தீராப் பெருங்கடல்- சித்தாந்தன்


யௌவன விருட்சம்
இலைகளை உதிர்க்கும் காலத்தில்
கடலை அழைத்துக் கொண்டு நீ வருகிறாய்.
யுத்த சந்நதம் படரும் விழிகளில்
தாண்டவமாடுகிறது
இழை பிரியும் மின்னலின் ரேகைகள்.
துளியும் அமிர்தமற்ற ஒரு கிண்ணத்தை
வெறுமையால் நிறைக்கிறேன்.
வானம்
ஒரு நுாலிழையில் தொங்குகின்றது.
காடுகள்
காற்றில் அலைகின்றன.
நீ யௌவன விருட்சத்தின் இலைகளைச் சுருட்டி
குழலுாதுகிறாய்.
கசியும் இசையில் ததும்பும்
போதையின்  நெடியில் உலர்கின்றன
ஈரித்த இரவுகள்.
இன்னும்
எதன் மீது
தாகம் சுனையைத் திறக்கிறது.
மஞ்சள் வெய்யிலில்
பூத்தபடியிருக்கும் பகலின் பிரகாசம்
ஏன் சுடர் சுருங்கி அந்திமமாய் அவிகிறது?
தினவடங்கிய முதுமையில் மலர்வது
காமத்தின் முட்களோ
காதலின் மலர்களோ இல்லை.
இரண்டுக்ககுமிடையில்
தேகத்தை கடந்து செல்லும் ஏதோவொன்று
அது
முத்தங்களாலோ
புணர்ச்சியினாலோ தீர்வதில்லை.

தீராப் பெருங்கடல்.

Related

கவிதைகள் 4388705469241452011

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item