர். எண்ணற்றபிரதேசங்கள் நீரில் மூழ்கின. கழுத்து நஞ்சு மறைத்து,வரியாடை நீக்கியபரமன் குறிக்கோளற்று வேகமாக நடக்கத் தொடங்கினான்.

காலம்  11

இரும்புப் பு+ண் புனைந்த தந்தங்களுடைய களிறுகள் ஆற்றங்கரையில் மெதுவாகநடந்து சென்றன. வைகைக் கரையில் கம்பீரமாகக் காட்சிகொடுத்த சிலை கவந்தமாக நின்றது. தலைபோன இடம் புரிதலுள் அடங்கவில்லை. தலை பற்றிய புனைவுகள் புற்றீசலாக வெளிக்கிளம்பின. கவந்தத்தோடு எக்காலத்திலும் எந்தத் துண்டமும் பொருந்தப் போவதில்லை என்பது மட்டும் புரிந்தது. கவந்தத்தை நோக்கிச் சிலர் உருண்டையான பாறாங்கற் களைநகர்த்த எத்தனித்தனர். அவர்களுள் பரமனும் ஒருவன். கழுத்தில் நஞ்சோ,கையில் சூலமோ,ஆடையில் வரிகளோ அவனிடமில்லை. புதிய வருவாய்களால் மேனியெங்கும் ஆபரணங்கள் ஆக்கிரமித்திருந்தன.

ஆழ்கடல் இருண்மையுள் ஏராளமான எலும்புக்கூடுகள் புதைந்துள்ளதான ஆமைகளின் குற்றச்சாட்டுகள் அர்த்தமிழந்தன. புணரியின் ஆழ்புலத்தில் பொதிந்திருக்கும் எலும்புகளின் எச்சம் குறித்த பிரக்ஞையின்றி திருவாதவு+ரன் திருப்பதிகங்களைப் பாடிக் கொண்டிருக்கிறான். ஈரூடகவாழிகளின் அறிக்கையினை நீர்வாழ் உயிரிகள் நிராகரித்தன. குறிசொல்லிகள் சுழியோடியின் வருகைபற்றியஆருடத்தைமீட்டெடுப்புச் செய்தன. அர்த்தமிழந்த கவிதைஏடொன்று கவனிப்பாரற்றுதெருவிலேகுப்புறக்கிடக்கிறது. இலக்கணத் திருத்தம் கவிதை ஏட்டின் மீது கவனக் குவிப்பினை ஏற்படுத்துமென்று மதில்மேற்பு+னைகள் முணுமுணுக்கின்றன. தயங்கித் தயங்கி கிளையொன்றைவளைத்த பு+சாரி மொட்டின் நறுமணம் நுகர்ந்தபின் தலைமறைவானான். ஈச்சம் புதாpல் பதுங்கிய சாரையொன்று தவளையின் நடமாட்டத்தை இனங்கண்டுசோம்பல் முறித்தது.

காலம் 111

பிச்சாடனன் ஒருவன் திருவோடுஏந்தியவாறுபேருந்தில் பயணிக்கபிட்டுக்குமண் சுமந்தபெருமானார்என்றபாடல் ஒலிக்கிறது. “இப்போதும் எமக்காகஎழுவாயய்யாஎன்றஆன்மீகம் கடந்தஅழைப்புகாற்றிலேகலந்துகரைந்தது. “தாய் அமர்ந்து இருக்கின்றாள் அருகினிலேஏன் சாவருகின்றதையாதெருவினிலேஎன்றகடவுள் மறுப்புவரிபிச்சாடனனைதிடுக்கிட வைத்தது திடீரென்றுபேரூந்துநிறுத்தப்பட்டது. பெளர்ணமி நாளில் தினுசுதினுசாக அழகிய வெண்கூடுகள் மின்குமிழ்களால் அலங்கரிக் கப்பட்டிருக்க.,பிச்சாடனன் யாசிக்காமலேயே 'கிரிபத்தும் 'மஸ்கற்றும் திருவோட்டினை நிரப்பின. அந்தத் திருவோட்டின் விளிம்பில்   என்றோவிழுந்தபிட்டின் துகளொன்று ஒட்டியிருப்பது போன்ற பிரமை தோன்றியது.

00

Related

சிறுகதைகள் 2835613421050121689

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item