கந்தமுருகஞானியின் “பழைய வேதக்கோயில்” - நூல் வெளியீடு-குணேஸ்வரன்

இலங்கை மரபுரிமை தொல்பொருள் சின்னமாக இன்று அல்வாய் வடக்கில் எச்சமாகத் திகழும் பழையவேதக்கோயிலை மையமாக வைத்து எழுதப்பட்ட வரலாற்று நாவலான “பழைய வேதக்கோயில்” நாவலின் வெளியீட்டு நிகழ்வு 12.04.2014 சனிக்கிழமை மு.ப 9.30 மணிக்கு அல்வாய் சிறீலங்கா வித்தியாலய மண்டபத்தில் மூத்த எழுத்தாளர் தெணியான் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் மங்களவிளக்கேற்றலைத் தொடர்ந்து, வரவேற்புரையை க. சின்னராஜனும்; வாழ்த்துரைகளை புத்தூர் வே. இளையகுட்டி, பிரதேச செயலர் த. ஜெயசீலன், தென்மராட்சி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் வே. பாலசுப்பிரமணிம் ஆகியோர் நிகழ்த்தினர்.
நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற அதிபர் திரு கி. கணேசன் பெற்றுக்கொண்டார். சிறப்புப்பிரதியை சங்கீதபூஷணம் சி. பத்மலிங்கம் பெற்றுச் சிறப்பித்தார்.
நூல் வெளியீட்டுரையை எழுத்தாளர் அநாதரட்சகனும், சிறப்புரையை பண்டிதர் கலாநிதி திருநாவுக்கரசு நிகழ்த்தினார். நூல் பற்றிய மதிப்பீட்டுரையை சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார். நன்றியுரையை ந. நிர்மலனும் ஏற்புரையை நூலாசிரியர் கந்தமுருகஞானியும் (மு. ராஜவரோதயம்) நிகழ்த்தினர்.

படங்கள் : யாத்திரிகன்

Related

பதிவுகள் 5931470095234687449

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item