சமகால இலக்கியக் கருத்தாடல்-2


இன்று (30-03-2014) மாலை, கருந் தூண் இலக்கிய வட்டம் மற்றும் இலக்கியக் குவியம் இணைந்து நடாத்திய இலக்கிய வாசிப்பு அனுபவப் பகிர்வு ஒன்று இணுவிலில் உள்ள கருந் தூண் வட்டத்தின் இடத்தில் 3.30 மணியளவில் ஆரம்பித்து இரவு கவிழும் வரை நடைபெற்றது . இதில் "கொலம்பஸ்ஸின் வரைபடங்கள் "பற்றி கிரிஷாந்தும் ,"சரமகவிகள் "பற்றி அ.பிரியாந்தியும் ,"தாயகம் " இதழைப் பற்றி ஜெ.வினோத்தும் ,இரவின் மழையில்" பற்றி மதிகரனும் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர் .இது புதிய தலைமுறையின் வாசிப்பு நிகழ்வுகளையும் அதன் புரிதல் பற்றிய பார்வைகளையும் மையமாக கொண்டு நடை பெற்றது , இந் நிகழ்வின் இடையில் அவை தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது .இதில் ,எழுத்தாளர் கே .ஆர் .டேவிட் ,சி .ரமேஷ் ,தானா.விஷ்ணு ,வெற்றிச் செல்வி ,சித்தாந்தன் ,சீறிகாந்த லட்சுமி ,வேலணையூர் தாஸ் ,வேல் நந்தன் ,மற்றும் தமிழருவி இதழின் ஆசிரியைகளும் தமது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர் . புதிய பல முகங்களை காணக் கூடியதாய் இருந்தமை மகிழ்ச்சியாய் இருந்தது .தொடர்ந்து கலந்துரையாடல்கள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது .பின் உரையாடல் வீதியில் இறங்கி வீடு வரும் வரை தொடர்ந்தது கூடுதல் சந்தோஷம். கிரிஷாந்

Related

பதிவுகள் 346262217807627031

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item