அவிழ்ந்தொழுகும் மழைத்திவலை...-வி.யோகேஷ்


மதர்த்து நிமிர்ந்த
மலை போன்றது என் மௌனம்
மலை மேல் செழித்த செடி
என் வார்த்தை...

என் வார்த்தை
நிசப்த குளத்தில் விழுந்த
கல்லொன்றின் ஒலியன்று
அக்கணத்தில் ஒளிர்ந்து உடையும்
நீர்க்குமிழ்...

இலை நுனியில் அவிழ்ந்தொழுகும்
மழைத்திவலை போல்
அநாயசமானதும்
ஆர்ப்பாட்டமில்லாததும்...

கவிதையொன்றைக் கட்டமைக்கும்
வார்த்தைக் கலவை போல்
பார்க்க இலேசானதும்
உணரப்பாரமானதும்...

சிலசமயம்
மழலை நெய்யும் மொழி போல்
புரியப்படாததும்
தவிர்க்கவியலாததும்...

என் வார்த்தை
கோயிற் திருவிழாவின்அரோகரா
ஆர்ப்பரிப்பில்  அமிழும்
பிச்சைக்காரனின் யாசிப்பைப்போல்
அலங்காரமற்றதும்
ஆத்மார்த்தமானதும்...!


Related

கவிதைகள் 9204978617253893832

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item