கவிதையெனும் நிழற்குடை- ந.சத்தியபாலன்


நுண்கலைகள் மனிதனின் சிந்தனைகள்,ரசனைக்கோணம், பரந்ததும் நுண்ணியதுமான உணர்வுத்தளம் இவற்றுடன் தொடர்புடையவை. மனிதனின் அனுவப வெளிக்கு உரித்தானவை.
இசை, ஓவியம், நடனம் ,சிற்பம் என் வகைபிரிகின்றன. அவற்றின் விரிரையில் மொழி என்னும் தளத்தில் வடிவம் புணுவதும் நுண் உணர்வு வெளிக்கு உரித்தானதுமான கவிதை, மனிதனுடைய வாழ்வுடனும் அதிகதிகமாய் உரிமை புண்டதும் புதிய புதிய தரிசனங்களுக்கு உரியதுமாக வளர்ந்து வரும் கலையாகும்.
அடிப்படையில் கலைகள் உணர்வின் மொழிதல்களேதான் எனினும் கவிதையென்னும் நுண்கலை தன்பாலுள்ள தனித்துவங்களால் மிதவாழ்வுடன் தொடர்ந்தும் வருவதும் இடையறா இயங்குநிலை கொண்டதுமாக விளங்குகின்றது.
சாதாரணமான கருத்துப் பரிமாற்ற ஊடகமாக விளங்கும் நிலையினைத் தாண்டி உணர்வுவினைக் காவிவரும் கருவியாகத் தரமுயரும் போது “மொழி்” கலையாகிறது.
சாதாரண மொழி, கவிதை மொழியாக உருமாறும் நிலையில் அதன் அர்த்தளம் விரிவும் ஆழமும் பெறுகிறது. சாதாரணமான சொல் ஒரு கவிதைக்கான ஒழுங்குக்குள் கொண்டுவரப்படுகையில் புதிய அர்த்தம் விரிகிறது.
காலகாலமாகக்  கவிதை பற்றிய பல்வகையான வியாக்கியானங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றினூடாகவும் அவற்றுக்கப்பாலுமாகக் கவிதை தனது வியத்தகு தனித்துவத்தைத் தாங்கி மிளிர்கின்றது.
மனிதனைப் போல- மனித வாழ்வைப் போல கவிதையும் காலத்தின் படிவுகளைத் தாங்கி வாழ்ந்துவருகின்றது.
வாழ்வின் வியப்புக்கள் போல மனிதன் பற்றிய வியப்புக்கள் போல கவிதையின் வியப்புக்களும் முடிவற்றவை. அல்லது திகழ்வதே கவிதையின் தனித்துவம்.
எல்லாவற்றுக்கும் அப்பாலாகத் “தான்” எனத் தனித்து நிமிர்ந்தெழும் மனித வாழ்வு போலவே கவிதையும் தன் தனித்துவத்தோடு என்றைக்குமாய் நிற்கவல்லது. மனிதன் இருக்கிறவரை மனித வாழ்வு இயங்குவது வரை கவிதையெனும் உணர்வின் மொழி நின்று நிமிர்ந்து மிளிரவல்லது.
உணர்வு என்பது அடியாழ உள்ளத்தின் அசரீரி. அது வெளிப்படுகையில் அதன் அடர்த்தியை, ஆழத்தை அதன் சரியான அளவில் பதிவு செய்ய உதவும் கருவியாகிறது மொழி. இந்தக் கிரியை முழுமையான வெற்றியைப் பெறும் போது கவிதை சிறந்த கவிதையாக உருப்பெறுகிறது.
”எனக்கு
யாருமில்லை
நான் கூட”
என்னும் நகுலனின் வரி சொற்களின் அடுகொழுங்கினூடாக கவிதையைக் கொண்டுவருவதைப் பார்க்கலாம்.
இந்த வாழ்க்கையை அதில் சாரமாய்த் தொனிக்கும் தனிமையை மேற்புச்சாய் மகிழ்ச்சி காட்டி வாழ்ந்திருக்கும் மனிதக் கூட்டத்தின் ”தான்” எனத் தனித்துக் கிடக்கும் ஒட்டாத்தன்மையை எடுத்துரைத்து நிற்கிறதல்லவா?

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சொற்களின் துணையோடு வியப்புக்குரிய செல் தொலைவில் ஒளிருகின்ற பேருண்மைகளின் தரிசனத்தை எப்போதைக்குமாய்த் தந்துகொண்டிருப்பது கவிதையென்னும் அரிய நுண்கலை என்னும் உண்மை சாசுவதமானது.

Related

கட்டுரைகள் 9216471230882222247

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item