குடியேறி வாசி-கோ.நாதன்.


பெரும் நாட்டின் குப்பைகளிடையே 
வேரோடிக் கொண்டியிருக்கிறது  
நாடற்றவனின்  துயர் வாழ்வு 
சொந்த தேசத்து அடையாள அட்டை அழிய முன் 
அகதி அட்டை இன்னொரு அவமானத்தை 
உடலில் ஒட்டி உயிரை மேய்ந்து திரிகிறது. 

ஆழ் கடலில் மூழ்கிப் போன அகதிப்படகில் 
காணாமல் போனவனின் மோதிரம் 
கறிக்கு வாங்கப்பட்ட மீனில் கண்டெடுக்கப்பட்டது. 
தப்பித்து கொண்டவன் விலையுயர்ந்த சாராயத்தை 
அதிகமாய் விழுங்கி வாந்தியெடுத்து உளறுகிறான்.

பனி போர்த்திய மூங்கில் காடுகளினூடே    
புகலிடப் பயணங்களை தொலைத்திருக்கும்  இருப்பு 
நிலத்தின் நினைவுகளை மீள்படுத்த முடியாமல் 
இயலாத மொழி ஒன்றினை அச்சத்தில் மனனிக்கிறது.

குளிரில் உறைந்த இறைச்சிக் கோழி  உடம்பு 
இரவிலும்,பகலிலும் ஒளியில் தின்று கக்கிய 
கண்களை விற்று மெழுகாய் உறுகுகின்றனர். 
தனது மண் இறந்திருக்கின்றது ஏற்க மறுத்து 
அந்நிய   நாட்டின் குடியுரிமைக்காகவும், 
போர்க் குற்றவாளி விசாரணைகாகவும்  
நீதிமன்றம்  ஏறி ஏறி ஆயுள் இழந்து விட்டனர்.

கருப்பு நாய் எனவும் அழைக்கின்றார்,
கருப்பு குரங்கு எனவும் அழைக்கின்றார், 
கருப்பு பூனை  எனவும் அழைக்கின்றார்,
கருப்பு பன்றி  எனவும் அழைக்கின்றார்
கருப்பு  புன்னகையை வழிய விட்டு.....
வழிப்போக்கு பிச்சைக்காரனை தோற்கடித்த
நரக வாழ்வினை முகர்ந்தே நகரும் காலம். 

20140601

Related

கவிதைகள் 4116760269610342590

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item