செந்நதிக்கரை குழந்தைகள்- கோ.நாதன்


கிளிநொச்சி மண்ணில் உதித்த
ஒன்றுமறிய குழந்தை நான்
எவவோவனோ தயாரிக்கும் குண்டுகளை
எனது தலைக்காக விமானம் ஊடாக நிர்ணயிக்கின்றாயே.?

துரோகத்தினால் பிணமாக்கப்பட்ட குழந்தை
முகத்தில் கடைசியாய் இறக்கும் முத்தத்தின் ஈரம்
காயப்பட முன்னர் ஏக்கத்தோடு தந்தையின்
கண்ணீர்த் துளிகள் விழும் தருணத்தில்
நிலத்தை ஆக்கிரமித்தவனின் கனகர வாகனங்கள்
மிதிக்கும் தடயங்களினுடு இன்னுமொரு
சகோதரனின் கொலையுண்ட இரத்தம் கழுவி செல்கின்றன.

தகர்த்தேறியப்பட்டியிருக்கும் கட்டிடங்களினது
சுவரெல்லாம் தங்கை  வரைந்து அழகு பார்த்த
சின்னச் சின்ன சித்திரங்கள் யாவும் இரத்தம்
தெறித்து சிதைத்திருக்கும் சதைத் துண்டுகள் அப்பியது.

மாம்பழங்களையும்,கொய்யாப்பழங்களையும்  விரித்திருந்த
நகர் அழிவுற்று கற்களை குவித்திருக்கும் போது
வன்னிக் காடு  முழுவதும் அழுகையின் ஓசைக் கோடு
சினைப்பர் சுடுகுழல்கள் தோல்வியுற்ற
கண்களின் குறிகளால் மரணங்களைத் தருவிக்கிறது  .

வெறுப்புக்கும்,அதிகாரத்துக்குமிடையில்
நிலம் சுரண்டலுக்கு நிர்பந்திக்கப்படுகிறது.
குழந்தைகளின்  புத்தகங்களை மறக்கடிக்கப்படவே
வவுனியா தடை முகாம்களில்
அகதி அட்டை இலக்கம் வலுக் கட்டாயமாக
சட்டைப் பைகளில் திணித்து அடைத்து  வைத்தனர்.

யாரும் உயிரை கொல்லலாம்,?
இரத்தத்தை உறிஞ்சலாம்,?
நிலத்தை அத்துமீறி கைப்பற்றி விடலாம்,?
அரண் இடுக்குக்குள் சின்னக் குறிகளில் 
காணாமல் போகவும் செய்யலாம்,? 
கடவுளின் ஆலயம்
வீட்டுக்குள்ளும் எழுப்ப முடியும் ?20140801

Related

கவிதைகள் 5479346627864702031

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item