இடையனின் மிகுதி மொழி. -கோ.நாதன்பனி புல்லின் நுனியிலிருந்து இறங்குவதற்காக
காத்திருக்கும் இடையன் 
சூரிய ஒளி எழும்புகின்ற தருணம் 
ஒற்றைக்காலைத் தூக்கி 
கரங்களை மேலெழுப்பியபடி நமஸ்காரத்துக்கு  
பின்னர் 
சேகுவரா வடிவமான தொப்பியூடே நகந்தார். 

மௌனமாய் பொழுதினை அசை போட்ட ஆடுகளும்
இடையனின்  ஒரு வார்த்தை ஓசை விழுந்ததும் 
எல்லாம் எழுந்து ஒரே குரலில்  கத்தியது.
கொட்டில் கதவு திறப்புக்காய் நீளுகையில் 
மோதுண்டு
அவரின் வழி நடத்தலில் முன் செல்கின்றது. 

ஆடுகளை மேய்ச்சலுக்காய் காடுகளும்,நதிகளும் 
அழைத்துத் திரிகின்ற போது
காடுகளை வேவு பார்க்கும் ஒற்றனென
அவரது அமைதி வாழ்வில் வதை நீடிக்கின்றன.
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளும் படை
சந்தேகத்தில் ஆண் ஆடுகளை
வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கடத்தப்பட்டது 

செருப்புகளற்ற பாத நடையில் 
தூரத்துப் பார்வைக்கான கண்ணாடி அணிந்து 
அருகினில் கண்ணாடி கழற்றிய வயோதிப இடையன் 
ஒவ்வொரு முள்ளின் வலியும் 
இரத்தமும் ,வியர்வையும் கிழிந்த உடலினூடே
உயிர் சிதைக்கும் எலும்புத் தேய்வின் வாழ்வு.

ஆளரவமற்ற வயல்வெளியின் வரப்புகளுடாக 
சூடடிப்பின் வைக்கோல் கத்தைகளுள்
உள்நுழைந்து போயிருந்த மிருங்களிடையே
அவரது மிகுதி மொழி அச்சப்படுத்தியும் ,கத்தியும் 
காலவெளி மழை,வெயில் பொழுதுகளிடம் 
கட்டுப்பாட்டுக்குள் ஒடுங்கி அடங்குகின்றது 


அடித்துக் கொல்லப்பட்ட இடையனின் 
இரத்தம் தோய்ந்திருந்த பிணம் 
சிறுநீரும்,பிழுக்கையும் துவைத்திருந்தது
மரண வாக்கினை மொத்த ஆடுகளும் சப்பித்தீர்மானிக்கின்றது. 
இறைச்சிக்காக அறுபட்டுக் கொண்டியிருக்கின்ற 
ஆடுகளோடு இடையனின் இறைச்சியும் பொதியாகியது.


20140227

Related

கவிதைகள் 8026354712184492966

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

காலக்கோர்வை

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item