அவள் அப்படிச் சொன்ன போது -கிரிஷாந்


கண்களைக் கடந்து
போவதற்கு
இனி எந்த நதியுமில்லை
நதிகள் கடந்து போவதற்காக
காத்திருக்கும் நிலங்களும்
என்னிடமில்லை

இனி வானம் திறந்து
கொள்வதாயில்லை
எனதன்பே
இனி மழைக்காலங்கள்
இசைத்தட்டைச் சுழற்றப்
போவதுமில்லை

மீண்டும் பரிசளிக்க முடியாதபடி
பழையதாகிவிட்ட
ஒரு இதயத்தைப் போல
விம்முகிறது இரவு

இந்த விளக்கினை
அணைத்து விடு
இது தான் கடைசி துயரம்

 (கார்த்திகை 2013)

Related

கவிதைகள் 2956747564406728399

Post a Comment

 1. கண்களைக் கடந்து
  போவதற்கு
  இனி எந்த நதியுமில்லை
  நதிகள் கடந்து போவதற்காக
  காத்திருக்கும் நிலங்களும்
  என்னிடமில்லை

  ReplyDelete
 2. அற்புதமான வரிகள்

  ReplyDelete

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item