மயானகாண்டம்-பிந்திய பதிப்பு வெளியீட்டு விழா


ஆகாயம் பதிப்பகத்தின் “மயானகாண்டம்- பிந்திய பதிப்பு” (கிரிஷாந், பிரியாந்தி, கிருபா, லிங்கேஸ்- நான்கு கவிஞர்களின் கவிதைகள்) கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா இன்று பி.ப 3.00 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லுாரியின்  “றொமெய்ன்” மண்டபத்தில் நடை பெற்றது.

தலைமையுரையை கவிஞர் கருணாகரனும் வரவேற்புரையை கவிஞர் யாத்ரிகனும் நிகழ்த்தினர். எழுத்தாளர் சத்தியபாலன் வெளியீட்டு உரையை நிகழ்த்தினார்.

தொடர்ந்து நுால் வெளியீடு இடம் பெற்றது. நுாலினை எழுத்தாளர் சத்தியபாலன் வெளியிட புத்தகக் கூடத்தின் உரிமையாளர்
தெ. ரவீந்திரன் பெற்றுக்கொண்டார். கவிஞர்களுக்கான கௌரவப் பிரதிகளையும் அவர் வழங்கிவைத்தார்.

நுால் பற்றிய ஆய்வினை யாழ் பல்கலைக் கழகத்தின் வருகைதரு விரிவுரையாளர் தி. செல்வமனோகரன் நிகழ்த்தினார். ஏற்புரையினை தொகுப்பாளர்களுள் ஒருவரான சித்தாந்தன் நிகழ்த்தினார்.

விழா சிறப்பாக நடந்து முடிந்தது.
Related

பதிவுகள் 4185422494535015490

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item