பூனைப் பதிகம்-1-சித்தாந்தன்


ஆழ இறங்கிச் செல்கின்றேன்
காலங்கடந்து வந்து சேர்ந்த புத்தகங்களுக்குள்.
மொழியே ஒரு சிலந்தியாகி
மூளையில் வலை பின்னுகிறது.
எழுத்தும் சொல்லும் பொருளுமென
விரியும் அதிகாரங்களில்
மனனம் செய்யவியலா வார்த்தைகள் தொங்குகின்றன.
ஆதி புனைவுகளின் கதைகளில்
பெரும் படைசூழ உலாப் போகும்
அரசர்களின் பின்னே என்னால் தொடரமுடியவில்லை.
காதலும் காமமும் நிரம்பிய
கவிதைகள் யாவிலும் அருவமாய் ஊர்கின்றன
ஆயிரமாயிரம் பொய்த்தேள்கள்.
விடுபடலாம்
ஒரு வார்த்தையை விடவும் சிறியது
பெருங்கடல்.
பெருங்கடலை விடவும் சிறியது
பெருவெளி.
இதற்கு மேல் எதுவுமில்லை.
ஊர்கின்றேன்
ஊர்ந்து ஊர்ந்து
ஊள்ளொளி பெருக்குகின்றேன்.
உள்ளொளி பெருக்கி
யாவுமற்று வீழ்கின்றேன் பாற்கடலில்
ஒரு  பூனையாய்.

02.03.2014

Related

கவிதைகள் 5286527788921377355

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item