நமக்கிடையில் தகிக்கும் காதல்- தானா விஷ்ணுயாரோஎதிர்க்கவும்
யாரோபேசவும்
யாரோவெறுக்கவும்
யாரோ தூக்கிவீசவும்
கூடுமாக இருக்கலாம் நம் காதல்.

அளவுக்கதிகம் ஆர்ப்பரிக்கும் கடலில்
முட்டிமோதித் திரும்பும்
நீர்க்காகம் ஒன்றை
அந்தயாரோஅறிவதுசாத்தியமில்லை.

நீ இருக்கும் போதுஆர்ப்பரிக்கும் கடலை,
நீ இல்லாதபோதுதகிக்கும் அலையை
அந்தயாரோஅறிந்திருக்கப் போவதில்லை.

அர்த்தங்களின் வழி
புணரும் விதிகளைஎண்ணியபடி
நெடுஞ்சாலையைக் கடக்கும்
கனவுகளை ஓட்டிச் செல்பவர்கள் அவர்கள்.

நான்குசுவர்களுக்குள்
கேவிக்கொண்டழும்
விலக்கமுடியாக் காதலின் ஊற்று
யாருக்கும் உரியதல்ல
உனக்கும் எனக்குமானதுமட்டுமே.

குட்டிஅம்மு!
நீஅறிவாயா?
நீவிட்டுச் செல்லும் வார்த்தைகள்,
தந்துபோகும் முத்தங்கள்
மீண்டும் உன் வரவுக்காய் மன்றாடுவதை

அம்மு!
கடக்கமுடியாக்காலங்களை,
கரையடையமுடியாக் கடலை,
தொட்டுவிடமுடியாவானத்தை
உன்னோடுசேர்ந்து
கடக்கவும்கரையடையவும் தொட்டுவிடவும்
முன்னேகிக் குதிக்கிறதுமனசு.

யாரறிவார் நம் காதலை?
அடைக்கப்பட்டஅறைக்குள்
துள்ளித்திரியும் பு+னைக்குட்டிநம்காதல்

துள்ளவும் குதிக்கவும் முடியுமாயினும்
தாண்டமுடியாதுதவிக்கிறதுஅது.

தானாவிஷ்ணு

05.08.2014

Related

கவிதைகள் 3772675467212162752

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item