வருதல் - -சிந்தூரி


காலவட்டம் போல நிகழ்ந்துவிடுவது 
உன் வருதல்.
ஒரு குழந்தை 
புன்னகைப்பதும் சினுங்குவதும் போல 
காற்று சாளரம் வழித்திரும்புதலும் 
சுவரில்பட்டு முறிதலும் போல 
கோடைகால மழையைப் போல 
நிகழவிருக்கும் உனது வருதல் 
பயிர்களின் உயிர்வாசத்தை உணர்வதில்லை.
அது வெள்ளமாய் 
என்னை மூழ்கடிக்க நினைக்கும் நாளொன்றில் 
நான் பாறையாய் உறைந்திருப்பேன்-
சிலபொழுது சிறகுகள் கிடைத்தால் 
பறந்து கொண்டிருப்பேன் 
வற்றிய இடங்களை நிரப்பும் வெள்ளமாய் 
நீ வரப்போவதில்லை 
நான் படகாய் மாறியிருத்தலில் 
உன் வருதல் துமித்துக்கொண்டிருக்கும் 
இப்போதென்னை நதியாய் மாறச்சொல்கிறாய் 
உனது வருதலோ 
தரையை நோக்கியதாய் இருக்கிறது.

Related

கவிதைகள் 2992424177195584688

Post a Comment

  1. சிந்தூரியின் கவிதைகளை வாசிக்கத் தேடும்போது தற்செயலாக ஆகாசம் வந்துசேர்ந்தேன். இதுபோலத்தான் 2000 ஆரம்பத்தில் தற்செயலாக வவுனியா பஸ்நிலையத்தில் ஆகாசம் ஆசிரியர் சித்தாந்தனைச் சந்தித்தேன்.வவினியாவில் உனக்கு பிரச்சினை இருக்கு கவனம் என்று எச்சரிக்கப் பட்டிருந்த நிலையில் பஸ் நிலையத்தில் ஒருவர் என் முதுகில் தட்டினார். திரும்பியபோது அவர் ஆயுதம் எடுப்பவர்போல தனது தோழ்ப் பையை திறந்துகொண்டிருந்தார். ஆனால் அவர் எடுத்தது அறிவு ஆயுதமான ஒரு புத்தகம். ஆகாசத்தை இனி அட்க்கடி வாசிப்பேன்.
    சிந்தூரி போன்று இளையவர்கள் ஒரு சிலர் நம்பமுடியாத அளவுக்கு நமது புதிய கலை இலக்கிய பரிமாணமாகச் செளிக்கிறார்கள். அவர்கள் எழுத்தில் இளைய உலகத்தை தரிசிக்கவும் இளமையை மீட்டு வாழவும் இளையவர்களது எழுத்துக்களை தேடி வாசிப்பதுண்டு. சிந்தூரி போன்ற வர்கலது எழுத்துகள் பென்கலின் பாதி உலகை எம்போன்ற ஆண்குருடுகள் தரிசிக்க உதவுகிற மேலதிக பரிமாணத்தையும் கொண்டிருப்பது சிறப்பு. கலை ஆயுதபாணியான சித்தாந்தனுக்கும் ஆகாசத்துக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item