தனிமையின் ஆரம்பம்- மு.கோபி சரபோஜி
நடைமுடிந்து திரும்பிவந்த கணம்

எனக்காகவே காத்திருந்தவனாய்
மடிமுழுக்க அட்டைகளும்
வண்ணக்குச்சிகளும்
உருளையிலிட்ட ஒட்டுப்பசையுமாய்
என்னருகில் வந்தமர்ந்தான் அபி.

சில அறைகளுடன் கூடிய வீடாய்
அட்டைகளை உருமாற்றியவன்
அந்த சின்ன வீட்டிலும்
தனக்கென ஓரிடம் ஒதுக்கி
என் வழி உறுதியும் செய்து கொண்டான்.

முடிந்துபோன முகபாவனையுடன்
முன்கண் உயர்த்தியவனிடம்……..
யாருக்கு இந்த வீடு? என்றேன்

பணித்திருந்த கண்களோடு
கட்டியணைத்து கொண்ட
அந்த ஆறு வயது கரங்கள் 
உணர்த்த  தொடங்கியிருந்தது 
என் தனிமையின் ஆரம்ப துயரத்தை!

00

Related

கவிதைகள் 1778231585479083875

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item