துளிகளால் அழிதல்-நெற்கொழு தாசன்வேர்முடிச்சுக்களில் ஒளிந்துகொண்டவனை
தின்றுவிட தயாராகிறது
பெரும் பூதமொன்று..

முதலில்
ஒற்றைத்துளியாகத்தான் விழுந்தது.

வெப்பத்தாலோ
காற்றாலோ ஆவியாகிவிடாமல்
அடையாளமாகிப் பூத்துக் கிடந்த
அந்த முதல் துளி
வெறுமையை உடைத்து
அலங்கரித்துக்கொண்டது தன்னை..

பின்னொரு பொழுதில்
நீண்ட பாலைநிலங்கடந்த வெப்பத்தோடு
இறங்கத்தொடங்கியது நிலைகொள்ளாமல்

இறகுகளை களைந்துவிட்டு
அடைக்கலமாக  அடம்பிடிக்க ஆரம்பித்து
சிதைவுகளால் ஊடுருவி
வேர்களால் பினைக்கத்தொடங்கியது.

மேகத்திலிருந்து 
இறந்துபோன நட்சத்திரங்களின் ஆசைகளுடன்
பூதங்கள் இறங்கத்தொடங்கின..

நான் ஒளிந்து கொண்டேன்

வேர் முடிச்சுக்களில்...

Related

கவிதைகள் 5206752929195257645

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item