காதலற்று தனித்தலைதல் - சுதேசிகன்

வேணிதா
எனது காதலை 
கைக்குட்டையில் அணிந்து வந்திருந்தாள்

பிசுபிசுத்திருந்த நிலவின் வெளிச்சத்தில்
அவளது மென்மையான வெள்ளைக் கரங்களில்
அதை நான் பார்த்தேன்

அது வண்ணங்கள் நிறைந்த 
ரோஜாப் பூக்களின் சாம்ராஜ்யமாகவே இருந்ததுவேணிதாவும்
அடிக்கடி கைக்குட்டையைப் பார்த்தாள்
அவளுக்கு அது
பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பழகும்
வானவில்லின் வண்ணக் கூடாரமாகவே
இருந்திருக்கக் கூடும்

வேணிதா பற்றிய
ஓற்றைப் பேச்சுகளின் போது
குவளையில் சலனமற்றிருக்கும்
திராட்சைப்பழ சாறுபோல
எந்த உதடுகளிலும் ஒட்டிக்கொள்ளாமலே இருந்திருக்கிறேன்

என்னைப் பற்றிய பேச்சகளின் போதும்
அவள்
ஒற்றை நாணயமாகவே இருந்திருக்கிறாள்

இப்படித்தான்
நானும் அவளும் அநேக தருணங்களில்
கைக்குட்டையில் மௌனம் சுமந்தே
காதல் செய்திருக்கிறோம்

மொழிகளற்று நிலவு விலகிய பொழுதொன்றில்
அதே கைக்குட்டையில்
எனது விழிகளின் வெளிச்சத்தை 
அள்ளிச்சென்ற வேணிதா
இன்னும் திரும்பி வரவில்லை

இப்போது நான்
காதலற்று தனித்தலைகிறேன்

Related

கவிதைகள் 4103199584744698946

Post a Comment

emo-but-icon

அஞ்சலி- கவிஞர் செழியன்

தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்

neelkarai@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பட்டியல்

மறுபாதி

மறுபாதி

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு

மயானகாண்டம்-பிந்திய பதிப்பு
item